மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கை.. விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கையாக அதிகாரபூர்வ அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தின் அதிகார்பூர்வ கொள்கையாக மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து திருவள்ளுவர், அம்பேத்கர், பெரியார், காமராஜர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் உட்பட 6 பேர் அரசியல் வழிகாட்டிகள் என்று நடிகர் விஜய் அறிவித்து உள்ளார். இந்த ஐந்து தலைவர்களின் கொள்கை அடிப்படையில் கட்சி செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு நடந்து வருகிறது. இதற்காக அந்த கட்சியை சேர்ந்த ஏராளமான தொண்டர்கள். விக்கிரவாண்டி மாநாட்டுத் தளத்தில் திரண்டு உள்ளனர். இதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் விக்கிரவாண்டியில் செய்யப்பட்டு உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற்று வரும் நிலையில் விழா பந்தல் அமைந்திருக்கக் கூடிய பகுதியில் நூறு அடி உயரத்தில் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார் கட்சியின் தலைவர் விஜய்.

tvk maanadu tamilaga vetri kazhagam actor vijay

பொதுவாக அரசியல் கூட்டங்களுக்கு மக்கள் குடும்பமாக வர மாட்டார்கள். ஆனால் இந்த முறை விஜயின் முதல் மாநாட்டிற்கு விஜய்யை பார்க்க.. படம் பார்ப்பது போல மக்கள் கூட்டம் கூட்டமாக அவர் தொடங்கி உள்ளனர். கூட்டத்தின் முன் வரிசையில் மக்கள் பலர் வந்து அமர்ந்து உள்ளனர்.

நடிகர் விஜய் மாநாட்டு மேடைக்கு வந்ததும்.. கட்சியின் உறுதிமொழி பாடப்பட்டது.
“நமது நாட்டின் விடுதலைக்காகவும், மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து, வீரத்துடன் போராடி, உயிர் நீத்த எண்ணெற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்;

நமது அன்னைத் தமிழ் மொழியை காக்க உயிர் தியாகம் செய்த, மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில், தொடர்ந்து பாடுபடுவேன்;

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றை பேணிக்காக்கும் பொறுப்புள்ள தனி மனிதனாக செயல்படுவேன்;

மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப்பாதையில் பயணித்து என்றும் மக்கள் நல சேவகராக கடமையாற்றுவேன் என உறுதியளிக்கிறேன்;

சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளை களைந்து மக்களிடைய விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவருக்கும் சமவாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன்;

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற சமத்துவ கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன், என்ற தமிழக வெற்றிக் கழக உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதையடுத்து திருவள்ளுவர், அம்பேத்கர், பெரியார், காமராஜர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் உட்பட 6 பேர் அரசியல் வழிகாட்டிகள் என்று நடிகர் விஜய் அறிவித்து உள்ளார்.இந்த ஐந்து தலைவர்களின் கொள்கை அடிப்படையில் கட்சி செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தின் அதிகார்பூர்வ கொள்கையாக மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. இவை வரிகளாக எழுதப்பட்டு காட்சிகளாக திரையில் வைக்கப்பட்டு உள்ளது.

அதோடு தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பாடல் தந்தை பெரியார் விஜய்க்கு வழிகாட்டி அழைத்துச் செல்வது போன்ற காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது. பெரியாரை முன்னிறுத்தி தமிழக வெற்றி கழகம் தனது அரசியல் செயல்பாடுகளை முன்னெடுக்க உள்ளதை தெளிவுபடுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+