எது பயங்கரவாதம்? வரையறைதான் என்ன? அதை முதலில் சொல்லுங்க...காங். புகாருக்கு சீமான் பதிலடி
சென்னை: பயங்கரவாதம் என்பது என்ன? பயங்கரவாதத்துக்கு வரையறைதான் என்ன? அதனை முதலில் வெளியே சொல்லுங்கள் என்று காங்கிரஸ் கட்சியினருக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலடி கொடுத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நடைபெற்ற கனிமவள கொள்ளைக்கு எதிரான கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் பேசிய பேச்சுகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றன. முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பேசினார். இதற்காக சாட்டை துரைமுருகன் கைதும் செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் ஶ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சியினருக்கு மிரட்டல் விடுத்தார் சாட்டை துரைமுருகன். இது காங்கிரஸ் கட்சியினரை கொந்தளிக்க வைத்தது.

சீமான் தொட்டதால் தீட்டு
முதலில் தக்கலையில் காமராஜர் சிலைக்கு சீமான் போட்ட மாலையை இளைஞர் காங்கிரசார் தூக்கி எறிந்தனர். பின்னர் காமராஜர் சிலையை கழுவி பாலபிஷேகம் செய்தனர். அப்போது பேசிய காங்கிரஸ் நிர்வாகிகள், பிரிவினைவாதி சீமான் தொட்டதால் காமராஜர் சிலை தீட்டாகிவிட்டது. அதனால் பாலபிஷேகம் செய்து விளக்கம் கொடுத்தனர்.

கொந்தளித்த ஜோதிமணி
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தமது சமூக வலைதளப் பக்கங்களில் சீமானுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் சாட்டை துரைமுருகன் பேசியதன் வீடியோவையும் பகிர்ந்து, இந்த பேச்சை கண்டிக்காதவர் சீமான்; சீமானின் தூண்டுதலில்தான் சாட்டை துரைமுருகன் இப்படி பேசினார்; அதனால் சீமானையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

சீமானுக்கும் மிரட்டல்
பின்னர் சென்னையில் டிஜிபி அலுவலகத்தில் சீமான் மீது ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரி ஜோதிமணி எம்.பி, சட்டசபை காங்கிரஸ் குழு தலைவர் செல்வப் பெருந்தகை ஆகியோர் புகார் மனு கொடுத்தனர். வடசென்னையில் சீமானுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் பேசிய காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி, சீமானின் நாக்கை அறுத்துவிடுவேன் என மிரட்டினார். இது தொடர்பாகவும் நாம் தமிழர் கட்சியினர் சார்பாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video

எது பயங்கரவாதம் என கேள்வி
இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சீமான் சந்தித்து பேசினார். அப்போது, எது பயங்கரவாதம்? பயங்கரவாதம் என்பதற்கான வரையறைதான் என்ன? பயங்கரவாதம் குறித்த வரையறையை வகுத்து அதை முதலில் வெளியில் சொல்லுங்கள். அதன்பின்னர் எது எது தேசதுரோகம், பிரிவினைவாதம் என தெரிந்து கொள்ளலாம். சாட்டை துரைமுருகனை விரட்டி விரட்டி கைதுசெய்தீர்கள். ஆனால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஹெச். ராஜாவை ஏன் ஒன்றுமே செய்யவில்லையே. உங்களுக்கு வசதியென்றால் விட்டுவிடுவீர்கள் அப்படித்தானே? என பதிலடி கொடுத்தார்.
-
கர்நாடக முதலமைச்சராக தேர்வாகும் டி.கே.சிவக்குமார்.. பெங்களூரில் இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications