அந்த ‘சீக்ரெட்’ ரிப்போர்ட்.. 89வது ஆள் ஜமேஷா முபின்.. அண்ணாமலை ‘பகீர்’.. எல்லாமே கைக்கு போகுதாம்!
சென்னை : உளவுத்துறைக்கு அனுப்பப்பட்ட ரகசிய கடிதம் தன்னிடம் இருப்பதாகக் கூறிவந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதில் இருக்கும் பாயிண்டுகளை குறிப்பிட்டு இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து முன்பே உளவுத்துறை, காவல்துறைக்கு எச்சரிக்கப்பட்டதாகவும், காவல்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க காலம் தாழ்த்தியதன் காரணமாகவே கோவை சம்பவம் நடைபெற்றது என்றும் அண்ணாமலை தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.
கோவை சம்பவத்தில் தொடர்புடைய தகவல்கள் அண்ணாமலைக்கு முன்பே தெரிந்தது எப்படி என விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், அண்ணாமலையின் இன்றைய அறிக்கையின் மூலம், காவல்துறையின் உயர்மட்ட ரகசிய தகவல்கள் அண்ணாமலையின் கைகளுக்குச் செல்வது தெளிவாவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

போலீஸ் அறிக்கை
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக காவல்துறையின் மெத்தனமே இந்த சம்பவத்திற்குக் காரணம் எனக் குற்றம்சாட்டிய நிலையில், அவரது குற்றச்சாட்டுகளுக்கு பதிலடியாக காவல்துறை சார்பில் நேற்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசாங்கங்களுக்கு குண்டு வெடிக்கப் போவதாக முன்கூட்டியே எச்சரித்ததாகவும் காவல்துறை அதை அலட்சியப்படுத்தியதாகவும் அண்ணாமலை பொய்ப் பழி சுமத்துவதாக காவல்துறையின் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அண்ணாமலை அதிர்ச்சி தகவல்
இந்நிலையில், தமிழக காவல்துறையின் அறிக்கைக்கு பதில் கொடுத்து ஒரு நீண்ட அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளார் அண்ணாமலை. கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக காவல்துறை அளித்த அறிக்கையில், தன் மீது வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார் அண்ணாமலை. அதில், மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய சுற்றறிக்கை குறித்து தெரிவித்துள்ளார் அண்ணாமலை. மேலும், இன்னொரு குண்டையும் தூக்கிப் போட்டுள்ளார்.

89ஆம் இடத்தில் ஜமேஷா முபீன்
கோவையில் கார் வெடிப்பு சம்பவம் நடந்த அக்டோபர் மாதம் 23ஆம் தேதிக்கு முன்னரே ஜமேஷா முபீன் பற்றிய தகவல்கள் காவல்துறை தலைமை மற்றும் உளவுத்துறைக்கு காவல்துறையில் இயங்கும் ஒரு தனிப்பிரிவு வழங்கியுள்ளது. 945 நபர்களுக்கு ஐஎஸ் ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகவும் மக்கள் கூடும் இடங்களில் இவர்கள் தனி நபராக திடீர் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகவும் ஒரு பட்டியலை கொடுத்துள்ளது அந்த தனிப்பிரிவு. அதில் ஜமேஷா முபீன் 89ஆம் இடத்தில் உள்ளார் எனக் கூறி அந்த அறிக்கையில் உள்ள அந்தப் பகுதியின் படத்தையும் வெளியிட்டு அதிர்ச்சி கிளப்பியுள்ளார் அண்ணாமலை.

கோட்டை விட்ட உளவுத்துறை?
ஜூலை மாதம் 19ஆம் தேதி கொடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கைக்கு பின்னரும் ஜமேஷா முபினை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வராமல் கோட்டை விட்டுள்ளது தமிழக காவல்துறையின் உளவுத்துறை. இந்த வருடம் செப்டம்பர் மாதம் முடியும் வரையில் கோவை நகரத்திற்கான உளவுத்துறை அதிகாரி நியமிக்கப்படாமல் இருந்தது பாஜக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிறகு தான் அவசர அவசரமாக இந்த பணியிடம் திரப்பப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கிறது. இது தான் தமிழகத்தில் உளவுத்துறை செயல்படும் லட்சணம்." என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் அண்ணாமலை.

அண்ணாமலை கைக்கு போகிறதா?
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் தெரிவிக்கும் முன்பே சீக்ரெட்டான தகவல்கள் அண்ணாமலைக்குத் தெரியவந்தது எப்படி என்ற கேள்விகள் சமீபமாக எழுந்துவரும் நிலையில், உளவுத்துறைக்கு அனுப்பப்பட்ட சீக்ரெட் வார்னிங்கில் இடம்பெற்ற தகவல்கள் எனக் கூறி சிலவற்றையும் இன்று அண்ணாமலை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிக்கையில் அண்ணாமலைக்கு எப்படி கிடைக்கின்றன என்பது குறித்து அரசு விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications