இதுதான் அரசியல் மாண்பு.. காரைக்குடியில் சீமான், தவெக பிரபு சந்திப்பு.. அருகில் நின்ற துரைமுருகன்!
சிவகங்கை: காரைக்குடியில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அந்த தொகுதியின் தவெக வேட்பாளர் பிரபு இருவரும் நேருக்கு நேர் சந்தித்து கொண்டுள்ளனர். களத்தில் இரு தரப்பும் கடுமையாக விமர்சித்து கொண்டிருந்த நிலையில், தற்போது கட்டிப்பிடித்து வாழ்த்து கூறி சென்றுள்ளனர். அப்போது சீமானுக்கு அருகிலேயே சாட்டை துரைமுருகன் நின்றிருந்தார்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தீவிரமாக் நடந்து வருகிறது. 234 தொகுதிகளில் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். பிற்பகல் 3 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 70% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. கோடை வெயிலிலும் மக்கள் ஜனநாயக கடமையை சிறப்பாக செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை சோழிங்கநல்லூர் தொகுதியில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது வாக்கினை மனைவியுடன் செலுத்தினார். இதன்பின் அங்கிருந்து உடனடியாக புறப்பட்டு காரைக்குடி தொகுதிக்கு வந்தார். காரைக்குடியில் ஒவ்வொரு வாக்குச்சாவடியாக சீமான் சென்று வாக்குப்பதிவை பார்வையிட்டார்.
அப்போது ஒரு வாக்குச்சாவடியில் இருந்து வெளியில் வரும் போது எதிரில் தவெக வேட்பாளர் பிரபு வந்தார். அவர் சீமானை நோக்கி நடந்து வர, சீமானும் பிரபுவை கண்டு கொண்டார். இதையடுத்து பிரவுவை கட்டியணைத்து சில நிமிடங்கள் பேசிய சீமான், அவரின் சட்டைக் காலரை சரி செய்து வாழ்த்து கூறி அனுப்பி வைத்தார். இந்த வீடியோவை நாதகவினர் அரசியல் மாண்பு இதுதான் என்று டிரெண்ட் செய்து வருகின்றனர்.
அப்போது சீமானுக்கு அருகில் சாட்டை துரைமுருகனும் நின்றிருந்தார். கடந்த சில நாட்களாக சீமான் மற்றும் பிரபு இடையில் காரசார மோதல் ஏற்பட்டது. விஜய்யை கடுமையாக விமர்சித்த சீமான், சாட்டை துரைமுருகன் மூலமாக பிரவுவையும் கடுமையாக சாடினார். இருந்தாலும் பிரபுவை நேரில் பார்த்த போது, எந்தவித உள்நோக்கமும் இல்லாமல் வாழ்த்தி அனுப்பி இருக்கிறார்.
ஆனால் சில நாட்களுக்கு முன் சீமான் மற்றும் கார்த்தி சிதம்பரம் இருவரும் ஒரே மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொண்டனர். அப்போது இவர்கள் இருவருமே சந்தித்து கொள்ளவில்லை. ஒருவரை ஒருவர் சந்திப்பதை தவிர்த்து சென்றனர். சீமானுக்கு அத்தனை கட்சிகளிலும் நண்பர்கள் இருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை கண்டுகொள்ளாமல் சென்றது பேசுபொருளாகியது குறிப்பிடத்தக்கது.
-
சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு அப்போ பவரே இல்லையா.. வழக்கு போட முடியாது! விசாரிக்கவும் முடியாதாம்! -
நேர்மையாக செயல்படுங்கள்.. இல்லைன்னா தொலைச்சிடுவேன்! நகராட்சி அதிகாரிகளுக்கு விஜய் எச்சரிக்கை -
எம்ஜிஆர், ஜெயலலிதா போலவே விஜய்யும்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் என்ன ஸ்பெஷல்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
யார் திட்டத்திற்கு யார் ஸ்டிக்கர் ஒட்டறது.. நிதி ஆயோக் கூட்டம்.. விஜய் மீது உதயநிதி விமர்சனம் -
காத்திருந்து காத்திருந்து..பனையூரில் பாழாய்ப் போன கனவுகள்! பதவி இல்லாமல் பரிதவிக்கும் ’தாவல்’ தலைகள்! -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
அரசு மருத்துவமனைகளில் புரட்சி.. இனி மொபைல் ஆப் மூலம் டோக்கன் முன்பதிவு.. விஜய் அரசின் புதிய முடிவு! -
திமுக எதிர்த்த VB-GRAM திட்டத்தை.. அமல்படுத்தும் விஜய் அரசு! தமிழகத்துக்கு ₹5,000 கோடி கூடுதல் சுமை -
ஸ்ரீவைகுண்டம் கொடூரம்: “யார் அந்த மேலிடம்? முதல்வரை தாண்டிய பவர் சென்டரா?" விஜய்க்கு எடப்பாடி கேள்வி -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
அனைத்து டெண்டர்களும் நிறுத்தம்.. புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட அறநிலையத்துறை முடிவு!











Click it and Unblock the Notifications