ரூ.6000 வெள்ள நிவாரண நிதிக்கு புதிய சிக்கல்.. சென்னை ஹைகோர்டில் பரபரப்பு வழக்கு
சென்னை: மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரண நிதியை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது
சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பரில் பெருமழை பெய்த போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது. அந்தத்தொகை அவர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டது. இந்நிலையில் மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகையான 6000 ரூபாய் ரொக்கமாக ரேஷன் கடைகளில் தரப்பட உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இயல்பு நிலை திரும்பி வந்ததாலும், பலரும் ஏடிஎம் கார்டுகளை தொலைத்துள்ளார்கள்.. பெரும்பாலான ஏ.டி.எம்.கள் வேலை செய்யாத நிலை உள்ளது. பலர் வங்கி கணக்கை பராமரிக்கவில்லை. இதன் காரணமாகவே நிவாரணத் தொகை ரூ.6 ஆயிரத்தை ரொக்கமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது.
பணத்தை வங்கியில் செலுத்தாமல் கைகளில் கொடுக்க இன்னொரு காரணமும் இருக்கிறதாம். பலரும் வங்கிக்கணக்கை பராமரிக்காமல் 'ஜீரோ பாலன்ஸ்'ல் வைத்திருப்பார்கள், நிவாரணத் தொகை வங்கியில் செலுத்தப்பட்டால், அதன் ஒரு பகுதி வங்கிக்கு சென்றுவிடும். அதுபோல் வங்கிக்கடன் தவணைகளை செலுத்தாமல் விட்டிருந்தாலும் நிவாரணத் தொகை செலுத்தப்பட்ட உடனேயே வங்கியால் எடுக்கப்பட்டுவிடும். இதன் காரணமாக வங்கிகளில் கொடுக்காமல் கைகளில் கொடுப்பது நல்லது சிலர் கோரியதால் பணம் வங்கி கணக்கிற்கு பதில் கைகளில் ரொக்கமாக கொடுக்கப்படுவதாகவும் சொல்கிறார்கள்.
இந்நிலையில் இந்த தொகையை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த உத்தரவிடக்கோரி சென்னையை சேர்ந்த ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ராமதாஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்துள்ளார்.
அதில், தமிழக அரசு நிவாரண தொகை வழங்குவது பாராட்டக்குரியது எனவும் அந்த தொகையை ரேஷன் கடைகள் மூலம் அல்லாமல் நேரடியாக கொடுக்க வேண்டுமென கோரியுள்ளார். ரேஷன் கடைகள் மூலம் ரொக்கமாக கொடுப்பதால், அதிகளவில் முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளதோடு
நியாயமாக பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரண நிதி சென்றடையாமல் இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பல்வேறு திட்டங்களுக்கான தொகையை அரசு,நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தி வரும் நிலையில் இந்த பணத்தையும் வங்கி கணக்கில் செலுத்துவதில் அரசிற்கு எந்த வித சிரமமும் இருக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
-
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா?












Click it and Unblock the Notifications