அவ்ளோதான் முடிச்சு விட்டீங்க போங்க! அடுத்தடுத்து சீமானுக்கு ஷாக்! நாதகவில் விழுந்த விக்கெட்! இவரா?
சென்னை: ஏற்கனவே நாம் தமிழர் கட்சியில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள் விலகி இருக்கும் நிலையில் மகளிர் பாசறை காளியம்மாளும் விலக இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பேசிய அவர் விரைவில் அறிவிப்பேன் என்றே கூறினார். கட்சியில் இருந்து விலகவில்லை என கூறவில்லை. இந்நிலையில் சீமான் மீது நீண்ட நாட்களாக அதிருப்தியில் இருக்கும் நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் நத்தம் சிவசங்கரன் அக்கட்சியில் இருந்து விலக இருப்பதாக கூறப்படுகிறது .
கடந்த சில நாட்களாகவே நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் விலகல் புயலை கிளப்பி இருக்கிறது. அதற்கெல்லாம் முக்கிய காரணம் சீமான் பேசியதாக சொல்லப்படும் சில ஆடியோக்கள் தான். அவை சாட்டை துரைமுருகனின் போனில் இருந்து 'லீக்' செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியின் முன்னணி நிர்வாகியான சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார் அவர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது அவரது செல்போனில் இருந்து சில ஆடியோக்கள் எடுக்கப்பட்டு அவை கசிய விடப்பட்டதாக நாதகவினர் புகார் கூறி வருகின்றனர்.
அந்த ஆடியோக்களில் சீமான் பேசியது போல சில கருத்துக்கள் இடம்பெற்று சமூக வலைதளங்களில் கடும் விவாதம் ஏற்பட்டது. குறிப்பாக சீமான் கட்சியின் முன்னணி நிர்வாகியான மகளிர் பாசறை காளியம்மாள், கொள்கை பரப்பு செயலாளர் நத்தம் சிவசந்திரன் ஆகியோர் குறித்து சீமான் பேசியிருந்தது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அது சீமான் பேசியதே அல்ல என சிலர் கூறினாலும், அது சீமான் தான் என ஒரு சிலர் குற்றம் சாட்டினர். இதற்கிடையே நீண்ட நாட்களாகவே அதிருப்தியில் இருக்கும் காளியம்மாளும், நத்தம் சிவச்சந்திரனும் கட்சியிலிருந்து வெளியேறுவார்கள் என கூறப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட காளியம்மாள் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தில் இணைய இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அப்போது அந்த இணைப்பு நடக்கவில்லை.
இந்த நிலையில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் திமுக நிர்வாகிகளுடன் காளியம்மாள் கலந்து கொள்ள இருப்பதாகவும் அவர் கட்சியில் இருந்து வெளியேறி இருப்பதாகவும் கூறப்பட்டது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காளியம்மாள் விரைவில் அது குறித்து அறிவிக்கிறேன் என்றார். அதே நேரத்தில் கட்சியில் தான் நான் இருக்கிறேன் என பேசவில்லை. மேலும் நத்தம் சிவசங்கரனும் கட்சியில் இருந்து விலகி இருப்பதாகவும் கூறப்பட்டது.
ஏற்கனவே பல மாதங்களுக்கு முன்பே சிவசங்கரன் கட்சியில் இருந்து விலக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அதனை மறுத்திருந்தார். இந்த நிலையில் தற்போது காளியம்மாள் விவகாரம் தொடர்பாக பரபரப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் சிவசங்கரனும் கட்சியிலிருந்து வெளியேற இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று தேனியில் தாய் தமிழர் கட்சி சார்பில் முல்லை பெரியாறு உரிமை மீட்பு மாநாடு நடைபெற்றது. இதில் சிவசங்கரன் கலந்து கொண்டு பேசினார். அதில் தமிழ் தேசிய செயல்பாட்டாளர் என மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு முன்னர் அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் என்று குறிப்பிடப்பட்டு இருக்கும். ஆனால் இந்த நிகழ்ச்சியில் தமிழ் தேசிய செயல்பாட்டாளர் என குறிப்பிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல கடந்த சில மாதங்களாக நாம் தமிழர் கட்சி நிகழ்வுகளில் சிவசங்கரன் பங்கேற்காமல் இருந்து வந்ததும் கவனிக்கத்தக்கது.
இது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்க தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதும் அவர் அழைப்பை எடுக்கவில்லை. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு பேசியபோது நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறினாலும் திமுக அதிமுகவில் இணைய மாட்டேன். பிற கட்சிகளில் இணையப் போவதாக வெளிவரும் தகவல்கள் பொய். ஆனால் எனக்கு மன கசப்பு இருப்பது உண்மைதான். சீமான் பேசிய ஆடியோவும் உண்மைதான்" என சிவசங்கரன் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications