Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லி அஸ்திரம்.. ஸ்டாலினும் நெருக்கடி.. அதிமுக மாஜிக்கு வைக்கப்பட்ட "திரி சூல" செக்.. கேம் ஓவரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்தளத்திற்கு இரண்டு பக்கம் இடி என்றால்.. விஜயபாஸ்கருக்கு எல்லா பக்கமும் இடி என்றுதான் கூற வேண்டும். ஒரு பக்கம் தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை காரணமாக பிரஷர் அதிகரித்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் டெல்லியில் இருந்தும் விஜயபாஸ்கருக்கு பிரஷர் அதிகரித்து உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் அதிகம் கவனிக்கப்பட்ட அமைச்சர்களில் விஜயபாஸ்கரும் ஒருவர். கொரோனா அப்டேட் காரணமாக தினமும் ஊடகம் முன் தோன்றிய அவருக்கு எதிராக வேறு சில புகார்களும் இருந்தன. டாக்டர்கள் போராட்டம், குட்கா வழக்கு என்று வேறு சில புகார்களும் கூட வைக்கப்பட்டு இருந்தன.

முக்கியமாக குட்கா வழக்கில் அப்போதே சிபிஐ தீவிரமாக இவர் மீது கவனம் செலுத்தி வந்தது. அப்போது இவர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டு, ரெய்டின் போது வீட்டில் இருந்து சீட்டு ஒன்று அவரின் உதவியாளர் மூலம் வெளியே தூக்கி வீசப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அந்த ரெய்டு காட்சிகள் தமிழ்நாடு முழுக்க மட்டுமின்றி தேசிய அளவில் கவனம் பெற்றன.

என்ன நஎன்ன நடந்தது? டந்தது?

என்ன நஎன்ன நடந்தது? டந்தது?

அதன்பின் திமுக ஆட்சிக்கு வந்து சில மாதங்களில் சி விஜயபாஸ்கர் வீட்டில் காலை லஞ்ச ஒழிப்புத்துறை திடீரென ரெய்டு நடத்தியது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்தது. சென்னை வீடு உள்பட 43 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடந்தது. கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2021 ஏப்ரல் மாதம் வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இவர் மீது வழக்கு பதியப்பட்டது. வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் சொத்து குவித்ததாக வழக்கு பதியப்பட்டது. சி.விஜயபாஸ்கர் மனைவி மீதும் வழக்கு பதியப்பட்டது. இந்த நிலையில் அவர் வீட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன் மீண்டும் ரெய்டு நடத்தப்பட்டு உள்ளது.

 ரெய்டு ரெய்டு

ரெய்டு ரெய்டு

ஊத்துக்கோட்டையில் கட்டப்பட்டு வந்த வேல்ஸ் மருத்துவ கல்லூரிக்கு, அது கட்டப்படும் முன்பே முழுமையாக செயல்படும் சான்றை கொடுத்துள்ளதாக இவர் மீது புகார் வகுக்கப்பட்டு உள்ளது. இதில் ஊழல் நடைபெற்று உள்ளதாக 13 இடங்களில் ரெய்டு நடந்தது. இந்த வழக்கில் எப்போது வேண்டுமானாலும் விஜயபாஸ்கர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் மத்திய அரசின் குட்கா வழக்கிலும் அவர் சிக்கி உள்ளார். மத்திய அரசும், மாநில அரசும் மாறி மாறி செக் வைப்பதால் விஜயபாஸ்கர் கோபத்தில் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அனுமதி

அனுமதி

குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணாவிற்கு எதிராக சிபிஐ கடிதம் எழுதியுள்ளது. 12 பேர் மீது வழக்கு பதிவு செய்ய தமிழ்நாடு அரசிடம் அனுமதி கேட்டு சிபிஐ கடிதம் எழுதியுள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசும் அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில்தான் நேற்று குட்கா வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில் விஜயபாஸ்கர் பெயரும் இடம்பெற்று உள்ளது. ஏற்கனவே 2019க்கு முன் இதில் ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. நேற்று முதல்நாள்தான் டெல்லி சென்ற விஜயபாஸ்கர் பாஜக தலைவர்களை சந்தித்தார்.

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு வழக்கு தொடர்பாக ஆதரவு பெற இவர் பாஜக தலைவர்களை சந்தித்ததாக கூறப்பட்டது. அவர் மத்திய அமைச்சர்களுடனும் ஆலோசனை செய்தார். டெல்லியில் இருந்து திரும்பி வந்த விஜயபாஸ்கருக்கு நேற்று இரவோடு இரவாக ஷாக் செய்தி வந்துள்ளது. டெல்லியில் இருந்து அவர் திரும்பி வந்த கையோடு தனக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்பதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டார். இது போக மேலும் முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா மரண விசாரணையில் அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி விஜயபாஸ்கரை விசாரிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஜெயலலிதா மரணம் அடைந்த போது விஜயபாஸ்கர்தான் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். இவர்தான் ஜெயலலிதா சிகிச்சை செய்த அப்போலோ மருத்துவமனையில் அடிக்கடி இருந்தார். இதனால் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளார். அறிக்கையிலும் அவருக்கு எதிராக விசாரிக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இப்படி வரிசையாக குட்கா வழக்கு.. லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு.. ஜெயலலிதா மரண விசாரணை என்று ஆளும் தரப்பு 3 விதமான விசாரணைகளை விஜயபாஸ்கர் மீது ஏவி உள்ளது அவருக்கு நெருக்கமானவர்கள் இடையே பதற்றத்தையும, விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+