வக்ஃப் சட்டத்தில் திருத்தம்.. முஸ்லிம்களை இரண்டாம் தர குடிமக்களாக ஒதுக்கும் நடவடிக்கை: எஸ்டிபிஐ
சென்னை: வக்ஃப் சட்டத்தில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு திருத்தங்களை கொண்டுவர உள்ளது. இதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், முஸ்லிம்களை இரண்டாம் தர குடிமக்களாக ஒதுக்கும் நடவடிக்கை என விமர்சித்துள்ளது எஸ்டிபிஐ.
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.பைஸி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வக்ஃப் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முயற்சிக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கை தவறானது, கண்டனத்திற்குரியது. அரசியலமைப்பின் 25-28 பிரிவுகளின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள மத சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையை மறுத்து, முஸ்லிம்களை இரண்டாம் தர குடிமக்களாக ஒதுக்கி அடிமைப்படுத்த திட்டமிட்ட நடவடிக்கை இதுவாகும்.

ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதி கோல்வால்கரின், முஸ்லிம்களை சீர்குலைக்கும் முன்னோடியான வகுப்புவாத செயல்திட்டங்கள், பத்தாண்டுகளுக்கு முன்பு மத்தியில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு பக்கம் சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்ததாகக் கூறி முஸ்லிம் வழிபாட்டுத் தலங்களை இடித்து, மறுபுறம் மசூதிகளுக்கு அடியில் சிலைகள் இருப்பதாகக் கூறி, அவை கைப்பற்றப்பட்டு, கோவில்களாக மாற்றப்படுகின்றன.
முஸ்லிம் சமூகத்தை மோசமாக பாதிக்கும் சட்டங்கள் சீரான இடைவெளியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. மத்தியிலும், பாஜக ஆளும் மாநிலங்களிலும் உள்ள அரசுகளின் முக்கிய செயல்பாடுகள் முஸ்லிம்களை துன்புறுத்துவதில் கவனம் செலுத்துகின்றன.
வக்ஃப் சொத்துக்கள் பொதுச் சொத்துகள் அல்ல; அவை மசூதிகள், மதரஸாக்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவமனைகள் போன்ற பல்வேறு மத நோக்கங்களுக்காக அர்ப்பணிப்புள்ள முஸ்லிம்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட சொத்துக்கள். வக்ஃப் வாரியம் மற்றும் வக்ஃப் சொத்துக்களின் செயல்பாடுகளை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் வக்ஃப் சட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. மேலும், இந்த சட்டத்தை திருத்துவதற்கான தற்போதைய நடவடிக்கை அரசியலமைப்பிற்கு எதிரானது மற்றும் தன்னிச்சையானது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரசியல் செல்வாக்கு உள்ள பல செல்வந்தர்களால் ஏராளமான வக்ஃப் சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. ஆகவே, வக்ஃப் சொத்துகளைப் பயன்படுத்துவதற்கு திருத்தம் என்கிற பெயரில் தேவையற்ற தடைகளை விதிக்காமல், சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட வக்ஃப் சொத்துக்களை மீட்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒன்றிய பாஜக அரசின் இத்தகைய வகுப்புவாத நிகழ்ச்சி நிரலை எஸ்டிபிஐ கட்சி கடுமையாக எதிர்க்கிறது. மேலும், அரசியலமைப்பிற்கு எதிரான இதுபோன்ற நடவடிக்கையில் இருந்து அரசு பின்வாங்கி, நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் எந்த பாகுபாடும் இல்லாமல் அரசியலமைப்பு உரிமைகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. இவ்வாறு எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.பைஸி தெரிவித்துள்ளார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications