நல்லா நிமிர்ந்து நின்னு.. "கொரகொரகொரகொர".. இப்படி வாய் கொப்பளிக்கணும்.. இந்த வீடியோ பாருங்க!
சென்னை: இந்த உப்பு, வெந்நீர் போட்டு வாயை எப்படி கொப்பளிக்க வேண்டும் என தெரியுமா, தெரியாதவர்கள் இந்த வீடியோவை பாருங்கள்.
பொதுவாக நெஞ்சு சளி, மூக்கில் சளி, தொண்டை கரகரப்பு ஆகியவற்றுக்கு வாய் பொறுக்கும் சூட்டில் வெந்நீரை வைத்து அதில் மஞ்சள் தூள், கல் உப்பு போட்டு தொண்டையில் படும் படி கொப்பளிக்க வேண்டும்.
இவ்வாறு செய்தால் அந்த உப்புத்தன்மை பட்டு தொண்டை, வாய் பகுதியில் படிந்திருக்கும் பாக்டீரியா, வைரஸ் உடலை விட்டு வெளியேறும் என்பார்கள்.

தவறு
சொல்வதற்கு ஈஸியாக இருப்பது போன்று இருக்கும். ஆனால் இதை பெரும்பாலானோர் தவறாகவே செய்வர். இதை செய்யும் போது சும்மா பல் தேய்த்துவிட்டு வாய் கொப்பளிப்பது போல் செய்வர். இல்லாவிட்டால் அந்த தண்ணீரை தொண்டை வரை கொண்டு சென்று பின்னர் துப்பத் தெரியாமல் விழுங்கிவிடுவர்.

மருந்து
இதெல்லாம் யார் செய்றது என பலர் மெடிக்கல் ஷாப்பில் மருந்து வாங்கி போட்டுக் கொண்டு சளியை விரட்டுவர். ஆனால் இப்போது கொரோனா காலம் என்பதால் வாய், மூக்கு வழியாக செல்லும் கொரோனா வைரஸ் தொண்டையில் தங்கியிருக்கும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

நுரையீரல்
இந்த வைரஸ் நுரையீரலுக்கு செல்லாமல் இருக்க அதை தடுப்பது அவசியமாகும். இதனால் சுடுதண்ணீரால் மஞ்சள், உப்பு போட்டு வாய் கொப்பளிக்க கூறுகிறார்கள். இதனால் வீடுகளில் தினந்தோறும் காமெடி களேபரம் அரங்கேறி வருகிறது.

யார் பார்த்த வேலை இது!
இந்த நிலையில் யார் பார்த்த வேலை இது என தெரியவில்லை, சமூகவலைதளங்களில் ஒரு குருவி வாய் கொப்பளிப்பது எப்படி என்பது குறித்து கற்று தரும் வீடியோ வைரலாகி வருகிறது. சின்னஞ்சிறிய குருவி எத்தனை அழகாக வாயை "கொப்பளிக்கிறது" என்பதை பாருங்கள்.












Click it and Unblock the Notifications