சனாதனம் வைரஸ், மனநோய்...ஒழிக்கனும்..தம்பி உதயநிதி சொன்னதில் என்ன தப்பு? அமித்ஷா மீது சீமான் அட்டாக்
சென்னை: சனாதனம் என்பது வைரஸ், மனநோய்.. அதை ஒழிக்கனும் என தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார்.
சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு பாஜகவின் பல தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவிக்கின்றனர். மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் கடுமையாக விமர்சிக்கின்றனர். வட இந்தியாவில் நீதிமன்றம், காவல் நிலையங்களில் புகார்கள் கொடுக்கப்படுகின்றன.

ஆனால் தமிழ்நாட்டில் பெரும்பாலான தலைவர்கள், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு ஆதரவாக உள்ளனர். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது: சனாதனம் என்பது என்ன? மனித பிறப்பில் உயர்ந்தவன்/ தாழ்ந்தவன் பேதம் இருக்கிறது என்பதுதான் சனாதனம். இதை ஒவ்வொரு மனிதனும் எதிர்க்கனும்.

இதில் அமித்ஷா ஏன் கோபப்படுகிறார்? அவருக்கு ஜாதியும் மதமும் இருக்கிறது. ஜாதியும் மதமும் அவருக்கு இரு கண்கள். அவரைப் பொறுத்தவரையில் உயர்ந்த பிறப்பு என ஒருவரைக் கருதச் சொல்லும் சனாதனம் இருக்கிறது என நம்புகிறார். இதுதான் வர்ணாசிரம தர்மம்.

தம்பி உதயநிதி ஸ்டாலின் சொன்னது போல இது ஒரு வைரஸ் என்பதை ஒப்புக் கொள்கிறேன். இது ஒரு மனநோய். இந்த வைரஸ்களை ஒழிக்க முடியும். பல ஆயிரம் ஆண்டுகளாக ஒழிக்க முடியாத கொடிய கிருமிதான் சனாதனம். எல்லோரும் சேர்ந்து இதனை ஒழிக்க வேண்டும்.
நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் ஜாதிய சிந்தனையே வராது. ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துங்கள்.. ஜாதிவாரி பிரதிநிதித்துவம் வழங்கிவிட்டால் இந்த சிந்தனை எப்படி வரும்? இவ்வாறு சீமான் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications