வாயை விட்ட சீமான்.. வலுக்கும் எதிர்ப்பு! முஸ்லிம் என்றவுடன் சீற்றமா? பாசிசம் என எஸ்டிபிஐ கண்டனம்
சென்னை: கேள்வி எழுப்பிய செய்தியாளர் முஸ்லிம் என்றவுடன் நீங்கள் எல்லாம் அப்படிதான் என்பது பாசிச மனோபாவம் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எஸ்டிபிஐ கட்சி மாநில பொதுச்செயலாளர் உமர் பாரூக் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "2 திராவிட கட்சிகளையும் ஒழிக்க வேண்டும் என நினைக்கும் மக்கள் என் பின் நிற்கிறார்கள்." என்று கூறினார். அங்கிருந்த செய்தியாளர், "ஒரு தொகுதிக்கு 3,000 ஓட்டு மட்டும் வாங்கினால் போதுமா சார்" என கேள்வி எழுப்பினார்.

இதனால் ஆவேசம் அடைந்த சீமான், "ஒரு தொகுதிக்கு 25,000 ஓட்டு வாங்கி இருக்கேன்.. நீங்க தூக்குல தொங்குவீங்களா? தூத்துக்குடியில் 35,000 ஓட்டு வாங்கி உள்ளேன். விஷம் குடிக்கின்றீர்களா? 3000 ஓட்டு எந்த தொகுதியில் வாங்கினேன் என்று சொல்லுங்கள். நான் தீக்குளிக்கிறேன். எந்த இதழில் இருந்து வருகிறீர்கள்?" என கேட்டார்.
தான் பணிபுரியும் இதழின் பெயரை அந்த செய்தியாளர் சொன்னவுடன், அந்த பத்திரிகை அவ்வளவு கேவலமாக போய்விட்டதா என்று தரக் குறைவாக விமர்சித்தார். பின்னர் அந்த பத்திரிகையாளரிடம் உங்கள் பெயர் என்ன என்று கேட்டார். அந்த பத்திரிகையாளர் "சிராஜுதீன் சார்" என சொன்னவுடன், "அப்ப நீ பேசுவ" என ஒருமையில் சீமான் விமர்சித்தார்.
இதன் காரணமாக அந்த பத்திரிகையாளருக்கும் சீமானுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அந்த பத்திரிகையாளரை சீமான் ஒருமையில் அவமரியாதையாக பேசிக்கொண்டே இருந்தார். "நீ கோமாவில் இருக்கிறாய் என நினைக்கிறேன். உன் பேரு சிராஜுத்தீனா?" என மீண்டும் சீமான் தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சீமானின் இந்த கருத்துக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் கடும் கண்டனத்தை பதிவு செய்து இருக்கிறது. சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினர் சீமானின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் உமர் பாரூக்கும் சீமானின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து பேஸ்புக்கில் பதிவிட்டு உள்ள அவர், "எளிதில் உணர்ச்சி வயப்படக்கூடிய ஒருவரிடம் சரியான தரவுகள் இன்றி
கேள்வி கேட்டது தவறுதான், கண்டிக்கிறேன்! கேட்டவர் பெயர் சிராஜ் என்றவுடன் கூடுதல் சீற்றமுடன் பொங்கி எழுவதும் தவறுதான், இதுவும் கண்டனத்திற்குரியதே!! முஸ்லிம் என்றவுடன் நீங்கள் எல்லாம் அப்படித்தான் என்பது பாசிச மனோபாவமாயிற்றேஅது உங்களிடமுமா? என்று கேட்க எனக்கு உரிமை உள்ளது...!!!" என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications