ஜீவனாம்சம் கேட்ட பெண்களுக்கு! விடாமல் செக் வைத்த உச்ச நீதிமன்றம்! நாட்டை உலுக்கிய விவாகரத்து கேஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று உச்ச நீதிமன்றத்தில் நடந்த விவாகரத்து வழக்கு ஒன்றில் பெண் ஒருவர் கேட்ட ஜீவனாம்சம் தொகை பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த பெண்ணின் கோரிக்கைகளை கேட்டு அதிர்ச்சி அடைந்த உச்ச நீதிமன்றம் அவருக்கு அறிவுரைகளை வழங்கியது கவனம் பெற்றது. இந்த வழக்கு மட்டுமன்றி அடுத்தடுத்து பல முக்கிய விவாகரத்து வழக்குகளில் இதேபோன்ற தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ளது.

உயர்நீதிமன்றத்தின் வாதங்கள் மற்றும் ஜீவனாம்சம் தொடர்பான வழக்குகள்

நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு, விவாகரத்துக்குப் பிறகு மும்பையில் ஒரு வீடு மற்றும் ரூ. 12 கோடி ஜீவனாம்சம் கோரிய பெண்ணுக்கு எதிராக இந்த அறிவுரையை வெளியிட்டது. இப்பெண் திருமணமான 18 மாதங்களில் விவாகரத்து கோரியிருந்தார்.

bangalore Court

அப்பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த தலைமை நீதிபதி, "நீங்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிபவர். முதுகலை வணிக நிர்வாகம் (MBA) முடித்துள்ளீர்கள். பெங்களூர் மற்றும் ஹைதராபாத்தில் வேலை வாய்ப்புகள் உள்ளன. ஏன் வேலைக்குச் செல்லக்கூடாது?" என்று கேள்வி எழுப்பினார்.

நீதிபதி கவாய் அவர்கள் மேலும், "18 மாதங்கள் மட்டுமே திருமண வாழ்க்கை வாழ்ந்த நிலையில், இப்போது BMW கார் கூட கேட்கிறீர்களா?" என்று வினவினார். இப்பெண் தனது கணவர் பணக்காரர் என்றும், தான் மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறி திருமணத்தை ரத்து செய்ய விரும்புவதாகவும் தெரிவித்தார்.

நீதிபதி கவாய் இதுகுறித்து கூறுகையில், "எந்தவித தடையும் இல்லாத ஒரு பிளாட் உங்களுக்கு இலவசமாக வேண்டும், கார் வேண்டும் என்றெல்லாம் கேட்கிறீர்கள். இது எப்படி சரியாகும். நீங்கள் நன்றாகப் படித்தும், சொந்த விருப்பத்தின் பேரில் வேலை செய்யாமல் இருக்கிறீர்கள்" என்றார்.

டெல்லி நீதிமன்றம் இதேபோன்ற கருத்தை வெளியிட்டு உள்ளது

இதேபோன்ற ஒரு வழக்கில், தில்லி உயர் நீதிமன்றம் இந்த ஆண்டு மார்ச் மாதம் ஒரு கருத்தை வெளியிட்டது. அதன்படி வருமானம் ஈட்டும் திறன் கொண்ட பெண்கள் கணவர்களிடம் இடைக்கால ஜீவனாம்சம் கோரக்கூடாது என தெரிவிக்கப்பட்டது. மேலும், சட்டம் சோம்பேறித்தனத்தை ஊக்குவிக்கவில்லை என்றும் கூறியிருந்தது.

நீதிபதி சந்திர தாரி சிங் மார்ச் 19ஆம் தேதி அளித்த தீர்ப்பில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 125-வது பிரிவு, "மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கான ஜீவனாம்சம்" கணவன்-மனைவிக்கிடையே சமத்துவத்தை நிலைநாட்டவும், பாதுகாப்பு வழங்கவும் உருவாக்கப்பட்டது. ஆனால், "சோம்பேறித்தனத்தை" ஊக்குவிக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

உச்ச நீதிமன்றம் ரூல்ஸ்

மனைவிகள் கேட்கும் ஜீவனாம்சத் தொகையை நிர்ணயிக்க உச்ச நீதிமன்றம் 8 அம்ச பார்முலாவை வகுத்துள்ளது. நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் பிரசன்னா பி வரலே ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச், சமீபத்தில் இந்து தம்பதிகள் சம்பந்தப்பட்ட விவாகரத்து வழக்கில் இறுதி ஜீவனாம்சத் தொகையை தீர்மானிப்பதற்கான வழிகாட்டுதல்களை வகுத்தது.

ஜீவனாம்சம் குறித்து முடிவெடுக்கும் போது கருத்தில் கொள்ள வேண்டிய 8 காரணிகளை உச்ச நீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது:

இரண்டு தரப்பின் பொருளாதார நிலை, சமூக மற்றும் நிதி நிலைமை மனைவி மற்றும் சார்ந்திருக்கும் குழந்தைகளின் தேவைகள் என்னென்ன. இரண்டு தரப்பின் தனிப்பட்ட தகுதிகள் மற்றும் அவர்கள் பார்க்கும் வேலை. விண்ணப்பதாரரின் வருமானம் அல்லது சொத்துக்கள். திருமண வீட்டில் மனைவி அனுபவிக்கும் வாழ்க்கைத் தரம். குடும்பப் பொறுப்புகளுக்காக ஆகும் செலவு வேலை செய்யாத மனைவிக்கு ஆகும் தினசரி செலவுகள். கணவரின் நிதித் திறன், அவரது வருமானம், பராமரிப்புக் கடமைகள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றை அடிப்படையாக் வைத்து ஜீவனாம்சம் குறித்து முடிவெடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் அந்த பெண்ணின் மனு கவனம் பெற்று வருகிறது. இந்த வழக்கில் கணவர் சார்பாக வைக்கப்பட்ட வாதத்தில், நாங்கள் திருமணம் செய்தே சில மாதம்தான் ஆகிறது. அதற்குள் அவர் விவாகரத்து கேட்கிறார். நாங்கள் சேர்ந்து ஒன்றாக கூட வாழவில்லை. இதில் பெரும்பாலான நாட்கள் அவர் தனது அம்மா வீட்டில்தான் இருந்தார். இப்படிப்பட்ட நிலையில் எனது மனைவிக்கு இவ்வளவு லட்சங்களை கொடுக்க முடியாது என்று கணவர் கூறி உள்ளார்.

கர்நாடகா சம்பவம்

கர்நாடகாவில் கணவருக்கு விவாகரத்து தர பெண் ஒருவர் கேட்ட ஜீவனாம்சம் தொகை மக்களிடையே கவனத்தை ஈர்த்து உள்ளது. பெங்களூர் உயர் நீதிமன்றத்தில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. அங்கே வழக்கு ஒன்றில்.. பெண் ஒருவர் ரூ. 2 கோடி மாதம் மாதம் கேட்டு உள்ளார். அதாவது ஒவ்வொரு மாதமும் 2 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் ஒரு டைம் செட்டில்மென்ட் ரூ. 500 கோடி கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாராம்.

இதில் கணவர் தரப்பு வழக்கறிஞர் வாதம் வைக்கையில்.. பெண் தரப்பு அரசியல் பின்புலம் கொண்டவர்கள். அதனால் கணவர் தரப்பை மிரட்டுகிறார்கள். அரசியல் பவரை பயன்படுத்தி.. அதிக அளவு இழப்பீடு அல்லது ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று நெருக்கடி கொடுக்கிறார்கள் என்று வாதம் வைத்துள்ளார்.

இதை கேட்ட நீதிபதி ஒருவர்.. ஒரு மாதத்திற்கு 2 கோடி ரூபாய்க்கு என்ன செலவு செய்வார்.. இது வினோதமாக இருக்கிறதே.. இதை எல்லாம் வழங்க முடியாது என்று கூறி உள்ளார். அந்த பெண்ணுக்கு 2 கோடி ரூபாய் ஜீவனாம்சம் தொகை எல்லாம் வழங்க முடியாது என்று நீதிபதி மறுத்துள்ள நிலையில் தொகையை குறைத்து மனுவில் மாற்றங்களை செய்யும்படி உத்தரவிட்டுள்ளார்.

40 லட்சம் கேட்ட பெண்

திருமணம் ஆகி வெறும் ஒரு மாதத்தில் 40 லட்சம் ரூபாய் கேட்டு அந்த பெண் தாக்கல் செய்த மனு தற்போது வைரலாகி உள்ளது. இந்த வழக்கில் கணவர் சார்பாக வைக்கப்பட்ட வாதத்தில், நாங்கள் திருமணம் செய்தே ஒரு மாதம்தான் ஆகிறது. அதற்குள் அவர் விவாகரத்து கேட்கிறார். நாங்கள் சேர்ந்து ஒன்றாக கூட வாழவில்லை. இதில் பெரும்பாலான நாட்கள் அவர் தனது அம்மா வீட்டில்தான் இருந்தார். இப்படிப்பட்ட நிலையில் எனது மனைவிக்கு ரூ. 30 லட்சத்திற்கு மேல் கொடுக்க முடியாது.

நாங்கள் ரூ.30 லட்சம் தர தயாராக உள்ளோம் , ஆனால் ரூ.40 லட்சம் தர வேண்டும் என்று வற்புறுத்துகிறார். மனைவி சார்பில் வெறுமனே அதை வாங்க முடியாது என்று வாதம் வைத்தார் .

இதற்கு இரண்டு பெஞ்ச் நீதிபதி.. சமரசம் பேசப்பட்டதா என்ற கேள்வி எழுப்பினர். அதற்கு 15 லட்சம் வரை கொடுக்க கணவர் சார்பாக பேசப்பட்டது. அதன்பின் 30 லட்சம் ரூபாய் வரை தர கணவர் ஒப்புக்கொண்டார். ஆனால் மனைவி 40 லட்சம் ரூபாயில் இருந்து இறங்கி வரவே இல்லை. என்று கணவர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கூறினார். இதற்கு நீதிபதிகள் மனைவி தரப்பு இறங்கி வரவே முடியாது என்று கூறினால்.. என்ன அர்த்தம்.. கணவர் தரப்பு இறங்கி வரும் போது.. மனைவி தரப்பு இறங்கி வர வேண்டுமே.. மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்று கூறி வழக்கை தள்ளி வைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+