எம்ஜிஆர், ஜெயலலிதா போலவே விஜய்யும்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் என்ன ஸ்பெஷல்?
தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் ஆன்மிகமும் அதிகாரமும் எப்போதுமே ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையதாகவே இருந்து வருகிறது. அந்த வகையில், தனது மூன்று நாள் டெல்லி பயணத்தை முடித்துக் கொண்ட முதலமைச்சர் விஜய், இன்று காலை அங்கிருந்து புறப்பட்டு நேரடியாகக் கர்நாடக மாநிலம் மங்களூரு விமான நிலையத்திற்கு வந்து இறங்கியுள்ளார்.
மங்களூரிலிருந்து சாலை வழியாக உடுப்பியில் உள்ள புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று கொண்டிருக்கிறார். முதல்வரின் இந்தத் திடீர் ஆன்மிகப் பயணம், ஒட்டுமொத்தத் தமிழகத்தின் பார்வையும் கொல்லூர் நோக்கித் திரும்பியுள்ளது.

இக்கோவிலுக்கு போகும் தமிழ்நாட்டு முதல்வர்களில் விஜய் முதல் நபர் இல்லை, இதற்கு முன்பு தமிழ்நாட்டின் முதல்வர்களாக இருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரும் இக்கோயிலுக்கு சென்று வழிப்பட்டு உள்ளனர்.
கொல்லூர் மூகாம்பிகை கோவின் சிறப்புகள்
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில், கொடச்சாத்திரி மலையின் அடிவாரத்தில், சவுபர்ணிகா நதிக்கரையில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கொல்லூர் மூகாம்பிகை கோவில் அமைந்துள்ளது. ஆன்மிக ரீதியாக இத்தலம் மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுவதற்கு ஒரு முக்கியக் காரணம் உண்டு.
இங்கு பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவிகளின் ஒருங்கிணைந்த ஒரே வடிவமாக மூகாம்பிகை தேவியாக காட்சி அளிக்கிறார். கலை, வீரம், செல்வம் ஆகியவற்றின் ஒற்றை வடிவமாக காட்சி தருகிறார் மூகாம்பிகை தேவி. பத்மாசன கோலத்தில் அமர்ந்திருக்கிறார் மூகாம்பிகை தேவி.
எம்ஜிஆர் வழங்கிய 1 கிலோ தங்க வாள்
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் தனது திரையுலக மற்றும் அரசியல் வாழ்க்கையில் கடுமையான சவால்களையும், எதிர்ப்புகளையும் சந்தித்த காலகட்டங்களில், எதிரிகளைச் சமாளிக்கும் அசாத்திய ஆற்றலையும் மனவலிமையையும் பெறுவதற்காக இந்தக் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு வந்து தீவிரமாக வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
அவரது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறி அரசியலில் அசைக்க முடியாத நிலையை பெற்ற போது, கொல்லூர் மூகாம்பிகை தேவிக்குத் தனது நன்றிக்கடனாக 1 கிலோ எடையும் 2.5 அடி நீளமும் கொண்ட ஒரு பிரம்மாண்ட 'தங்க வாள்' ஒன்றைக் காணிக்கையாகச் செலுத்தினார். அந்தத் தங்க வாள் இன்றும் கோவிலின் கருவறையில் பத்திரமாக வைக்கப்பட்டு, அதற்குத் தனியாகச் சிறப்புப் பூஜைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
ஜெயலலிதா நடத்திய சண்டியாகம்
எம்ஜிஆர் காட்டிய அதே ஆன்மிகப் பாதையைப் பின்பற்றிய முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும் இந்த மூகாம்பிகை தேவியின் மீது அதீத பக்தி கொண்டிருந்தார். அரசியல் ரீதியாகத் தான் இழந்த அதிகாரம் மற்றும் பதவிகளைத் மீண்டும் பெறவும், அரசியல் எதிரிகளைத் தனது பாதையிலிருந்து முழுமையாக விலக்கவும் இக்கோவில்'சண்டியாகம்' நடத்தினார்.
அப்போது, எம்ஜிஆர் காணிக்கையாக வழங்கிய அந்தத் தங்க வாளைச் சிறிது நேரம் தனது கைகளில் ஏந்தி பிரார்த்தனை செய்து முக்கிய வரலாறு. அதன் பிறகு அவர் சந்தித்த அரசியல் வெற்றிகளும், 2011 முதல் தொடர்ந்து ஆட்சியைப் பிடித்தார்.
திருச்செந்தூர் முதல் கொல்லூர் வரை!
முதலமைச்சர் விஜய் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே, முருகப்பெருமான் அசுரர்களைப் போரில் வீழ்த்திய வரலாற்றுத் தலமான திருச்செந்தூருக்குச் சென்று எதிரிகளை வெல்ல வேண்டும் என்ற உத்தியுடன் தனிப்பட்ட முறையில் வழிபட்டார். நினைத்தது போலவே அவரும் போரில் வென்று தற்போது தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைத்துள்ளார்.
இந்த நிலையில், தற்போதைய பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் அரசியல் சவால்களுக்கு மத்தியில், யாரும் எதிர்பாராத வகையில் அவர் கொல்லூர் மூகாம்பிகையை வழிபடத் திட்டமிட்டுள்ளார்.
முதலமைச்சருக்குப் பலத்த 'ஜெட் பிளஸ்' (Z+) பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதால், பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்களின் தரிசனத்திற்குத் தற்காலிகத் தடை விதிக்கப்படுவதாக முதலில் அறிவிக்கப்பட்டு, பின்னர் அது ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் பாதுகாப்பு வளையங்களின் காரணமாக 2 மணி வரை பொதுமக்கள் வரக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
ஸ்ரீவைகுண்டம் கொடூரம்: “யார் அந்த மேலிடம்? முதல்வரை தாண்டிய பவர் சென்டரா?" விஜய்க்கு எடப்பாடி கேள்வி -
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. ஜூன் 15ல் நீதிமன்றத்தில் விசாரணை.. அடுத்தது என்ன? -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
234 மாவட்ட செயலாளர்.. விஜய் எடுக்கும் புதிய வியூகம்.. நிர்வாகிகளுக்கு போன மெசேஜ்.. பின்னணி என்ன? -
“கரண்ட்டே இல்ல.. விவசாயிகளை ஏமாற்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஜய்” - எடப்பாடி கடும் தாக்கு! -
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
விஜய் அதிரடி உத்தரவு! டெல்லி பயணம் முடித்த பின்பு முக்கியமான சேஞ்ச்! -
அம்மா கொடுத்த அனுமதி.. ரஜினியை போல் விஜய்யும் எனக்கு நெருக்கம்.. ராகவா லாரன்ஸ் சொன்ன வார்த்தை! -
1.5 டிரில்லியன் டாலர் இலக்கு.. ஸ்டாலின் வைத்த டார்கெட்டை உயர்த்திய விஜய்.. மோடியிடம் சொன்னது என்ன? -
கம்ப்ளைன்ட் கொடுக்க போன என் மீதே கேஸ் போட்டுட்டாங்க.. பிளான் பண்ணி பண்ணுறாங்க! ஜூலி ஆதங்கம் -
வருகிறது சென்னை டூ கன்னியாகுமரி HSR ரயில்.. விஜய் பிடித்த பாயிண்ட்.. மோடி மீட்டிங்கில் செம சம்பவம்!










Click it and Unblock the Notifications