2008-ல் மதுரை திருமணம்-ஹோட்டலில் சாந்தி முகூர்த்தம்: சீமான் ’வளைத்த’ கதை-போலீசில் விஜயலட்சுமி part-1
சென்னை: 2008-ம் ஆண்டு தமது குடும்ப பிரச்சனைக்காக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்ததாகவும் அப்போது தம்மை திருமணம் செய்து கொள்ள சீமான் அளித்த வாக்குறுதிகள், மதுரையில் நடந்த திருமணம், ஹோட்டலில் நடந்த சாந்தி முகூர்த்தம் ஆகியவற்றை சென்னை போலீசில் விரிவாக புகார் மனுவாக நடிகை விஜயலட்சுமி எழுதிக் கொடுத்துள்ளார்.
சென்னை போலீசில் நடிகை விஜயலட்சுமி எழுதி கொடுத்த புகார் மனுவில் இடம்பெற்றுள்ளதாவது: 2007-ம் ஆண்டு வாழ்த்துகள் திரைப்படத்தில் சீமான் இயக்கத்தில் நடித்தேன். இந்தத் திரைப்படம் மூலம் சீமான் என்க்கு அறிமுகம் ஆனால். அப்பொழுது என் அக்கா உஷாதேவி மகன் பிள்ளையை அக்கா கணவர் ராஜ்பாபு தூக்கி சென்றார். 2008-ல் என் அக்கா தி.நகர் காவல்நிலையத்தில், கணவர் ராஜ்பாபு மீது புகார் கொடுத்தார். ஆனால் ராஜ்பாபு அரசியல் பிரபலத்தில் இருந்ததால் சீமானிடம் உதவி கேட்டோம். சீமான் எங்களுக்கு சட்ட ரீதியாக உதவி செய்யவில்லை. என் அக்காவின் கணவர், எங்கள் குடும்பத்தில் ஆண் இல்லாத காரணத்தால் திடீர் திடீர் என எங்களுடன் சண்டை போட்டார். எங்கள் அக்காவை தாக்கினார். இதனால் நானும் என் வயதான தாயும் நிலை குலைந்து போயிருந்தோம்.

சீமானின் திருமண விருப்பம்: அப்போது சீமான், தமது நாம் தமிழர் கட்சி அலுவலகத்துக்கு எங்களை வரவழைத்தார். மேலும் "எனக்கு என யாரும் கிடையாது. எனக்கும் திருமணமாகவில்லை. எனக்கு வரதட்சணை எதுவும் வேண்டாம். உங்களைப் போன்ற ஈழத் தமிழர் பெண்ணுக்கு வாழ்க்கை கொடுப்பதே போதுமானது. அதுவே எனக்கு மன நிறைவைத் தரும் என சீமான் என்னிடம் கூறினார். நான் "என் தாய் விஜயா சண்முக சுந்தரம் பிள்ளைக்காகவும் என் உடன் பிறந்த சகோதரி உஷா தேவிக்காக மட்டுமே அர்ப்பணித்து வாழ்கிறேன். என் அக்காவும் அம்மாவும் சம்மதித்தால்தான் நான் உங்களை திருமணம் செய்வேன் என்றேன்.
அம்மாவிடம் வாக்குறுதி: பின்னர் சீமான், என் தாய், என் அக்காவிடம் " உங்களுக்கு ஒரு மகனாக இருப்பேன். உங்கள் மகள் விஜயலட்சுமியை நன்றாக பார்த்துக் கொள்வேன் என என் தாயாரிடம் கூறினார். என் தாயாரோ, உறவினர்களிடம் கலந்து பேசுகிறேன் என சொல்லிவிட்டார். அப்போது ஈழத் தமிழர் பிரச்சனையில் சீமான் கைது செய்யப்பட்டு பின் நிபந்தனை ஜாமீனில் மதுரையில் தங்கி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். மதுரை மாட்டுத் தாவணியில் 3 ஸ்டார் ஹோட்டலில் சீமான் தங்கி இருந்தார்.
மதுரைக்கு அழைப்பு: அப்போது என்னுடைய செல்போனுக்கு சீமான் தொடர்பு கொண்டு, "எனக்கு யாருமே இல்லை என்ற மனநிலை தோன்றுகிறது. அதனால் எனக்கு மிகவும் மன அழுத்தமாக உள்ளது என்றார். அத்துடன் என் வழக்கு தொடர்பாகவும் எனக்கு ஆதரவு சொல்லவும் யாரும் இல்லை என வருத்தப்பட்டார். மேலும் எனக்கு மனைவியாக வேண்டிய நீங்கள் என் பக்கத்தில் இருந்து ஆறுதல் கூறி என்னோடு இருந்தால் எனக்கு பக்க பலமாக இருக்கும் என்றார். என் தாயாரிடமும் சீமான் இதனையே கூறினார்.

மதுரையில் சீமானுடன் திருமணம், சாந்தி முகூர்த்தம்: பின் என் தாய் ஒப்புதலோடு, சீமான் ஏற்பாடு செய்த விமான டிக்கெட் மூலம் நான் சீமான் தங்கி இருந்த ஹோட்டலுக்கு சென்றேன். அங்கு அவரின் வழக்கு தொடர்பான பணிகளையும் செலவினங்களையும் நானே கவனித்தேன். சீமானும் அவரது ஆட்களும் என்னை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அழைத்து சென்றனர். அங்கு தாலி, மலர் மாலைகளுடன் கோவிலுக்குள் சென்று பூஜை செய்தோம். பின்னர் கோவிலுக்கு வெளியே நானும் சீமானும் மாலையை மாற்றிக் கொண்டோம். அங்கிருந்தவர்கள் மாங்கல்யம் கட்ட சொன்னார்கள். ஆனால் சீமான், நான் பெரியார் கொள்கையை பின்பற்றுபவன், நான் கிறிஸ்தவன். என்னுடைய கலாசாரத்துக்கும் கொள்கைக்கும் எதிரானது என்பதால் மாங்கல்யம் கட்ட முடியாது என்றார். அத்துடன் மாலை மட்டும் மாற்றிக் கொண்டோம். அன்று முதல் சீமானை நான் கணவராக ஏற்று நாங்கள் கணவன், மனைவியாக வாழ தொடங்கினோம். பின்னர் பிரபாகரன் தலைமையில் உலகம் போற்றும் வகையில் நாம் திருமணம் நடத்த வேண்டும்; அதுவரையில் யாரிடமும் திருமணத்தை தெரிவிக்க வேண்டாம் என்றார். அதே நாளில் எனக்கும் சீமாஅனுக்கும் அந்த ஹோட்டலில் பெரியவர்கள், உறவினர்கள் ஆசியுடன் சாந்தி முகூர்த்தம் நடைபெற்றது. இவ்வாறு நடிகை விஜயலட்சுமி சென்னை போலீசில் அளித்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications