கைது நடவடிக்கை, ஆண்மை பரிசோதனையில் இருந்து தப்பிய சீமான்!விஜயலட்சுமி கேஸில் போலீசில் ஆஜராகவில்லை!
சென்னை: நடிகை விஜயலட்சுமி தந்த திருமண மோசடி, பலாத்காரம் மற்றும் கருக்கலைப்பு புகார்கள் தொடர்பான விசாரணைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இன்று சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் ஆஜராகவில்லை. சீமான் தரப்பு வழக்கறிஞர்கள், அவர் ஆஜராகாத காரணத்தை விளக்கி கோயம்பேடு காவல் துணை ஆணையர் அதிவீரபாண்டியனிடம் கடிதம் கொடுத்தனர்.
தம்மை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பலாத்காரம் செய்தார்; பல முறை கருக்கலைப்புக்குள்ளாக்கினார் சீமான் என்பதுதான் நடிகை விஜயலட்சுமியின் புகார். இந்த புகார் அடிப்படையில் சென்னை வளசரவாக்கம் போலீசார் சீமான் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சீமான் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சீமான் மனுவை டிஸ்மிஸ் செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், பலாத்கார புகார் என்பதால் இது தீவிரமானது; விஜயலட்சுமியே புகாரை வாபஸ் பெற்றிருந்தாலும் போலீசாருக்கு விசாரணை செய்ய அதிகாரம் உண்டு. 12 வாரங்களில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
இதனடிப்படையில் சீமான் மீதான வழக்கை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். விஜயலட்சுமி வழக்கில் இதுவரை 15 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் பெங்களூரில் உள்ள விஜயலட்சுமியிடம் 3 மணிநேரத்துக்கும் மேலாக போலீசார் விசாரித்து வாக்குமூலம் பெற்றனர். இந்த விசாரணையின் போது, போலீசாரிடம் சீமானுக்கு எதிரான பல புதிய ஆதாரங்களை விஜயலட்சுமி கொடுத்ததாகவும் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இன்று சீமான் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. இன்று விசாரணைக்கு சீமான் ஆஜராகும் நிலையில் அவரிடம் ஆண்மை பரிசோதனை நடத்தவும் போலீசார் திட்டமிட்டிருந்தனர்; சீமானை கைது செய்து ஆண்மை பரிசோதனை நடத்துவது தொடர்பாகவும் போலீசார் சட்ட ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்று கோயம்பேடு காவல் துணை ஆணையர் அதிவீர பாண்டியனிடம் சீமானின் வழக்கறிஞர்கள் ஒரு கடிதம் கொடுத்தனர். அதில், சீமான் ஏற்கனவே திட்டமிட்ட சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருப்பதால் இன்றைய விசாரணைக்கு ஆஜராக இயலவில்லை; வேறு ஒருநாளில் விசாரணைக்கு ஆஜராவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இனால் சீமான், கைது நடவடிக்கை மற்றும் ஆண்மை பரிசோதனை ஆகியவற்றில் இருந்து இன்று தப்பி இருக்கிறார் எனவும் கூறப்படுகிறது
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications