எம்ஜிஆருக்கு யாரும் ஆலோசனை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை - சசிகலா சொல்வது பொய் என்கிறார் டாக்டர் ஹண்டே
எம்ஜிஆரோடு சசிகலா எந்தக்காலத்திலும் நெருக்கமாக இருந்தது கிடையாது என்றும் எம்ஜிஆருக்கு யாரும் ஆலோசனை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும்
சென்னை: எம்ஜிஆரோடு சசிகலா எந்தக்காலத்திலும் நெருக்கமாக இருந்தது கிடையாது என்று அவருடைய அமைச்சரவையில் பணியாற்றிய முன்னாள் அமைச்சர் ஹெச்.வி.ஹண்டே கூறியுள்ளார். ஒன் இந்தியா தமிழ் இணைய தளத்திற்கு டாக்டர் ஹண்டே அளித்துள்ள சிறப்பு பேட்டியில் எம்ஜிஆர் காலத்து நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதிமுகவினரிடம் தினசரியும் பேசுகிறார் சசிகலா அதை பதிவு செய்து ரிலீஸ் செய்து வருகிறார். கட்சியை கைப்பற்றும் நோக்கத் தோடு பேசி வருகிறார் சசிகலா. அரசியலுக்கு வருவேன் ஜெயலலிதா காலத்தில் இருந்தது போல எம்ஜிஆர் காலத்தில் இருந்தது போல அதிமுகவை கொண்டு வருவோம் என்று சொல்லி வருகிறார் சசிகலா.
அதையெல்லாம் விட அவர் சொன்ன தகவல்தான் அதிமுகவினரை ஆடிப்போக வைத்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு நான் ஆலோசனைகள் கூறி இருக்கிறேன்; அதிமுக தொடர்பாக என்னிடம் எம்.ஜி.ஆர். கருத்துகளை கேட்பார். நான் சொல்லும் கருத்துகளை எம்.ஜி.ஆர். பொறுமையாக கேட்பார். நான் இளம் வயதிலேயே அரசியல் முதிர்ச்சியுடன் செயல்பட்டேன். அதனால்தான் என்னுடைய ஆலோசனையை எம்.ஜிஆர். கேட்டார் என்று கூறியுள்ளார் சசிகலா.

ரீல் சுற்றும் சசிகலா
எம்ஜிஆருக்கே பேசக் கற்றுக்கொடுத்தது நான்தான் என்று கூறி வருகிறார் சசிகலா. இதைக் கேட்க எம்ஜிஆரும் இல்லை ஜெயலலிதாவும் இல்லை என்பதால்தான் இஷ்டத்துக்கு பேசி வருகிறார் சசிகலா. என்னதான் ரீல் சுற்றினாலும் ஒரு நியாய தர்மம் வேண்டாமா என்று எம்ஜிஆர் காலத்து அதிமுகவினர் பேசி வருகின்றனர். சசிகலாவின் பேச்சு அதிமுகவிலும் எம்ஜிஆர் ரசிகர்களிடத்திலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவசியமில்லை
எம்ஜிஆர் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவரும் அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக பதவி வகித்தவருமான டாக்டர் ஹெச்.வி.ஹண்டே, சசிகலாவின் பேச்சு பற்றி கடுமையாக மறுத்துள்ளார். எம்ஜிஆரை பொறுத்தவரை அவருக்கு யாரும் ஆலோசனை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவருக்கு பேச கற்றுக்கொடுக்க வேண்டிய தேவையில்லை என்றும் டாக்டர் ஹண்டே தெரிவித்துள்ளார்.

சசிகலா யார்?
ஒன் இந்தியா தமிழ் இணைய தளத்திற்கு அவர் அளித்துள்ள சிறப்பு பேட்டியில், 1983ஆம் ஆண்டு கடலூர் கூட்டத்தில் ஜெயலலிதா பேசும் போதுதான் நடராஜன் மனைவி சசிகலாவிற்கு அறிமுகம் ஏற்பட்டது. ஜெயலலிதா உடன்தான் சசிகலாவும் நடராஜனும் நெருக்கமாக இருந்தார்களே தவிர எம்ஜிஆரிடம் ஒருபோதும் நெருக்கமாக இருந்தது கிடையாது.

சசிகலா ஆலோசனை அவசியமில்லை
எம்ஜிஆர் அமைச்சரவையில் இருந்த அனைவருக்கும் கட்சி பதவி கொடுத்ததில்லை. சுகாதார அமைச்சராக இருந்த எனக்குத்தான் கட்சியில் பொறுப்பு கொடுக்கப்பட்டது. தலைமை நிலைய செயலாளர். அமைப்புப் செயலாளராக பதவி வகித்தேன். கட்சியின் பொதுச்செயலாளர் எம்ஜிஆருக்கு துணையாக துணை பொதுச்செயலாளராக பதவி வகித்துள்ளேன். எனக்குத் தெரிந்த வரைக்கும் சசிகலா ஒருபோது எம்ஜிஆருக்கு ஆலோசனை சொன்னதில்லை. அதற்கான அவசியமும் ஏற்பட்டதில்லை.

ஜெயலலிதா அரசியல்
1983 வரைக்கும் ஜெயலலிதாவே எம்ஜிஆர் பக்கத்தில் இல்லை. பிறகு எப்படி சசிகலா பேசியிருப்பார். 1983ல்தான் ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசம் நடந்தது. கடலூர் மாநாட்டில் பேசினார் ஜெயலலிதா. அதன் பிறகு கொள்கை பரப்புச் செயலாளர் ஆக்கினார். ராஜ்யசபா சீட் கொடுத்தார். அரசியல் ரீதியாக நெருக்கம் ஏற்பட்டது 1983க்கு பிறகுதான்.

எம்ஜிஆருக்கு ஆலோசனை
சசிகலாவும் நடராஜனும் ஜெயலலிதாவிற்குத்தான் நெருக்கமாக இருந்தார்களே தவிர எம்ஜிஆருக்கு இல்லை. எம்ஜிஆரிடம் ஏதாவது பேசவேண்டும் என்றால் நடராஜன் எனக்குத் தான் போன் செய்வார். எனவே எம்ஜிஆருக்கு ஆலோசனை சசிகலா சொன்னார் என்பது ஏற்புடையது இல்லை.

சசிகலா ஏன் சொல்கிறார்
எம்ஜிஆரோடு சசிகலா எந்தக்காலத்திலும் நெருக்கமாக இருந்தது கிடையாது.எம்ஜிஆருக்கு அரசியல் ரீதியாக ஆலோசனை சொல்ல நாங்கள் இருந்தோம் அப்படி இருக்கும் போது பேச கற்றுக்கொடுத்தாகவும், ஆலோசனை சொன்னதாகவும் சசிகலா ஏன் சொல்கிறார் என்று தெரிஎம்ஜிஆரோடு சசிகலா எந்தக்காலத்திலும் நெருக்கமாக இருந்தது கிடையாது.எம்ஜிஆருக்கு அரசியல் ரீதியாக ஆலோசனை சொல்ல நாங்கள் இருந்தோம் அப்படி இருக்கும் போது பேச கற்றுக்கொடுத்தாகவும், ஆலோசனை சொன்னதாகவும் சசிகலா ஏன் சொல்கிறார் என்று தெரியவில்லை.

பரபரப்புக்காக பேசக்கூடாது
எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா உடன்தான் சசிகலாவும் நடராஜனும் நெருக்கமாக இருந்தனர். ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து ஜெயலலிதாவுக்கு தான் இருவரும் உதவிகள் செய்துவந்தார்கள். ஜெயலலிதாவுக்கு அரசியல் ரீதியான ஆலோசனைகளை சொல்லி வந்தார் நடராஜன். அப்படி இருக்கும் போது
எம்ஜிஆர் என்னுடன் ஆலோசித்தார் என்று சசிகலா இப்போது கூறுவது எல்லாம் சரியானது இல்லை. அவர் இப்போது உயிருடன் இல்லை என்பதாற்காக பரபரப்புக்காக எதை வேண்டுமானாலும் சொல்லக்கூடாது என்றும் ஹண்டே தெரிவித்துள்ளார்.
-
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications