இந்த அறிகுறிகள் இருந்தால் கவனமாக இருங்க.. நீர்ச்சத்து குறைந்தால் உடல் காட்டும் ரியாக்‌ஷன் இதுதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோடை காலத்தில் உடலில் இருந்து அதிகப்படியான வியர்வை வெளியேறும். இதனால் உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்படும். நீர்ச்சத்து இழப்பை ஈடு செய்ய நீர்ச்சத்து நிறைந்த ஆகாரங்களை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டியது அவசியம். நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை இங்கே பார்க்கலாம்.

கோடைக்காலம் துவங்கிவிட்டது. வழக்காமாக கோடைக்காலத்தில் வெப்பம் வாட்டி வதைக்கும் என்றாலும் நடப்பு ஆண்டு வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. வழக்கமாக மே மாதத்தில் வெயிலின் உக்கிரம் தொடங்கும்.

ஆனால், இந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது. கடுமையான வெயிலால் மக்கள் பகல் நேரங்களில் வெளியில் சென்று விட்டு வருவதற்குள் நொந்து போய்விடுகின்றனர்.

அதுவும் நண்பகல் வேளைகளில் எல்லாம் வெளியில் சென்றால் இளநீர், தர்பூசணி என கடைகளை நோக்கி ஒட வேண்டியுள்ளது. கோடை காலத்தில் உடலில் இருந்து அதிகப்படியான வியர்வை வெளியேறும். இதனால் உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்படும். நீர்ச்சத்து இழப்பை ஈடு செய்ய நீர்ச்சத்து நிறைந்த ஆகாரங்களை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

 Scorching Heat? These are some of the signs of dehydration in the body

ஏனெனில், உடலில் நீர்ச்சத்தின் அளவை சரியாக பராமரிக்காவிட்டால் தலைவலி, பசியின்மை, சோர்வு, தசை பிடிப்பு, ரத்த அழுத்த குறைவு, இதய துடிப்பு அதிகரிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும். பொதுவாக நமது உடலில் 50 முதல் 60 சதவீதம் வரையிலும் நீர் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே..

கோடைக்காலங்களில் அதிகப்படியான வியர்வை வெளியேறுவதால் நமது உடல் உள்ளுறுப்புகள் இயங்குவதற்கு தேவையான நீர்சசத்து குறைந்துவிடும். இதுவே நீர்ச்சத்து இழப்பு என்று சொல்லப்படுகிறது. நீர்ச்சத்து ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

நீர்ச்சத்து ஏற்படுவதற்கான காரணங்கள்:

* வயிற்றுப்போக்கு
* வாந்தி
*அதிகப்படியான வியர்வை
* அளவுக்கதிமாக சிறுநீர் கழிப்பது, சில மருத்துவ பாதிப்புகள் அல்லது உடல் நலம் பாதிப்புகளால் இது ஏற்படும்.
* காய்ச்சல்
* போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது

 Scorching Heat? These are some of the signs of dehydration in the body

நீர்ச்சத்து குறைந்து இருப்பதை காட்டும் அறிகுறிகள்:

* அதிகப்படியான தாகம்
* வறண்ட உதடுகள்
* களைப்பு
* தலைவலி
* மயக்கம்

நீர்ச்சத்து குறையும் அபாயம் யாருக்கு உள்ளது?

* வயது முதிர்வால் தாகம் ஏற்படும் உணர்வு குறைய தொடங்கும். இதனால் பலரும் போதுமான அளவு நீர் குடிப்பது இல்லை. இதனால் வயது ஆனவர்களுக்கு நீர்ச்சத்து குறைவு அதிக ஆபத்தை ஏற்படுத்தும். *கைக்குழந்தைகள் மற்றும் குழந்தைகளுக்கு அதிக அளவு வயிற்றுப்போக்கு வாந்தி ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது
* நீண்ட காலமாக நீரிழிவு, சிறுநீரக பிரச்சினைகள் உள்ளவர்கள்.
* மருந்துகளை உட்கொள்ளும் நபர்கள்.
* வெயில் நேரடியாக படும் இடங்களில் வேலை செய்பவர்கள், உடற்பயிற்சியில் ஈடுபடுவர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+