சசிகாந்த் செந்தில், ஜோதிமணி, மாணிக்கம் தாகூர்.. தமிழக காங்கிரஸ்-ன் அடுத்த தலைவர் யார்?
சென்னை: சட்டசபைத் தேர்தலுக்கு பின் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை செல்வப்பெருந்தகை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த பொறுப்புக்கு வருவதற்கு காங்கிரஸ் கட்சியின் பல்வேறு தரப்பினரும் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். அதில் சசிகாந்த் செந்தில், ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் ராகுல் காந்தியின் ஆதரவை பெற தீவிரமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்கு முன் திமுக - காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு நீண்ட இழுபறிக்கு பின்னரே முடிவுக்கு வந்தது. ஒரு வழியாக காங்கிரஸ் கட்சிக்கு 28 சீட் மற்றும் 1 ராஜ்ய சபா என்று தொகுதி பங்கீடு நிறைவடைந்தது. இருப்பினும் திமுக உடனான தொகுதி பங்கீட்டால் ராகுல் காந்தி அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் சோகம் அடைந்த செல்வப்பெருந்தகை உடனடியாக பதவியை ராஜினாமா செய்யப் போவதாக கூறி இருக்கிறார். அதனைதான் காங்கிரஸ் தலைமையும் விரும்பி இருக்கிறது. பின்னர் சட்டசபைத் தேர்தலுக்கு பின் ராஜினாமா கடிதத்தை வழங்கிவிட வேண்டும் என்று செல்வப்பெருந்தகைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை செல்வப்பெருந்தகையும் பதவி விலக உள்ளதாக அறிவித்துவிட்டார்.
செல்வபெருந்தகைக்கு 2027ஆம் ஆண்டு வரை பதவிக் காலம் இருக்கும் போதும் கூட, முன்கூட்டியே பதவியை ராஜினாமா செய்வது ஏன் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. அதற்கு ராகுல் காந்தியே காரணமாக அமைந்துள்ளார். ஒவ்வொரு மாநிலத் தலைமையும் தனக்கு கட்டுப்படுபவராக இருக்க வேண்டும் என்று ராகுல் காந்தி தீவிரமாக இருக்கிறார். அதற்கேற்ப பல்வேறு நியமனங்கள் காங்கிரஸ் கட்சியில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைமைப் பதவியை அடைய வேண்டும் என்று பலரும் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். சிலர் காங்கிரஸ் தலைவர் கார்கே மூலமாக காய் நகர்த்தி வருகின்றனர். குறிப்பாக கார்த்தி சிதம்பரம், செல்லகுமார், விஸ்வநாதன் ஆகியோர் கார்கே மூலமாக பேசி வருகின்றனர். இன்னொரு பக்கம் ராகுல் காந்தி உடனான நெருக்கத்தை பயன்படுத்தி பதவியை அடைய முயற்சிகள் நடக்கிறது.
ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், சசிகாந்த் செந்தில் ஆகியோர் ராகுல் காந்தி மூலமாக பதவியை பிடிக்க முயற்சிக்கிறார்கள். தமிழக காங்கிரஸ் தலைவராக மீண்டும் தலித் நியமனம் செய்ய வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டால், ராகுல் காந்தியின் முதல் சாய்ஸாக சசிகாந்த் செந்தில் இருப்பதாக தெரிகிறது. ஒருவேளை பெண் தலைவரை நியமிக்க ஆலோசிக்கப்பட்டால், ஜோதிமணிக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது.
சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்கு பின் தமிழக காங்கிரஸ் தலைவர் விவகாரம் தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. ஆனால் இம்முறை திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் நிர்வாகிகளுக்கு தமிழக காங்கிரஸ் தலைமை வாய்ப்பு வழங்காது என்றே தெரிகிறது. இதனால் யாருக்கு ஜாக்பாட் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications