மத்திய அரசின் முடிவை வரவேற்ற சசிகலா.. பணமதிப்பிழப்புக்கு பிறகு ரூ.1600 கோடி சொத்து.. ஞாபகம் இருக்கா?
சென்னை : ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்திருப்பதை வரவேற்றுள்ளார் வி.கே.சசிகலா. பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை பயன்படுத்தி சசிகலா சுமார் 1600 கோடி மதிப்புள்ள சொத்துகளை வாங்கியதாக வருமான வரித்துறை குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் தற்போது பழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்ததோடு ரூ.2,000 நோட்டுகளை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறு வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புதிதாக 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது.

இதுகுறித்து சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்து இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. மேலும், 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கு செப்டம்பர் 30 ஆம் தேதி வரை கால நிர்ணயம் செய்துள்ளதும் மக்களுக்கு பயனளிக்கக்கூடியது.
ஆனால் அதேசமயம் வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை, எவ்வாறு திரும்ப பெறுவது, அதற்கான வழிமுறைகள் என்ன என்பதை ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ள போதும், வங்கி அல்லாத மற்ற இடங்களில் குறிப்பாக டாஸ்மாக், கோ ஆபரேட்டிவ் வங்கிகள், முத்திரை தாள் விற்பனை போன்றவற்றில் எந்த அளவுக்கு 2000 ரூபாய் நோட்டுகளை ஒரு நபரிடமிருந்து பெற முடியும் என்பது குறித்து எந்தவித அறிவிப்பும் வராததால், இதுபோன்ற இடங்களில் எல்லாம் அதிகாரவர்க்கத்தினர் முறைகேடுகளில் ஈடுபட வாய்ப்புள்ளது.
இதில் சரியான நெறிமுறைகளை வகுக்கவில்லை என்றால் மத்திய அரசின் நோக்கமும் நிறைவேறுமா? என்பது கேள்விக்குறியாகிவிடும். எனவே, முறைகேடுகளை முற்றிலும் தடுக்கும் வகையில், வங்கி அல்லாத பிற இடங்களில் 2000 ரூபாய் நோட்டுகளை பெறுவதற்கு தேவையான வழிமுறைகளை அறிவுறுத்த வேண்டும் என மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
2016 நவம்பர் 8ஆம் தேதிக்கு பிறகு, அதாவது பண மதிப்பிழப்பின் மூலம் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்த பிறகு அந்த பணத்தை வைத்து 1 ரிசார்ட், இரண்டு ஷாப்பிங் மால்கள், ஒரு சாப்ட்வேர் கம்பெனி, ஒரு சர்க்கரை ஆலை, ஒரு காகித ஆலை மற்றும் 50 காற்றாலைகள் ஆகிய பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை சசிகலா வாங்கியதாக வருமான வரித்துறை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்கள் என 187 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்பட்டது. அந்த ரெய்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலேயே பண மதிப்பிழப்பிற்கு பிறகு ரூ.1,600 கோடிக்கு சொத்துகளை வாங்கியதாக சசிகலா மீது குற்றம்சாட்டப்பட்டது.
இந்நிலையில், பணமதிப்பிழப்பின்போது அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள், திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், இந்த முடிவை வரவேற்று கருத்து தெரிவித்துள்ளார் சசிகலா. இப்போது, செல்லாத பணத்தை வைத்து சொத்துகளை வாங்கியதாக சசிகலா மீது வருமான வரித்துறை குற்றம்சாட்டிய சம்பவத்தைக் குறிப்பிட்டு பலரும் நினைவுகூர்ந்துள்ளனர்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications