கடிதத்தால் மனக் கசப்பு! கட்சியே வேண்டாம்.. நான் கிளம்புறேன்! ஷாக் கொடுத்த எஸ்டிபிஐ நெல்லை முபாராக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எஸ்டிபிஐ கட்சியின் முன்னாள் மாநில தலைவர் நெல்லை முபாரக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகிக் கொள்வதாக தெரிவித்துள்ளார். ஒரு கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு நடந்த சில கசப்பான நிகழ்வுகளை தொடர்ந்து தான் மனவேதனை அடைந்ததாகவும், அதனால் கட்சியில் பயணிக்க இயலாத நிலையில் உள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

SDPI Nellai Mubarak Resign

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," நான் கடந்த 31 ஆண்டுகளாக இறைநாட்டப்படி பொதுவாழ்வில் பயணித்து வருகிறேன். அதில் எனது அரசியல் பயணமாக, SDPI கட்சியின் தமிழக முதல் உறுப்பினராகவும், அமைப்பாளராகவும் பணியாற்றத் தொடங்கி, முதல் மாநில நிர்வாகப் பொதுச்செயலாளர், மாநிலத் துணைத்தலைவர், அதனைத் தொடர்ந்து கடந்த ஒன்பது ஆண்டுகளாக மாநிலத் தலைவர், தேசியச் செயற்குழு உறுப்பினர் மற்றும் தேசியச் செயலக (Secretariat) உறுப்பினர் ஆகிய பொறுப்புகளை என்னால் இயன்றவரை சுமந்தேன். இறைநாட்டப்படி மனசாட்சியோடு செயல்பட்டேன்.

ஆனால், கடந்த செப்டம்பர் மாதத்தில் ஒரு கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு நடந்த சில கசப்பான நிகழ்வுகளைத் தொடர்ந்து, பலவிதமான அவதூறுகள் தேவையற்ற வகையில் பரவி வருகின்றன. இதனால் மிகுந்த மனவேதனை அடைகிறேன்.

எனவே, இந்தக் கடினமான, கசப்பான சூழலில் தொடர்ந்து என்னால் SDPI கட்சியில் பயணிக்க இயலாத நிலையில் உள்ளேன். ஆகவே, கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்தும் இத்துடன் விலகிக் கொள்கிறேன்.

இதுகாறும் எனக்கு அனைத்து வகையிலும் உதவிய, ஒத்துழைப்பு நல்கிய எனது சக மாநிலச் செயற்குழு உறுப்பினர்களுக்கும், தேசியச் செயற்குழு உறுப்பினர்களுக்கும், அண்டை மாநில நிர்வாகிகளுக்கும், மாவட்டம் முதல் கிளை வரையிலான நிர்வாகிகளுக்கும், துணை அமைப்புகளின் உறவுகளுக்கும் மற்றும் என் இதயம் நிறைந்து நிற்கின்ற சகோதர சகோதரிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த ஆயிரமாயிரம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உடைந்த, கனத்த இதயத்துடன் உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். அல்லாஹ் நம் அனைவரின் நற்பணிகளையும் அங்கீகரிப்பானாக!" எனக் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+