அவன் புருஷனா? நான் புருஷனா? நீதிமன்றம்தான்-விஜயலட்சுமி, வீரலட்சுமி கோர்ட்டுக்கு வாங்க சீமான் ஆவேசம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தம் மீது கேவலத்தையும் அவதூறுகளையும் வாரி இறைக்கின்ற நடிகை விஜயலட்சுமி, தமிழர் முன்னேற்றப்படையின் வீரலட்சுமி உள்ளிட்டவர்கள் இனி நீதிமன்றத்தில்தான் பதில் சொல்ல வேண்டும். நீதிமன்றத்துக்கு வந்து சான்றுகளை காட்ட வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

சென்னையில் நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் மறைந்த தடா நா.சந்திரசேகரன் படத் திறப்பு நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. சென்னை திருவாடுதுறை டி.என். ராஜரத்தினம் கலையரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: தம்பி நான் வழக்கு போட்டிருக்கேன்ல.. நீதிமன்றத்துல வந்து சொல்லு.. 7 தடவை கருக்கலைச்சேன் காட்டு.. திருமணமாச்சு காட்டு... காட்டு..

Seeman condemns defamation remarks against in Actress Vijayalaksmi issue

ஆண்மை , திராணியற்றவன்: போருக்கு போகும் போது நல்லா உடற்பயிற்சி எல்லாம் எடுத்துட்டு உடல் வலிமையை ஏற்றிக் கொண்டு வருவாங்க.. தேர்தல் நடக்கும் போது வசூல் அதிகமாக நடக்கும் தம்பி.. என்னை எதிர்க்க துணிவில்லாதவர்கள், ஆண்மையற்றவர்கள், நேர்மையற்றவர்கள், என் கருத்துக்கு எதிர்க்கருத்து வைக்க திராணியற்றவன், சாக்ரடீஸ் சொன்னதைப் போல வாதத்தில் உன்னிடத்தில் தோற்பவன் அவதூறுகை கையில் எடுப்பான்.

பின்னணி இல்லாதவன்: உனக்கு ஒரு பேக்ரவுண்ட் இருக்கு. அய்யா ஸ்டாலின் உங்களுக்கு ஒரு பேக்ரவுண்ட் இருக்கு. உங்க அப்பா முதலமைச்சர்... உங்களுக்கு ஒரு பின்னணி. உங்க மகனுக்கு ஒரு பின்னணி. நீங்க இருக்கீங்க.. எடப்பாடிக்கு அவர் ஆரம்பிச்ச கட்சி இல்லை.. வேறு ஒருத்தர் ஆரம்பிச்ச கட்சி. எனக்கு என்ன பின்னணி இருக்கு? ஒரு ரூபா கிடையாது.. ஒரு பின்புலம் கிடையாது.

வெறி கொண்டு அடிக்கிறேன்: நான் அஜித்தோ, விஜய்யோ, கமல்ஹாசனோ, ரஜினியோ, எம்ஜிஆரோ கிடையாது. சாதாரண இயக்குநர். அதுவும் 5 படம் எடுத்தேன். 2 படம்தான் ஓடுச்சு.. 3 படம் ஓடலை... அப்படி இருக்கும் போது எந்த பின்புலம் இல்லாத நான் ஏறி அடிச்சு வருகிறேன் என்றால் எவ்வளவு வெறி இருக்கனும்? சும்மா வந்துட்டு அவரு இதை சொல்றாரு.. இவரு இதை சொல்றாருன்னு... என்னை எதிர்கொள்ள முடியலை.. எதையாவது எடுத்து
அவதூறு பரப்புவதுதான்.

தூரப் போடச் சொன்ன ஜெயலலிதா, எடப்பாடி: எனக்கு பெண்கள் வாக்கை குறைக்கனும்னு நினைக்கிற.. நீ போய் பாரு.. இந்த தேர்தல் 2024-க்கு அப்புறம் பாரு.. மொத்த கூட்டமும் என்பின்னாடிதான் நிக்கும். தம்பி, ஜெயலலிதா அம்மையார் இருக்கும் போது கொடுத்த குற்றப்பதிவு இது. அதை தூக்கி தூரப் போடுங்கன்னு சொன்னது அந்தம்மா. எனக்கு அதிகாரிங்க சொன்னது, என்னன்னு விசாரிக்க சொன்னாங்க.. நாங்களும் விசாரிச்சு இதே வேலைதான், இதுக்கு முன்னாடி இப்படி பல பேரை குற்றப்பதிவு செய்து பணம் பறிக்கிறதுதான் வேலை என சொன்னோம்..அதற்கு இதை தூக்கி தூர போடுங்க என ஜெயலலிதா அம்மையார் சொன்னங்க என்றனர். அதை பேசவே இல்லை. அய்யா எடப்பாடி 5 ஆண்டுகள் இருந்தாரே.. ஏன் தொடலை? அப்பவும் இதே மாதிரி பண்ணாங்க.. 2016 தேர்தல் அப்ப பேசுனாங்க.. 2019 தேர்தல் வந்தப்ப பேசுனாங்க..2021 தேர்தல் வந்தப்ப பேசுனாங்க.. 2024 தேர்தல் வருதா பேசுறாங்க..

அவன் புருஷனா? நான் புருஷனா?: 2010-க்குப் பின் தொடர்பு இல்லை. பிரிஞ்சு போயிட்டாங்க இல்லையா? அதற்குப் பிறகு எத்தனை பேரு? ஜெகதீஷ்னு ஒருத்தரை திருமணம் செய்து வாழ்ந்ததாக நீங்களே சொல்றீங்க.. அவன் புருஷன்னு வாழ்ந்தா அப்ப நான் யாரு? 2021-ல் அவனை திருமணம் செய்துக்கிறீங்க.. 2023-ல் மறுபடியும் சீமான் புருஷன்னு சொன்னா? என்ன என்னை சவளைப்பயன்னு நினைக்கிறீங்களா? போற வர்றவன் எல்லாம் சொந்தம் கொண்டாட? இது என்ன மாதிரியான முறையீடு தம்பி? இதை எப்படி இந்த சமூகம் ஏற்குது?

கேவலப்படுத்துவதை ரசிப்பதா?: 15 வருஷமா ஒரு பொம்பளை என்னை சொல்லிகிட்டே இருக்கு.. நீங்களும் அதை ரசிச்சு ரசிச்சு கேட்டுகிட்டே இருக்கீங்க... கேவலம்.. ஒரு கேவலம் இது.. அருவெறுக்கத்தக்கது. நீங்க வேங்கை வயலில் மனித கழிவை கரைச்சதை ரசிக்கிறீங்களா? எதிர்க்கிறீங்களா? என் வாழ்க்கையில் ஒரு பொம்பளை தொடர்ச்சியாக கழிவை கரைச்சுகிட்டே இருக்கிறா... நீங்க ரசிச்சுகிட்டே இருக்கீங்களே.. அதெப்படி?

நீதிமன்றத்துக்கு வா பதில் சொல்: இனி என்கிட்ட பதில் கிடையாது... நீதிமன்றத்துல வந்து சொல்லுங்க.. முக்தார், தமிழா தமிழா பாண்டியன், யூ டூ ப்ரூட்டஸ் உருட்டஸ் எல்லாம் அங்க வந்து சொல்லட்டும்.. அங்க வா... விஜயலட்சுமி, வீரலட்சுமி எல்லாம் வா! அங்க வந்து சொல்லு! நீதிபதிகிட்ட சொல்லு... சான்று காட்டனும்.. கேவலப்படுத்திகிட்டே இருந்தா.. ஒரு அளவு இருக்கு இல்லையா? உண்மையை சொல்லனும்ல.. உண்மையை சொல்லுங்க தம்பி. இவ்வாறு சீமான் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+