இது லிஸ்ட்டிலேயே இல்லையே.. அக்டோபர் மாதத்தில் பள்ளி மாணவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்
சென்னை: பள்ளியில் படிக்கும் மாணவர்கள், காலண்டரை தூக்கி விடுமுறை ஒவ்வொரு மாதமும் எத்தனை இருக்கும் என்று எண்ணி பார்ப்பது வழக்கம். அந்த வகையில் அக்டோபர் மாதம் ஏராளமான நாட்கள் விடுமுறையாகும். எனவே அவர்களுக்கு அதிக நாட்கள் விடுமுறை கிடைக்கப் போவது உறுதியாகி உள்ளது. காலாண்டு தேர்வு விடுமுறை, ஆயுதபூஜை, தீபாவளி, சனி மற்றும் ஞாயிறு என சுமார் 15 நாட்கள் வரை இந்த மாதம் விடுமுறை கிடைக்க போகிறதாம்.
பொதுவாக பள்ளியில் படிக்கும் சில மாணவர்கள் லீவு விட்டாலே கொண்டாடி தீர்ப்பார்கள். மழை காலங்களில் வருண பகவானையும், மாவட்ட கலெக்டரையும் லீவு விட வைக்க வழிவகை செய்யுமாறு கேட்டுக்கொண்டே இருப்பார்கள்.. கடந்த ஆண்டு எல்லாம், செங்கல்பட்டு கலெக்டருக்கும், திருவள்ளூர் கலெக்டருக்கும் பள்ளிக்கு லீவு விடச்சொல்லி கேட்டு ட்விட்டரில் அடித்த மெசேஜ்களின் லிஸ்ட் மிகப்பெரியது.

அதிலும் குறிப்பாக சென்னைக்கு லீவுவிட்டு விட்டு, செங்கல்பட்டுக்கும், திருவள்ளூருக்கும் லீவு இல்லை என்ற அறிவித்த காலத்தில் பெற்றோர்களுமே மாணவர்களுடன் சேர்ந்து கொந்தளித்தார்கள் என்பது தனி கதை.. இதுஒருபுறம் எனில், திருவாரூர், திருச்சி, விருதுநகர், கன்னியாகுமரி என தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் , கலெக்டரை லீவு விடச்சொல்லி அன்பு தொல்லைகள் அதிகம் கொடுத்தார்கள். கடந்த ஆண்டு மட்டும் தான் நடந்ததா என்றால், நிச்சயம் இல்லை.. அதற்கு முன்பும் நடந்துள்ளது. பள்ளிக்கு கடைசி நேரத்தில் விடப்பபடும் விடுமுறையை மாணவர்கள் கொண்டாடுவது இன்று நேற்று அல்ல... கடந்த 25 வருடங்களாக தொடர்கிறது.
சரி விஷயத்திற்கு வருவோம். பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபரில் விடுமுறை மிக அதிகமாகவே இருக்கும். ஆயுத பூஜை, விஜயதசமி என நவராத்திரி காரணமாக வடமாநிலங்களில் முழுமையாக அப்போது தான் காலாண்டு விடுமுறை விடப்படும். தமிழ்நாட்டில் காலாண்டு விடுமுறை அதற்கு முன்பே ஆரம்பித்துவிடும். அதாவது செப்டம்பர் இறுதி வாரம் மற்றும் அக்டோபர் முதல் வாரம் விடுமுறையாக இருக்கும். அந்த வகையில் அக்டோபர் முதல் வாரம் காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. அக்டோபர் 1 முதல் ஆறாம் தேதி வரை விடுமுறையாகும். அடுத்தாக அக்டோபர் 11, 12, 13 ஆகிய நாட்கள் ஆயுதபூஜை, விஜயதசமி காரணமாக தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருகிறது. அதற்கு அடுத்த வாரம் 19, 20 ஆகிய நாட்கள் சனி மற்றும் ஞாயிறு வருகிறது.
அக்டோபர் மாசம் பரிதாபங்கள் 🤣 இதுல பசங்களுக்கு காலாண்டு லீவ் வேற 🤣 pic.twitter.com/HyADGDJc43
— மெட்ராஸ் பையன் (@madraspaiyan_) October 1, 2024
இதேபோல் அக்டோபர் 26, 27 ஆகிய நாட்கள் சனி, ஞாயிறு வருகிறது. இதற்கு அடுத்தபடியாக தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ம் தேதியாகும். அன்றும் விடுமுறையாகும். பெரும்பாலான பள்ளிகள் தீபாவளிக்கு முதல் நாள் விடுமுறை விடுவதை வழக்கமாக வைத்துள்ளன. இதேபோல் தமிழகத்தில் தீபாளிக்கு மறு நாள் விடுமுறை விடுவதையும் வழக்கமாக வைத்துள்ளன. எனவே அக்டோபர் 30 (லீவு விட வாய்ப்பு ), அக்டோபர் 31 (லீவு), நவம்பர் 1 ( லீவு ), நவம்பர் 2 (சனி), நவம்பர் 4 (ஞாயிறு), ஆகிய நாட்களில் குறைந்தது நாட்கள் விடுமுறை உறுதியாகும்.
எனவே அக்டோபர் 15 நாட்கள் வரையில் லீவு கிடைக்க வாய்ப்பு உள்ளது. எக்ஸ்ட்ராவாக நவம்பரில் முதல் மூன்று நாட்களும் விடுமுறை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதனால் மாணவர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இது இல்லாமல், இந்த மாதம் மழை பெய்யும் மாதம் என்பதால், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்க வாய்ப்பு உள்ளது. குறிப்பாக தீபாவளி நெருங்கும் சமயத்தில் கனமழைக்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே மழை காரணமாகவும் லீவு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. இது மாணவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications