தமிழகத்தில் எல்கேஜி முதல் 5ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று திறப்பு! ஷூ,சாக்ஸ் வாங்க அலைமோதிய கூட்டம்
சென்னை: தமிழகத்தில் இன்று எல்கேஜி முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு இன்றைய தினம் பள்ளிகள் திறக்கப்படுகிறது.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது.

இதனால் பள்ளிகள் திறப்பு தள்ளி போக வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. அதன்படி ஜூன் 7ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என சொல்லப்பட்டது. எனினும் கோடை வெப்பம் 104, 106, 108 டிகிரி சுட்டெரித்தது. இதனால் மேலும் பள்ளிகள் திறப்பு தாமதமாகும் என சொல்லப்பட்டது.
அதன்படி முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் இரு வேறு நாட்களில் சிறிய வகுப்புகள், பெரிய வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கலாம் என ஆலோசனை வழங்கப்பட்டது. அதாவது 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 12ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. எல்கேஜி முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இன்று வகுப்புகள் தொடங்குகின்றன. இது தவிர எல்கேஜி, யுகேஜி படிக்கும் குழந்தைகளுக்கும் இன்று வகுப்புகள் தொடங்கப்படுகிறது. சிறு குழந்தைகளுக்கு வகுப்புகள் தொடங்குவதால் பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

மாநகராட்சி, தனியார் பள்ளிகள், மழலையர் பள்ளிகளுக்கு முதல்முதலாக வரும் குழந்தைகளை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதுவரை பெற்றோர் அரவணைப்பில் இருந்து குழந்தைகள் அவர்களை பிரிந்து பள்ளிக்கு வருவதால் அழுவதற்கு வாய்ப்புள்ளது என்பதால் அவர்களை அன்போடும் பாசத்தோடும் ஆசிரியர்கள் வரவேற்க தயார்படுத்தப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பால் புதிய சீருடை, ஷூ, பெல்ட், புத்தக பை, லஞ்ச் பாக்ஸ், ஸ்நாக்ஸ் பாக்ஸ், வாட்டர் பாட்டில், பென்சில், பென்சில் பாக்ஸ், பவுச் உள்ளிட்டவற்றை வாங்க நேற்றைய தினமே மக்கள் பல்வேறு பெரிய கடைகளில் அலைமோதினர். இதனால் பெரிய பல்பொருள் அங்காடிகளில் ஒரு பொருளுக்கு பில் போடுவதற்கு கூட நிறைய கூட்டம் இருந்தது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications