சிறையில் சவுக்கு சங்கர்.. சென்னை வீடு, அலுவலகத்தில் தேனி போலீஸ் திடீர் சோதனை.. பின்னணி என்ன?
சென்னை: பெண் போலீசை அவதூறாக பேசிய வழக்கில் கைதாகி உள்ள யுடியூபர் சவுக்கு சங்கரின் சென்னை வீடு மற்றும் அலுவலகத்தில் தேனி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சவுக்கு சங்கர் மீது ஏற்கனவே தேனி போலீசார் கஞ்சா வழக்குப்பதிவு செய்த நிலையில் இந்த சோதனை என்பது நடந்து வருகிறது.
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தொடர்ந்து தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். மேலும் முதல்வர் ஸ்டாலின், திமுக அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயரதிகாரிகளை கடுமையாக விமர்சனம் செய்வதை வாடிக்கையாக வைத்திருந்தார்.

இந்நிலையில் தான் பெண் காவலர்கள் குறித்து சமீபத்தில் அவர் கூறிய தகவல் சர்ச்சையானது. பெண் காவலர்கள் பற்றி அவதூறு பரப்பும் வகையில் அவரது கருத்து இருந்ததாக எதிர்ப்பு கிளம்பியது. இதுதொடர்பாக புகாரில் கோவை சைபர் க்ரைம் போலீசார் கடந்த 4ம் தேதி தேனியில் வைத்து சவுக்கு சங்கரை கைது செய்தனர். அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும் தேனி தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கைது செய்தபோது போலீசார் அவரது காரில் சோதனையிட்டனர். அப்போது காரில் 400 கிராம் கஞ்சா சிக்கியது. கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தேனி பழனிசெட்டிப்பட்டி போலீசார் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல் சவுக்கு சங்கரின் டிரைவர் மற்றும் உதவியாளர் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களும் கைது செய்யப்பட்டனர்.
சவுக்கு சங்கர் மீது புதிதாக ஒரு வழக்கு.. பெண் எஸ்ஐ அளித்த புகாரில் சேலம் போலீஸ் நடவடிக்கை
இந்நிலையில் தான் சென்னையில் உள்ள சவுக்கு சங்கரின் வீடு மற்றும் அலுவலகத்தில் இன்று தேனி போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள வீடு, தியாகராயநகரில் உள்ள அலுவலகத்தில் நுழைந்து தேனி போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சவுக்கு சங்கர் மீது தேனி பழனிசெட்டிப்பட்டி போலீசார் கஞ்சா வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் இந்த சோதனை என்பது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications