உங்க வீட்டு பெண்களை கூட்டிட்டு வாங்க.. நான் ஒப்புக் கொள்கிறேன்.. வலிக்குதுல்ல.. ? சீமான் ஆவேசம்
சென்னை: தம் மீது திருமண மோசடி, கட்டாய கருக்கலைப்பு புகாரை நடிகை விஜயலட்சுமி மூலம் சொல்ல தூண்டுகிறவர்கள் வீட்டு பெண்களை அனுப்புங்க.. நான் ஒப்புக் கொள்கிறேன் என்று சொன்னால் வலிக்கும் அல்லவா? என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகை விஜயலட்சுமி விவகாராத்தில், விஜயலட்சுமி, தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமியும் விசாரணைக்கு வரவேண்டும்- நானும் வருகிறேன் என சீமான் கூறியதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு பதில் அளித்த வீரலட்சுமி, நானும் விஜயலட்சுமியும் வருகிறோம்.. சீமான் அவரது மனைவியையும் தேன்மொழியையும் கூட்டிகிட்டு வருவாரா? என கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு சீமான் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் அளித்த பதில்: நீ யாரு தேன்மொழி, கயல்விழி வரனும்னு சொல்றதுக்கு? என் பொண்டாட்டி வருவா.. சட்டம் படிச்சிருக்கா.. என் வழக்கறிஞரா வருவா.. என் மனைவி மட்டுமல்ல.. என் வழக்கறிஞர். நீ வா பேசு.. நீ பேசு.. வீரலட்சுமியை வர சொல்லு..
கவிஞர் தேன்மொழி: தேன்மொழிக்கும் இதுக்கும் என்ன இருக்கு? அவங்க ஆகச் சிறந்த கவிஞர்.. நான் இலக்கிய வாசிப்பு உள்ளவன், கவிதை மேல பற்று கொண்டவன். அவங்க (தேன்மொழி) பெரிய எழுத்தாளர். அவங்க எங்கப்பா படம் ஈரநிலத்துல வசனம் எழுதுனாங்க.. நான் அதுல நடிச்சேன். அவங்க பெரிய கவிஞர். எங்க அண்ணன் அறிவுமதி போல, தபுசங்கர் போல பெரிய கவிஞர்.. அவங்களை ஏன் வம்புக்கு இழுக்கனும்?
உங்க வீட்டு பெண்களை வர சொல்லுங்க: ஒவ்வொரு வீடா போய் கதவை தட்டி..அவரு உங்களை இது பண்ணிட்டார்னு சொல்லுங்கன்னு சொல்றானுக.. எதுக்கடா வீடு வீடா போறீங்க? உங்க வீட்டுல இருந்து கூட்டிட்டு வாங்க.. நான் அப்ஜெக்சன் பண்ணாம ஆமான்னு சொல்றேன். இப்படி சொல்லும் போது உங்களுக்கு வலிக்குதுல்ல.. என்னங்கடா நான் என்னமோ அனாதை பய மாதிரி ஆதியில காட்டுல இருந்து இறங்கி வந்த மாதிரின்னு.. எனக்கும் ஒரு குடும்பம் இருக்கு. எனக்கும் ஒரு கூட்டம் இருக்குய்யா.. நடமாட முடியாது ஒவ்வொருத்தனும் நான் நினைச்சா.. பார்த்துக்க கவனமா இருக்கனும்.
2 வருஷம் ஆளுமா திமுக?: எதோ ஒருத்தன்னு நினைச்சுகிட்டு இருக்கான்.. அதிகபட்சம் 2 வருஷம் ஆடுவீங்களா? திமுக இன்னும் 2 வருஷம் ஆளுமா? அதுக்கு அப்புறம்? பார்க்கத்தான் போறோம் தம்பி.. எவ்வளவோ பார்த்துட்டோம்.. என் பங்காளி சொல்ற மாதிரி.. இதென்ன பிரமாதம். இன்னும் எவ்வளவோ இருக்கு.. பார்க்கத்தானே போறேன். இவ்வாறு சீமான் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications