சாத்தான்குளம் துயரம் 2 பேர் மரணத்திற்கு நீதி கேட்டு ட்விட்டரில் போர்கொடி #JusticeForJeyarajAndFenix
சாத்தான்குளம் தந்தை மகன் மரணத்திற்கு நீதி வழங்க வேண்டும் என்று ட்விட்டரில் பிரபலங்கள் பதிவிட்டு வருகின்றனர். #JusticeForJeyarajAndFenix என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.
சென்னை: சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் தேசிய அவமானம் என்றும் காவல்துறையினருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கூறியும் ட்விட்டரில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். #JusticeForJeyarajAndFenix என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.திரைப்பட நடிகர்களும், கிரிக்கெட் வீரர்களும் தங்களின் கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர். உலக அளவில் இந்த ஹேஸ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
Recommended Video
சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருந்த ஜெபராஜ்,பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் கடந்த 19ஆம் தேதி போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்ற காவல்துறையினர். அங்கு நடந்த வாக்குவாதத்தில் இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கியதில் உடல்நிலை பாதிக்கப்பட்டு தந்தையும் மகனும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
வியாபாரிகள் மரணம் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. போராட்டங்கள் வெடித்தன. நிவாரணமும், அரசு வேலையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதனை ஏற்ற அரசு குற்றம் செய்த காவல்துறையினரை சஸ்பெண்ட் செய்ததோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணமும், அரசு வேலையும் அறிவித்தது. உயிரிழந்த இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனை முடிந்து நல்லடக்கம் செய்யப்பட்டது.

ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #JusticeForJeyarajAndFenix
இருவரின் மரணத்திற்கு காவல்துறையினருக்கு தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் உயிரிழந்தவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் முன்வைத்து பலரும் #JusticeForJeyarajAndFenix என்ற ஹேஸ்டேக் பதிவிட்டு கருத்துக்களை கூறி வருகின்றனர். திரைப்பட நடிகர்களும், கிரிக்கெட் வீரர்களும் தங்களின் கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர்.

கொடூர சம்பவம்
இந்த கொடூரமான சம்பவம் தேசிய அவமானம் என்று பதிவிட்டுள்ளார் பாலிவுட் பட உலகத்தைச் சேர்ந்த ரிதீஷ் தேஷ்முக்.

மனிதாபிமானமற்ற செயல்
இந்த கோர சம்பவம் மனிதாபிமானற்ற செயலாக உள்ளது. இருவரின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று பதிவிட்டுள்ளார் ஒரு நெட்டிசன்

காவல்நிலையத்தில் சிசிடிவி
காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தவேண்டும் என்பது நீண்ட கோரிக்கை. இது தொடர்பாக நீதிமன்றமே பலமுறை வலியுறுத்தியுள்ளது. இதுபோன்ற லாக் அப் மரணங்களை தடுக்க வேண்டும் என்றால் சிசிடிவி மட்டுமே நிரந்தர தீர்வாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார் ஒருவர். இருவரின் மரணத்திற்கு நீதி கேட்டு ட்விட்டரில் பதிவிட்டு உலக அளவில் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர் நெட்டிசன்கள்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications