திருத்தணியில் சிராஜ் மீது தாக்குதல்..ஒட்டுமொத்த தமிழினத்திற்கே தலைகுனிவு! நாம் தமிழர் சீமான் காட்டம்
சென்னை: திருத்தணி சென்ற சென்னை புறநகர் ரயிலில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி தம்பி சிராஜ் மீது, போதைப் பழக்கத்திற்கு அடிமையான நான்கு இளம் சிறார்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ள கொடூர காட்சிகள் நெஞ்சை உலுக்குகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளார் சீமான் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," திராவிட மாடல் ஆட்சியில் கட்டுக்கடங்காத போதைப்பொருள் புழக்கம், தமிழிளம் தலைமுறையை எந்த அளவிற்கு மிக மோசமாகச் சீரழித்துள்ளது என்பதையே புலம்பெயர் தொழிலாளி சிராஜ் மீதான கொடுந்தாக்குதல் காட்டுகிறது.
அத்தனை சமூக அவலங்களுக்கும் அடிப்படையாக இருக்கும் போதைப் பொருட்கள் விற்பனையைத் தடுத்து நிறுத்தாது வேடிக்கை பார்க்கும் திமுக அரசின் கையாலாகாத்தனம் வன்மையான கண்டனத்துக்குரியது.

திருத்தணி தாக்குதல்
வட மாநிலத் தொழிலாளர்களால் தமிழ் மக்கள் கொடூரமாகத் தாக்கப்படுவது, கொலை மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது எந்த அளவிற்கு ஏற்றுக்கொள்ள முடியாத கொடுங்குற்றமோ அதே அளவிற்கு, குடும்ப வறுமைக்காகப் பிழைப்பு தேடி வந்த வட மாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டிற்குள் தாக்கப்படுவதும் ஏற்றுக்கொள்ள முடியாத பெருங்கொடுமையாகும். தமிழ்நாட்டில் அரசே நடத்தும் மலிவுவிலை மதுக்கடைகளால் சட்டம்-ஒழுங்கு முற்றாகச் சீரழிந்து கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட கொடுங்குற்றங்கள் வேகமாகப் பெருகிவருகின்றன.
சீமான் கண்டனம்
சொந்த இரத்த உறவுகள் கூடச் சிறு சிறு முன்பகைக்காக தங்களுக்குள் ஒருவருக்கொருவர் வெட்டிக்கொண்டு சாகும் சமூகப்பேரவலம் நிகழ்வதற்கு அரசு விற்கும் மதுதான் அடிப்படை காரணமாகிறது. அதுமட்டுமின்றி திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கஞ்சா விற்பனை கட்டுக்கடங்காத அளவிற்கு வளர்ந்து கஞ்சா விற்பனையின் தலைநகராக தமிழ்நாடு மாறியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகள் அனைத்தும் தமிழ்நாடு அரசு நடத்தும் டாஸ்மாக் மது மற்றும் கஞ்சா போதையில்தான் நடைபெறுகிறது.
வடமாநில தொழிலாளி மீது தாக்குதல்
எனவே அரசு மது விற்பனையைத் தடைசெய்தாலே தமிழ்நாட்டில் நடைபெறும் 95% கொடுங்குற்றங்கள் நடைபெறாமலேயே தடுத்து நிறுத்த முடியும். அனைத்து சமூகக் குற்றங்களுக்கும் காரணமாகத் திகழும் மது விற்பனையைத் தடை செய்வதில் திமுக அரசிற்கு என்ன தயக்கம்? கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் மதுவிலக்கினை நடைமுறைப்படுத்த போராடிய திமுக, தமது ஆட்சிக்காலத்தில் அதனை நடைமுறைப்படுத்த மறுப்பது ஏன்? அதிமுக ஆட்சியில் குட்காவுக்கு எதிராக சட்டமன்றம் வரை பேசிய திமுக, தன்னுடைய ஆட்சியில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கஞ்சா விற்பனை குறித்து வாய் திறவாதது ஏன்?
மது, கஞ்சா போதை
'போதையின் பாதையில் இளைஞர்கள் செல்ல வேண்டாம்' என்று காணொளி பேசினால் மட்டும் போதைப்பொருட்கள் புழக்கம் ஒழிந்துவிடுமா? அல்லது தமிழ்நாட்டு இளைஞர்கள் அதைப் பயன்படுத்தாமல் தடுத்திடத்தான் முடியுமா? இளம் சிறார்கள் போதையில் கொடூர ஆயுதங்களுடன் தாக்கிய காணொளிக்கு திமுக அரசு என்ன பதில் கூறப்போகிறது? மது, கஞ்சா போதையைக் கட்டுப்படுத்தாது இன்னும் எத்தனை உயிர்களை திமுக அரசு பலி கொடுக்கப்போகிறது?
சட்டம் ஒழுங்கு
பட்டப்பகலில் படுகொலைகளும், பாலியல் வன்கொடுமைகளும் நடைபெறாத நாட்களே இல்லை என்னும் அளவுக்கு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு போதைப்பொருட்கள் புழக்கத்தால் முற்று முழுதாகச் சீரழிந்துள்ள நிலையில், திமுக அரசு கஞ்சா விற்பனையைத் தடுக்காததும், மது விலக்கை நடைமுறைப்படுத்த மறுப்பதும் ஏன்? மக்களின் நலனைவிட மதுவினால் வரும் வருமானம்தான் திமுக அரசிற்கு முதன்மையானதா? இதற்குப் பெயர்தான் திராவிட மடலா? வெட்கக்கேடு?
வடமாநில தொழிலாளி
ஆகவே, வடமாநில தொழிலாளி தம்பி சிராஜ் மீதான கொலைவெறித் தாக்குதல்போல இனி ஒரு கொடூர நிகழ்வு நடந்திடாமல் தடுத்திடவும், சீரழியும் தமிழிளம் தலைமுறையைக் காத்திடவும், மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்தி டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடுவதோடு, கஞ்சா விற்பனையை முற்று முழுதாக தடுக்க போர்க்கால அடிப்படையில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்." என கூறியுள்ளார்.
அஸ்ரா கார்க்
இந்நிலையில், திருத்தணியில் வட மாநிலத்தவர் என்பதால் இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை. முதற்கட்ட விசாரணையில் சிறுவர்கள் கஞ்சா பயன்படுத்தியது உறுதி செய்யப்படவில்லை.அவர்கள் போதை பொருட்கள் பயன்படுத்தினாரா என விசாரணை நடந்து வருகிறது என வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் கூறியுள்ளார்.
-
Land Rover Defender கான்வாயில் வரும் ஸ்டாலின் பெயரில் ஒரு வாகனம் கூட இல்லை! சீமான் சொத்து எவ்வளவு? -
"150 கிராம் தங்கம், ரூ.39 லட்சம் சொத்து.. ரூ.5.11 லட்சம் கடன்.." சீமானின் சொத்து மதிப்பு இதுதான் -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
Thirumavalavan: சிதம்பரம் இடைத்தேர்தல் செலவை திருமாவளவன் ஏற்பாரா? சீமான் கேள்வி -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. 0.9 கி.மீ உயரத்தில் நடந்த வானிலை மாற்றம்! சம்பவம் இருக்கு -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல்












Click it and Unblock the Notifications