அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு!
சென்னை: அதிமுகவிடம் 15 தொகுதிகளும், ஒரு ராஜ்ய சபா சீட்டும் கேட்டதாகவும், ஆனால் 5 தொகுதிகள் தருவதாக அதிமுக கூறிவிட்டு பின்னர் மறுத்து விட்டனர் என்றும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டியிடும் சூழல் உருவாகிவிட்டது எனக் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ளது. அதிமுகவிலும் தொகுதி பங்கீடு நிறைவடைந்து, கட்சிகளுக்கான தொகுதிகளின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

நாதக சார்பில் ஏற்கனவே 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டது. தவெக தரப்பிலும் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் நேர்காணல் நடைபெற்று முடிந்துள்ளது. விரைவில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் எனக் கூறப்படுகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் - சசிகலா இணைந்து ஒரு கூட்டணி அமைத்துள்ளனர்.
கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தங்கள் கூட்டணி நிலைப்பாட்டை அறிவித்து விட்ட நிலையில் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சி, அதிமுக கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டியிட தயாராகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2021 சட்டமன்றத் தேர்தலில் தனித்தும், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் ஒரு தொகுதியிலும் போட்டியிட்டது கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சி. இந்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியா அல்லது வேறு கூட்டணியா எனும் கேள்வி எழுந்த நிலையில், எங்களுக்கு அனைத்து பக்கமும் வாய்ப்பிருக்கிறது எனும் ரீதியில் பதில் கொடுத்தார் கிருஷ்ணசாமி.
இன்று கோவையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அதிமுக கூட்டணியில் 12 முதல் 15 சட்டமன்றத் தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை இடமும் கேட்டோம். பிறகு அவர்கள் 7 தொகுதிகள் கொடுப்பதாக தெரிவித்தனர். அதன்படி 7 விருப்பத் தொகுதிகள் பட்டியலை வழங்கினோம். பிறகு அதில் இருந்து இரண்டை குறைத்து ஐந்து விருப்பத் தொகுதிகள் கொடுத்தால் இறுதி செய்துவிடலாம் எனத் தெரிவித்தனர்.
அதன்படி ஐந்து தொகுதிகள் அடங்கிய பட்டியலை அதிமுகவிடம் கொடுத்தேன். ஆனால், சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எங்களுடனான கூட்டணி பேச்சுவார்த்தை நின்றுவிட்டது என்பதுபோல் தெரிவித்து விட்டார்" எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "அதிமுகவில் ஜெயலலிதா இருந்தபோது இருந்த அணுகுமுறை இப்போது இல்லை. அதிமுக அணியில் இடம்பெற முயற்சித்தோம். தேவேந்திர குல மக்களை அதிமுக அவமரியாதை செய்துவிட்டது. தனித்து போட்டியிடும் சூழல் உருவாகிவிட்டது.
60 தொகுதிகளை அடையாளம் கண்டுள்ளோம். 300 பேரிடம் நேர்காணல் நடத்தியுள்ளோம். இன்னும் 2 நாட்களில் வேட்பாளர்களை அறிவிப்போம்" எனத் தெரிவித்துள்ளார் கிருஷ்ணசாமி.
-
மதுரை வடக்கு தொகுதி.. தளபதிக்கு குடைச்சல் கொடுக்கும் சரவணன்.. தவெக பிரிக்கப் போகும் வாக்குகள்! -
எங்களுக்குள் அண்ணன் - தம்பி சண்டைதான்! ஒரே வேனில் நின்று பிரசாரம் செய்த எடப்பாடி - டிடிவி தினகரன் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு -
சென்னை RK நகரில் அதிமுக வேட்பாளருக்கு.. அஜித் ரசிகர்கள் கொடுத்த ஷாக்! இது நல்லா இருக்கே! -
கருணாநிதி மறைந்தபோது மெரினாவில் இடம் கொடுக்காதது ஏன்? இதுதான் காரணம் - எடப்பாடி சொன்ன சீக்ரெட்! -
விந்தியா பேசும்போதே குறுக்கே நபர்.. மைக் ரிப்பேர்.. திமுகவையும் திட்டணும்.. கடலூரில் செம டென்ஷன் -
"கவுண்டர்" தான் ஆளப்போகிறார்.. எடப்பாடியின் ஜாதியை சொல்லி வாக்கு கேட்ட திண்டுக்கல் சீனிவாசன்! சர்ச்சை -
எடப்பாடி பழனிசாமிக்கு 'செக்' வைக்கும் விஜய்! களமிறங்கும் ரகசிய வேட்பாளர்.. அதிர்ச்சியில் அதிமுக -
"தமிழகத்தில் டெல்லி மாடல்.." அதிமுக பெரும்பான்மை பெற்றாலும் என்டிஏ ஆட்சிதான்.. ராம்தாஸ் அத்வாலே பரபர -
உதயநிதி கேட்டதில் என்ன தப்பு? - எடப்பாடியை விமர்சித்த சசிகலா.. பழிக்குப் பழியா இது? -
“எடப்பாடி பழனிசாமி ஒரு மனநல மருத்துவரை பார்த்து பரிசோதிப்பது நல்லது”.. திமுக பெண் தலைவர்கள் தாக்கு -
"எடப்பாடி பழனிசாமி விருப்பப்படி நான் மண்ணுக்கு போகலாம், ஆனால்.." ஸ்டாலின் தந்த பதிலடி












Click it and Unblock the Notifications