துள்ளி வரும் விஜய்.. வாக்குகளை பிரிக்க போகும் தவெக.. பாதிக்கப்பட போவது திமுக, அதிமுக இல்லை? சீமானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜயின் தமிழக வெற்றிக் கழகம்.. திமுக, அதிமுகவை விட நாம் தமிழர் கட்சியின் வாக்குகளையே அதிகம் பிரிக்க வாய்ப்புகள் உள்ளதாக சர்வே ஒன்று தெரிவிப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆளும் திமுக ரகசியமாக நடத்திய கருத்துக் கணிப்பின்படி, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடிகர் விஜய் அரசியலில் எதிர்கொள்ளும் சவால்களைப் பெரிய அளவில் பாதிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. திமுக நடத்திய இந்தக் கருத்துக் கணிப்பு, நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் 23 சதவீத வாக்குகளைப் பெறும் என கணித்துள்ளது.

TVK Vijay

திமுக நடத்திய கருத்துக் கணிப்பு

இந்த ஆய்வின்படி, தமிழக வெற்றிக் கழகத்திற்கு மாநிலம் முழுவதும் வலுவான ஆதரவு இருப்பதும், அது திமுக-வுக்கு ஒரு முக்கியமான போட்டியாளராக உருவெடுக்கக்கூடும் என்பதும் வெளிப்பட்டுள்ளது. இந்த ஆய்வு 2.91 லட்சம் வாக்காளர்களிடம் நடத்தப்பட்டது. ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் சராசரியாக 1,245 மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் என்.டி.ஏ கூட்டணியில் பாஜக மற்றும் அதிமுக முக்கிய கட்சிகளாக உள்ளன. அதிமுக, பாஜக மற்றும் தவெக ஆகிய கட்சிகள் என்.டி.ஏ கூட்டணியில் இணைந்தால், திமுக 50 சதவீத வாக்குகளையும், என்.டி.ஏ 35 சதவீத வாக்குகளையும், சீமானின் நாம் தமிழர் கட்சி 12 சதவீத வாக்குகளையும், மற்றவர்கள் 3 சதவீத வாக்குகளையும் பெறுவார்கள் என இந்த ரகசிய ஆய்வு குறிப்பிடுகிறது.

பாஜக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் இணைந்து 35 சதவீத வாக்குகளைப் பெற்றாலும், அதிமுக-வின் உட்கட்சிப் பூசல்கள் மற்றும் பாஜக-வின் சித்தாந்தத்தை தமிழக வாக்காளர்கள் எதிர்க்கும் போக்கு ஆகியவை இந்தக் கூட்டணியின் வளர்ச்சியைத் தடுக்கலாம் என்றும் சர்வே கூறுகிறது.

தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடும் சூழ்நிலையில், திமுக-வின் வாக்கு சதவீதம் 45 ஆகக் குறையலாம் என கணிக்கப்பட்டுள்ளது. அதிமுக-பாஜக கூட்டணி 22 சதவீத வாக்குகளையும், விஜயின் கட்சி 23 சதவீத வாக்குகளையும் பெறும் என இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இந்தச் சூழ்நிலையில், சீமானின் நாம் தமிழர் கட்சியின் ஆதரவு 5 சதவீதமாகக் குறையக்கூடும் எனவும் ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இன்னொரு சர்வே

இப்படிப்பட்ட நிலையில்தான் விஜயின் தமிழக வெற்றிக் கழகம்.. திமுக, அதிமுகவை விட நாம் தமிழர் கட்சியின் வாக்குகளையே அதிகம் பிரிக்க வாய்ப்புகள் உள்ளதாக சர்வே ஒன்று தெரிவிப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது விஜய் பெரும்பாலும் திமுக, அதிமுக எதிர்ப்பு வாக்குகளை பிரிக்கிறார். மாற்று வேண்டும் என்று நினைப்பவர்களின் வாக்குகளை அவர் பிரிக்கிறார். இத்தனை காலம் மாற்று வேண்டும் என்று நினைத்தவர்கள் சீமானுக்கு வாக்களித்தனர். அதனால்தான் அவரின் வாக்கு சதவிகிதம் ஒவ்வொரு தேர்தலிலும் அதிகரித்தது. அதைத்தான் விஜய் உடைக்கிறார்.

சீமானின் வாக்கு சதவிகிதம் 3 ஆக குறையும் வாய்ப்புகள் உள்ளன. விஜய் வருகையால் இந்த சதவிகிதம் குறையலாம். பல சீமான் தம்பிகள், விஜய்க்கும் ரசிகர்கள் என்பதால்.. அவர்கள் விஜய் பக்கம் செல்ல வாய்ப்புகள் உள்ளதாக சர்வே ஒன்று தெரிவிக்கிறதாம்.

அதிமுக தவெக இன்னொரு சர்வே

இன்னொரு பக்கம் பாஜக அல்லாத அதிமுக - தவெக கூட்டணி பற்றி ஆளும் திமுக சார்பாக இதுவரை சர்வே எதுவும் செய்யப்படவில்லை. இந்த நிலையில் பாஜக இல்லாமல் அதிமுக - தவெக மட்டும் கூட்டணி வைத்தால் அதன் முடிவுகள் எப்படி இருக்கும் என்று திமுக தரப்பு புதிய சர்வே எடுத்து முடிவு செய்து உள்ளதாம்.

இதையடுத்து ஆளும் திமுக தரப்பு அதிமுக தவெக தொடர்பாக இன்னொரு சர்வே எடுக்க உள்ளார்களாம். பாஜக அல்லாமல் இவர்கள் களமிறங்கினால் மக்கள் ஆதரவு எப்படி இருக்கும் என்று ஆய்வு செய்ய உள்ளார்களாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+