சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

13-இல் மறுவாக்கு பதிவு ஏன்?.. 43 இடங்களுக்கு மறுவாக்கு பதிவு இல்லை.. சத்யபிரதசாஹூ பரபரப்பு விளக்கம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Satyapradha sahoo: 43 இடங்களுக்கு மறுவாக்கு பதிவு இல்லை.. சத்யபிரதசாஹூ விளக்கம்- வீடியோ

    சென்னை: தமிழகத்தில் 46 இடங்களில் 43 இடங்களுக்கு மறுவாக்குப் பதிவு இல்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாஹூ தெரிவித்தார்.

    நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி 2-ஆம் கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கோவையிலிருந்து 50 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேனி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

    10 பெட்டிகளில் இருந்த வாக்குப் பதிவு இயந்திரங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டது. எனினும் இந்த விவகாரத்துக்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். 46 வாக்குச் சாவடிகளில் மறுதேர்தல் நடத்த பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்திருந்தார்.

    2 நீதிபதிகளை உச்ச நீதிமன்றத்திற்கு பதவி உயர்த்த மத்திய அரசு எதிர்ப்பு.. கொலிஜியம் விடாப்பிடி! 2 நீதிபதிகளை உச்ச நீதிமன்றத்திற்கு பதவி உயர்த்த மத்திய அரசு எதிர்ப்பு.. கொலிஜியம் விடாப்பிடி!

    பரிந்துரை

    பரிந்துரை

    இந்த நிலையில் தமிழகத்தில் தருமபுரி, திருவள்ளூர், கடலூர், ஈரோடு, தேனி ஆகிய இடங்களில் உள்ள 13 வாக்குச் சாவடிகளுக்கு மறுவாக்குப் பதிவு நடத்தப்படுவதற்கான விவரங்கள் இன்று காலை வெளியானது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாஹூ கூறுகையில் தமிழகத்தில் 13 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப் பதிவு நடைபெறும். திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் மேட்டுப்பாளையம் பள்ளியில் மாதிரி வாக்குப் பதிவு அழிக்கப்படாததால் மறுவாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்துக்கு ஏப்ரல் 29-இல் பரிந்துரைத்தோம்.

    சுதந்திரம்

    சுதந்திரம்

    அதுபோல் தருமபுரியில் வாக்குப் பதிவு அறைக்குள் வேட்பாளர்களின் முகவர்கள், நுழைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்க முடியாத 8 இடங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    பரிந்துரை

    பரிந்துரை

    13 இடங்களில் மறுவாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அண்மையில் பரிந்துரைக்கப்பட்ட 46 இடங்களில் 43 இடங்களில் மறுவாக்குப் பதிவு இல்லை. தேர்தல் ஆணையம் உத்தரவின்பேரிலேயே கோவையிலிருந்து தேனிக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.

    கால அவகாசம்

    கால அவகாசம்

    தேனிக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டது அரசியல் கட்சியினருக்கு தெரியும். தவறு நடந்த 3-லும் ஏற்கெனவே பரிந்துரைத்த 10 இடங்களிலும் மே 19-இல் மறுவாக்கு பதிவாகியுள்ளது. தபால் வாக்குகளை அனுப்புவதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. அரசு ஊழியர்களுக்கான 2,75,664 தபால் வாக்கு 1,85,022 வாக்குகள் வந்துள்ளன, என்றார் சாஹூ.

    English summary
    Satyapradha Sahoo says that there will be no repolling being conducted for 43 booths.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X