சென்னையில் இன்று பள்ளிகள் செயல்படும்! மாணவர்களுக்கு டைம் டேபிள் சர்ப்ரைஸ்! எந்த நாள் பீரியட் பாருங்க
சென்னை: டிட்வா புயல் காரணமாக, தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு டிச. 2, 3, 4 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இன்று மழை சற்று ஓய்ந்திருந்ததால், பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் இன்று பள்ளிகள் செயல்படும் என்று தமிழக கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் இன்று, டிசம்பர் 6, வழக்கம்போல் செயல்படும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
தற்போது தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது.. அவ்வப்போது புயல் பற்றின அறிவிப்புகளும் வெளியாகி கிலியை தந்து கொண்டிருக்கின்றன..

டிட்வா புயல்
கடந்த சில தினங்களுக்கு முன்பு, இலங்கை அருகே உருவான டிட்வா புயலானது, அந்த நாட்டையே கடுமையாக தாக்கியது. சூறைக்காற்று, ஆலங்கட்டி மழை, தொடர்ந்த கனமழை காரணமாக இலங்கை முழுவதும் வெள்ளப்பேரிடர் ஏற்பட்டது.
இந்த பேரிடரில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல வீடுகள், சாலைகள், விவசாய நிலங்கள் உள்ளிட்ட பல உட்கட்டமைப்புகள் பெரிதும் சேதமடைந்தன.
சென்னையில் மழை
இலங்கையை தாக்கிய இந்த புயலானது, தமிழக கடற்கரையை ஒட்டி வட தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளுக்கு நகர்ந்தது. இதன் தாக்கத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு டெல்டா மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது.
குறிப்பாக சென்னையில் பல பகுதிகளில் மீண்டும் மழைநீர் தேங்கியது. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள்.. சில இடங்களில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
மழை மற்றும் வெள்ள சூழ்நிலை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சென்னை மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 2, 3, 4 ஆகிய மூன்று நாட்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் மாணவர்களின் பாடத்திட்டம் பாதிக்கப்படும் நிலைமையும் உருவானது..
பள்ளிகள் இன்று செயல்படும்
எனவேதான், இதனை சமன் செய்யும் வகையில் சனிக்கிழமைகளில் பள்ளிகளை இயங்க வைக்க கல்வித்துறை முடிவு எடுத்துள்ளது. அதன்படி, டிசம்பர் 2ம் தேதி வழங்கப்பட்ட விடுமுறைக்கு பதிலாக இன்று அதாவது சனிக்கிழமை, டிசம்பர் 6-ம் தேதி சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் வழக்கமான தொடக்க நேரத்தில் பள்ளிக்கு வர வேண்டும் என்றும், வழக்கம்போலவே பாடநேரம் நடைபெறும் என்றும் கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பிற விடுமுறைகளுக்கும் மாற்று நாட்கள் அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
டைம்டேபிள் இதுதான்
இதுகுறித்து சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "மழை காரணமாக நடப்பு வாரத்தில் தொடர்ந்து மூன்று நாள்கள் விடுமுறை விடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், பள்ளி மாணவ மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், டிசம்பர் 2ம் தேதி மழை விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் டிச. 6ம் தேதி சனிக்கிழமை பள்ளிகள் வழக்கம் போல செயல்படும்.. புதன்கிழமை பாடவேளையை பின்பற்றி பள்ளிகள் இன்று செயல்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது மாணவர், பெற்றோர்களின் கவனத்தை பெற்று வருகிறது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications