புலிகளுடன் தொடர்பு- மலேசியாவில் 7 பேர் கைதுக்கு சீமான் கடும் கண்டனம்
சென்னை; மலேசியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக எம்.எல்.ஏக்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:
விடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன், சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் உள்ளிட்ட எழுவரை மலேசியக் காவல்துறை கைதுசெய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தீவிரவாத ஒழிப்பு எனும் பெயரில் ஈழ நிலத்தில் ஓர் இன அழிப்பை நிகழ்த்தி இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்டத் தமிழர்களைக் கொன்று குவித்த இந்நூற்றாண்டின் மிகக்கொடிய இனப்படுகொலைக்கு நீதிகேட்டு உலகம் முழுக்க வாழும் தமிழ் மக்கள் போராடிக்கொண்டும், அதற்காகக் கூக்குரலிட்டுக் கொண்டிருக்கும் வேளையில் இதுபோன்ற கைது நடவடிக்கைகள் மூலம் தமிழர்களைக் குற்றவாளிகளாகச் சர்வதேசச் சமூகத்தின் கண்முன்னே நிறுத்தும் செயல் வன்மையானக் கண்டனத்திற்குரியது.

தமிழ்த்தேசிய இனத்தின் பாதுகாப்புக் காப்பரண்களாக விளங்கிய தமிழீழ விடுதலைப்புலிகளைப் பயங்கரவாதிகள் எனச் சித்தரித்து அறமற்ற நெறி பிறழ்ந்த ஆயுதப்போரின் மூலம் வல்லாதிக்கங்களின் துணைகொண்டு அவ்வமைப்பை அழித்து முடித்துவிட்டப் பிறகும், புலிகளின் பெயரைச் சொல்லித் தமிழர்களைக் கைதுசெய்வது எந்தவகையிலும் ஏற்புடையதில்லை. விடுதலைப்புலிகளை அழித்து முடித்துவிட்டதாக அறிவித்துவிட்டப் பிறகு, புலிகள் மீதானத் தடையே தேவையற்றது எனக்கூறி அத்தடையை நாங்கள் நீக்க வலியுறுத்துவது இதனால்தான்.
உலகெங்கும் வாழும் தமிழர்களுக்குக் பாதுகாப்புப் பேரரணாக விளங்கி, தமிழர்களின் அடிமை விலங்கொடிக்கப் போராடியப் புலிகளின் பெயராலேயே தமிழர்களைக் கைதுசெய்து அடிமைப்படுத்தும் இப்போக்கு எதன்பொருட்டும் சகிக்க முடியாதப் பெருங்கொடுமையாகும்.
பத்தாண்டுகளைக் கடந்தும் தமிழீழத்தில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு இதுவரை நீதிகிடைத்திடாது வஞ்சிக்கப்பட்டு அடிமை நிலையில் இருக்கிற தமிழ்த்தேசிய இன மக்களைக் கைதுசெய்து குற்றவாளிகளாக உலகத்தவரின் பார்வையில் நிறுத்த முற்படுவது மிகப்பெரும் அநீதியாகும். ஆகவே, விடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக மலேசியாவில் கைதுசெய்யப்பட்ட மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன் உள்ளிட்ட எழுவரையும் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications