பெரியார்.. வாயை விட்ட சீமான்! வரிந்து கட்டிய பெரியாரிஸ்ட்! பரபரப்புக்கிடையேயும் திமுகவை விடலையே!
சென்னை: பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டை முற்றுகையிடப் போவதாகத் திரண்ட பெரியாரிய உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு இடையே திமுகவை விமர்சித்து காட்டமாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார் சீமான்.
புதுச்சேரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து சில கருத்துக்களை பேசியது தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து சீமானின் வீடு இன்று முற்றுகை இடப்படும் என தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், மே 17 இயக்கம் உள்ளிட்ட பல்வேறு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு அறிவித்தது.
இதை அடுத்து சீமான் வீடு உள்ள நீலாங்கரை முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து சீமானின் வீட்டை முற்றுகையிட வந்த பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் கைது செய்யப்பட்டனர். இந்த பரபரப்புகளுக்கு இடையே திமுகவை விமர்சித்து காட்டமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் சீமான். அதில்,"சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு பகுதியில் தமிழ்நாடு அரசின் சார்பில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்க தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள் தமது தந்தையின் பெயரில் அரங்கம் கட்டுவதற்காக மக்கள் வரிப்பணம் 525 கோடியை வாரி இறைப்பது எவ்வகையில் நியாயமாகும்? அரசுப் பள்ளிக்கூடங்களைச் சீரமைக்க போதிய நிதியில்லை என்று மாணவர்களின் பெற்றோர்களிடமும், மற்றவர்களிடமும் கையேந்தியதுபோக, தற்போது தனியார் பள்ளி நிர்வாகங்களிடமே கையேந்தும் அவலநிலைக்கு தமிழ்நாடு அரசு தள்ளப்பட்டுள்ளது. அரசுப்பள்ளி தொகுப்பூதிய ஆசிரியர் பெருமக்களைப் பணி நிரந்தரம் செய்து ஊதியம் வழங்க பணமில்லை;
அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க பணமில்லை; அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தற்காலிக செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்ய பணமில்லை; போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், பணப்பலன் வழங்க பணமில்லை; தூய்மைப்பணியாளர்கள், மின்வாரியம், குடிநீர் வாரியம், போக்குவரத்து, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை என்று அரசு ஊழியர்கள் பணி நிரந்தரமும், உரிய ஊதியமும் கேட்டு வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். அவர்களுக்குக் கொடுக்க பணமில்லை!
திமுக தேர்தல் வாக்குறுதியான அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியம் திட்டத்தை நடைமுறைப்படுத்த பணமில்லை; பொங்கல் விழாவிற்கு குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் கூட வழங்குவதற்குப் பணம் இல்லாத நெருக்கடியான நிதிச்சூழலில் 525 கோடிகளைக் கொட்டி ஆடம்பர அரங்கம் அமைப்பது தேவைதானா? யாரை மகிழ்விக்க இந்த கலையரங்கம்?
சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிக்குத் தேவையான திட்டங்கள் தொடர்பாக எந்தக் கோரிக்கை வைத்தாலும் நிதிநிலைமை பொறுத்து செய்யப்படும் என்று தட்டிக்கழிக்கும் திமுக அரசு, கலைஞர் பேனா, கலைஞர் நூலகம், கலைஞர் அரங்கம் என்று தங்கள் கட்சியின் முன்னாள் தலைவரின் நினைவைப் போற்றவும், கார் பந்தயம் நடத்தவும் பல நூறு கோடிகளைக் கொட்டுவதற்கு மட்டும் ஏது நிதி? யாருடைய நிதி?
மக்களின் வரிப்பணத்தை வீண் ஆடம்பரத்திற்காக விரயமாக்குவதுதான் திராவிட மாடலா? இந்திய ஒன்றிய அரசு நிதி தரவில்லை என்று ஒப்பாரி வைக்கும் திமுக அரசிடம் இப்படி வீணாக விரயம் செய்ய மட்டும் நிதி இருக்கிறதா? என்ற கேள்விகளுக்குப் பதில் உண்டா?
அறம் சார்ந்த நல்லாட்சியின் மாட்சிமையால் மக்கள் மனதில் நீங்காது நிலைபெற வேண்டுமே தவிர, மக்கள் மறந்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் வலிந்து திணிக்கப்படும், மக்களின் வரிப்பணத்தை வீணாக்கி நிறுவப்படும் இதுபோன்ற வீண் விரய விளம்பர அடையாளங்கள் மண்ணிலும் நீண்டகாலம் நிலைக்காது! மக்கள் மனதிலும் ஒருபோதும் நிலைக்காது!" என கூறியுள்ளார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications