செந்தில் பாலாஜிக்கு எதிராக அவதூறு பரப்ப கூடாது.. சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை வைக்க சவுக்கு சங்கருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி இடைக்கால தடை விதித்துள்ளார்.
சவுக்கு சங்கர் செந்தில் பாலாஜிக்கு எதிராக சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் சில குற்றச்சாட்டுகளை முன் வைத்து இருந்தார். போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது அவர் சில முறைகேடுகளை செய்தததாக புகார் வைத்தார்.
அதேபோல் தற்போது மின்சார துறை அமைச்சராக அவர் சில குற்றங்களை, மோசடிகளை செய்துள்ளதாகவும் சவுக்கு சங்கர் தனது குற்றச்சாட்டில் குறிப்பிட்டு இருந்தார்.

வீடியோ
இது தொடர்பாக சில வீடியோக்களில் சவுக்கு சங்கர் பேசி இருந்தார். அமைச்சர் முறைகேடுகளை செய்து இருக்கிறார். அவர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜி சிறை செல்வார். அவர் ஊழல் செய்துள்ளார் என்று புகார்களை அடுக்கி சவுக்கு சங்கர் வீடியோ வெளியிட்டு இருந்தார். வேறு ஊடகங்களில் அவர் அளித்த பேட்டியிலும் இதே குற்றச்சாட்டை வைத்தார்.

வழக்கு
இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கருக்கு எதிராக சமீபத்தில் மான நஷ்ட வழக்கு தொடுத்தார். சவுக்கு சங்கர் தன் மீது அவதூறு குற்றச்சாட்டுகள் சுமத்துவதை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஏற்கனவே பகிர்ந்த வலைதள பதிவுகளை நீக்கவும் கோரிக்கை வைத்தார். அதோடு அவர் தனக்கு எதிராக பேசிய வீடியோக்களை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது.

விசாரணை
இந்த வழக்கில் சவுக்கு சங்கர் என் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டார். சவுக்கு சங்கர் இதனால் எனக்கு ரூ.2 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி கோரிக்கை விடுத்து இருந்தார். இந்த விசாரணை முடிந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த இடைக்கால மனுக்கள் மீது மதியம் 2:15 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி இந்த வழக்கில் இன்று உத்தரவுகளை பிறப்பித்தார்.

தீர்ப்பு
அந்த உத்தரவில், செந்தில் பாலாஜிக்கு எதிராக அவதூறு செய்ய கூடாது என்று சவுக்கு சங்கருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை வைக்க கூடாது. அவருக்கு எதிராக வெளியிட்ட அவதூறுகளை நீக்க வேண்டும். சமூக வலைதள போஸ்டுகளை நீக்க வேண்டும்., வீடியோக்களை நீக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை வைக்க சவுக்கு சங்கருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி இடைக்கால தடை விதித்துள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications