15 பேருக்கு தூக்கு.. ஆர்எஸ்எஸ் கொலைகார கும்பல் வெளியே! முஸ்லிம்களுக்கு அநீதி - தெகலான் பாகவி காட்டம்
சென்னை: கேரளாவில் எஸ்டிபிஐ மாநில நிர்வாகி கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு இன்னும் மந்த நிலை தொடரும் சூழலில் பாஜக பிரமுகர் கொலை வழக்கில் 15 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது இரட்டை நிலையாக இருப்பதாக எஸ்டிபிஐ மூத்த தலைவ்ர் தெகலான் பாகவி கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இது குறித்து அவர் தெரிவித்து இருப்பதாவது, "ஷான் படுகொலை வழக்கின் மந்த நிலையும் ஆர்எஸ்எஸ் நிர்வாகி கொலை வழக்கில் விரைவான தீர்ப்பும்! ஏன் இந்த இரட்டைநிலை? கடந்த 2021 டிசம்பர் 18 ஆம் தேதி எஸ்டிபிஐ கட்சியின் கேரள மாநில செயலாளர் KS ஷான் மதவெறி பிடித்த RSS கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக 13 RSS இயக்கத்தினர் கைது செய்யப்பட்டனர். ஷான் படுகொலை செய்யப்பட்ட அதே நாளில் RSS இயக்கத்தை சார்ந்த ரஞ்சித் ஸ்ரீனிவாசன் என்பவரும் படுகொலை செய்யப்பட்டார்.

அந்த வழக்கில் 30 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். எஸ்டிபிஐ மாநில செயலாளர் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் சில மாதங்களில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். வழக்கு விசாரணை எந்த முன்னேற்றமும் இல்லாமல் தொய்வு நிலையிலேயே உள்ளது. வழக்கில் பப்ளிக் ப்ராக்ஸ்க்யூட்டரை உடனே நியமிக்க வேண்டும் . வழக்கை விரைவு படுத்தவேண்டும் என பல போராட்டங்களை எஸ்டிபிஐ கட்சி முன்னெடுத்தும் வழக்கை விரைவுப்படுத்துவதற்கு ஆளும் சிபிஎம் அரசு எந்த முயற்சிகளையும் முன்னெடுக்கவில்லை.
பல போராட்டங்களுக்குப் பிறகு இப்போதுதான் பிபி நியமிக்கப்பட்டு இருக்கிறார். ஆனால் ஆர்எஸ்எஸ் நிர்வாகி ரஞ்சித் ஸ்ரீனிவாசன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு இரண்டு வருடங்கள் கழிந்த பிறகும் இதுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிராக வழக்கு விரைவு படுத்தப்பட்டு இன்று குற்றம் சாட்டப்பட்டவர்களில் 15 முஸ்லிம்களுக்கு மரண தண்டனை விதித்து மாவட்ட நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.
குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் கண் முன்னே நடந்த எத்தனை கொடூர குற்றங்களுக்கு இது மாதிரியான தீர்ப்பு நீதிமன்றங்களால் வழங்கப்பட்டு உள்ளது. குஜராத்திலும் மற்றும் நாடு முழுவதும் ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகளால் மிகக் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்புகள் என்ன? எத்தனை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு மட்டும் நீதியின் பெயரால் இத்தகைய அநீதிகள் ஏன் இழைக்கப்படுகிறது. இதுதான் நாடு முழுவதும் முஸ்லிம்கள் சந்தித்து வருகின்ற இரட்டை நீதி." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications