சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"கிளைமாக்ஸ்" வந்தாச்சு.. அமித்ஷா "ஆட்டம்" ஆரம்பம்.. எடப்பாடிக்கு "வேற லெவல்" ஷாக் தந்த தமிழக ஆளுநர்

ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் எடப்பாடி கலந்து கொள்ளாததன் காரணம் வெளியாகி உள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் தந்த தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளார்.. இதற்கான காரணம் என்னவென்பது தற்போது வெளியாகி உள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் ரவி தேநீர் விருந்து அளித்தார்.. இதில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளவில்லை.

ஆனால் எதிர்பார்த்ததுபடியே ஓபிஎஸ் தன்னுடைய ஆதரவாளர்களுடன் கலந்துகொண்டார்... சென்னையில் இருந்துகொண்டே எடப்பாடி பழனிசாமி இந்த விருந்தை புறக்கணித்தது, பெரும் சலசலப்பை தமிழக அரசியலில் ஏற்படுத்தி உள்ளது.

எடப்பாடி பழனிசாமிக்காக தயாராகும் பிரத்யேக பாடல்கள்.. அதிமுக நிகழ்ச்சிகளில் இனி புதிய மாற்றங்கள்! எடப்பாடி பழனிசாமிக்காக தயாராகும் பிரத்யேக பாடல்கள்.. அதிமுக நிகழ்ச்சிகளில் இனி புதிய மாற்றங்கள்!

 டீ பார்ட்டி

டீ பார்ட்டி

இதற்கு பல காரணங்கள் வட்டமடித்தன.. பாஜகவை எடப்பாடி ஒதுக்க ஆரம்பித்துவிட்டார் என்றும், ஓபிஎஸ் வருகிறார் என்பதாலோ, எடப்பாடி தேநீர் விருந்துக்கு வரவில்லை என்றும் சொல்லப்பட்டது.. மற்றொரு பக்கம், ஸ்டாலின் வருகிறார் என்பதால், அவரை நேருக்கு நேர் சந்திக்க வேண்டி வரும் என்பதாலும், எடப்பாடி இந்த விருந்தை புறக்கணித்தார் என்றும் முணுமுணுக்கப்பட்டது.. ஆனால், எடப்பாடி பழனிசாமி தேநீர் விருந்தில் கலந்து கொள்ளாததற்கு விஷயமே வேறயாம்.

 அமித்ஷா + மெசேஜ்

அமித்ஷா + மெசேஜ்

ஏன்? எதற்கு? என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமான தொடர்புகளிடம் நாம் விசாரித்தோம்.. அப்போது அவர்கள் சில விஷயங்களை சுட்டிக்காட்டுகின்றனர்... அவர்கள் சொன்னதாவது: "அதிமுக பொதுக்குழு விவகாரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் இருக்கிறது. இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், டெல்லி சென்று மோடி அல்லது அமித்ஷா இருவரில் ஒருவரை சந்திக்க அண்மையில் முயற்சித்தார் எடப்பாடி பழனிசாமி.

 லாபி - பாஜக

லாபி - பாஜக

இதற்காக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தரப்பு மூலம் லாபி செய்யப்பட்டது. அந்த தரப்பினரிடம், "அதிமுகவில் உரிமை பிரச்சனை நடந்துக்கிட்டு இருக்கு... அந்த விவகாரம் கோர்ட்டிலும் தேர்தல் ஆணையத்திலும் இருக்கு... இதில் உதவிகேட்டுத்தான் அவர் (எடப்பாடி) நம்மை சந்திக்க விரும்புகிறார். இந்த விவகாரத்திலெல்லாம் நாம் தலையிட முடியாது. அதிமுக யாருக்கு சொந்தம்ங்கிறதை அவர்கள் நிரூபிக்கட்டும். அதன் பிறகு பார்க்கலாம். அதனால் கொஞ்சநாளைக்கு தள்ளிப்போடுங்கள்' என்று தெரிவித்து விட்டதாம் அமித்ஷா தரப்பு.

டைமிங்

டைமிங்

இதனால் சந்திக்க எடப்பாடிக்கு அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்கவில்லை. இது எடப்பாடியை அப்-செட்டாக்கியது. இந்த நிலையில், தமிழக கவர்னர் மூலமாக முயற்சிக்கலாம் என்று அவரை சந்திக்க இரண்டு நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி, ராஜ்பவனை தொடர்பு கொண்டிருக்கிறார். ஆனால், கவர்னரும் அப்பாயிண்ட்மெண்ட் தரவில்லை... இதுவும் எடப்பாடிக்கு மூட் அவுட் பண்ணியது. இதனால்தான் கவர்னர் விருந்தை தனது ஆதரவாளர்களுடன் எடப்பாடி புறக்கணித்தார்" என்கிறார்கள் எடப்பாடிக்கு நெருக்கமானவர்கள்.

 ஓபன் டாக்

ஓபன் டாக்

ஆக, பாஜகவை முழுமையாகவே எடப்பாடி பழனிசாமி ஒதுக்குவது இதன்மூலம் நிரூபணமாகி வருகிறது.. கடந்த சில மாதங்களாகவே, பாஜக அரசின் ஜிஎஸ்டி உட்பட பல்வேறு அறிவிப்புகளை எடப்பாடி பழனிசாமி ஓபனாகவே எதிர்த்தார்.. கண்டித்து அறிக்கையும் வெளியிட்டிருந்தார்.. இதுபோக ராகுல்காந்தியுடன் போனில் பேசியதாக வெளிவந்த தகவல்கள் வெளியாகின.. ஏற்கனவே, சசிகலா, தினகரன் விஷயத்தில் எவ்வளவோ அறிவுறுத்தியும் அவர்களை கட்சியில் சேர்த்து கொள்ளாமல் எடப்பாடி பிடிவாதமாக இருப்பது, பாஜக மேலிடத்தை கடுப்பாக்கி வந்த நிலையில், மேற்கண்ட செயல்பாடுகளும், பாஜக தலைவர்களை அதிருப்திக்குள்ளாக்கி வருகிறதாம்.

ஃபைல்கள்

ஃபைல்கள்

அதைவிட முக்கியம், எடப்பாடி பழனிசாமிக்கு, கட்சியில் கிடைத்துள்ள மெஜாரிட்டி ஆதரவும், கொங்குவின் செல்வாக்கும் பாஜக மேலிடத்தின் கண்ணை உறுத்தி வரும் நிலையில், எந்த அப்பாயிண்மென்ட்டையுமே எடப்பாடிக்கு தர மேலிடம் முன்வரவில்லையாம்.. ஆளுநருடன் இத்தனை காலமும் நட்பு பாராட்டி வந்த நிலையில், இதையெல்லாம் அறிந்துதான், எடப்பாடி பழனிசாமி, சென்னையில் இருந்துக் கொண்டே ஆளுநரின் விருந்துக்கு செல்லவில்லை என்கிறார்கள்.. ஒருபக்கம் வழக்கு விசாரணைகள், தூசி தட்டி எடுத்து வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி அனைத்தையும் சமாளிப்பாரா? பார்ப்போம்..!

ஸ்கெட்ச்

ஸ்கெட்ச்

இன்னொன்றும் சொல்லப்பட்டு வருகிறது.. "ஒன்றரை கோடி தொண்டர்களில் 80 சதவீதம் பேர் ஓபிஎஸ்-ஐ ஆதரிக்கிறார்கள், கடந்த 10 நாட்களுக்குள் எங்களுக்கு ஆதரவு தினந்தோறும் பெருகிக் கொண்டே வருகிறது" என்று, ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் சொல்லியுள்ளது, தங்களுக்கு கடுப்பை தந்து வந்தாலும், ஒரு விஷயத்தில் மட்டும் எடப்பாடி பழனிசாமி ஸ்டிராங்காக இருக்கிறாராம்.. அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் எதிர்மறையாக முடிவு வந்தால், அதை எதிர்த்து அப்பீல் செய்ய தயாராக வேண்டும் என்பதுடன், தன்னுடைய தலைமையிலான அதிமுகவை, பாஜக மேலிடம் அங்கீகரிக்கவில்லை என்றால், கூட்டணியில் இருந்து கழற்றி விட்டு எம்பி தேர்தலை தனித்து சந்திக்கவும் திட்டமிட்டுள்ளாராம்.. அதனாலேயே சுற்றுப்பயணத்தை முதல்கட்டமாக கையில் எடுத்திருப்பதாகவும், அதிலும் தென்மண்டலத்தை குறி வைக்க முக்கிய காரணமே இதுதான் என்றம் கூறப்படுகிறது.

English summary
Secret of Edappadi palanisamys non-participation in the governor's tea party, what happened ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் எடப்பாடி கலந்து கொள்ளாததன் காரணம் வெளியாகி உள்ளது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X