"மாட்டுக்கறிய" சாப்பிடுவோம்.. இப்ப உனக்கென்ன பிரச்சனை? எங்க ஐயா இளையராஜாவை அவங்க.. சீமான் போட்ட போடு
சென்னை: "சாதி என்பது மனநோய் அதனை அடுத்த தலைமுறைக்கு கடத்தாமல் தடுக்க வேண்டும்" என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
சீமானின் பேச்சுக்கள் எப்போதுமே சோஷியல் மீடியாவில் முக்கிய இடத்தை பிடிக்கும்.. தமிழ் தேசியத்தை முன்வைப்பது ஒருபக்கம், திராவிட அரசியல் மீதான கடுமையான விமர்சனத்தை முன்வைப்பது மறுபக்கம் என இரு துருவங்களில் அவரது அரசியல் விடாமல் பயணப்பட்டு வருகிறது..
அந்தவகையில், சமீபத்தில் சீமான் பேசியிருந்த கருத்தினை, நாம் தமிழர் கட்சியினர் இணையத்தில் வைரலாக்கி கொண்டிருக்கிறார்கள்.. வழக்கம்போல் சீமான் பேச்சுக்கு ஆதரவு ஒருபக்கம், கருத்துக்கள் மறுபக்கமும் என குவிந்துகொண்டிருக்கிறது.

மாட்டுக்கறி: சீமான் பேசியபோது, "நாங்க மாட்டுக்கறி சாப்பிடுவோம்.. உனக்கென்ன? நாகரீகம் அடைந்த நாடுகளில் எல்லாம் முதன்மையான உணவு என்ன? பிரிட்டனில் என்ன உணவு? ஐரோப்பிய நாடுகளில் என்ன. அமெரிக்காவில் என்ன? ஆஸ்திரேலியாவில் என்ன? ரஷ்யாவில் என்ன- எல்லாருமே மாட்டுக்கறி சாப்பிடுவான்.. இந்திய நாடு அதிக அளவு ஏற்றுமதி செய்வதே மாட்டுக்கறிதானே? அதை எந்த நாட்டுக்கு ஏற்றுமதி செய்யுது? இஸ்லாமிய, கிறிஸ்தவர் நாடுகளுக்குதான்.
எங்கள் வீடுகளில் மாட்டுக்கறி சாப்பிடுவதில்லை.. நான் சென்னைக்கு வந்த பிறகு சாப்பிடுவேன்.. மாடுகளை, நாங்கள் உழவுக்கு பயன்படுத்தியதால், அதை குலதெய்வமாக கொண்டாடுவோம்,.. அதுவும் குடும்ப உறுப்பினராக.. ரேஷன் கார்டுல மாடு பெயரை சேர்த்தது தெரியுமா? எங்க ஊர்ல சேர்த்திருக்கோம்.. ஜல்லிக்கட்டு காளைகளை ரேஷன் கார்டுகளில் மாட்டுப்பெயர்களை சேர்த்திருப்போம்.. ரேஷன் கார்டுகளில் "மாடு" என்று எழுதுவதில்லை.. அந்த மாடுகளுக்கு பெயர் வெச்சிருப்போம்.. வீரன், கருப்பன், இப்படி பெயர்களை வெச்ச, கார்டில் சேர்த்திருப்போம். அதனால அவங்க சாப்பிடறது இல்லை.
நான் நகர்ப்புறத்துக்கு வந்தவிட்டபிறகு, உடற்பயிற்சி செய்வதால், புரோட்டீன் எடுக்க சொன்னாங்க.. அதனால் மாட்டுக்கறி சாப்பிடுவது வழக்க வழக்கம். அது எங்களுக்கு விலை குறைந்த உணவு... ஊக்கம் நிறைந்த உணவு. உழைக்கும் மக்களுக்கு வலு சேர்க்கும் உணவு.. இங்கே எல்லாரும்தானே சாப்பிடறாங்க.. கேரளாவில் எல்லாருமே சாப்பிடறாங்களே.. அது ஒடுக்கப்பட்ட உணவு என்று மட்டும் சொல்லக்கூடாது. இத்துனூண்டு ஆடு சாப்பிடறீங்க, கோழி சாப்பிடறீங்க, அவ்ளோ பெரிய மாடு சாப்பிட மாட்டீங்களா?

இளையராஜா: பொருளாதார அளவுகோல் என்பது மாறிக் கொள்ளக்கூடியது.. இன்றைக்கு நான் ஏழையாக இருக்கிறேன் என்றால், 10 ஆண்டுகளில் நான் அம்பானியாக, அதானியாக மாறிவிட முடியும்.. ஆனால், இன்றைக்கு பறையனாக இருக்கிற நான், நாளைக்கு எவ்ளோ பெரிய பணக்காரனாக மாறினாலும், அந்த பறையன்தான்.. எங்க ஐயா இளையராஜாவை எடுத்துக்குங்க.. இளையராஜாவை விட புகழ்பெற்ற, ஈடு இணையற்ற இசை மேதை இந்தநாட்டில் உண்டா? உலக அளவில் 10 பேர் இருந்தால், அதில் 2, 3 வது இடத்தில் எங்கள் மேதை இளையராஜா இருப்பார்.
ஆனால், நீ என்ன பண்றே? மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுக்கும்போது, அவருக்கு என்ன எழுதுறே? "ஈடு இணையற்ற ஒரு இசைக்கலைஞனுக்கு நாங்கள் இந்த பதவியை தந்தோம்" என்று சொல்லவில்லை.. "தலித்" என்பதால்தான் அந்த பதவியை தந்தோம் என்கிறாய்.. அப்படின்னா, நீ இவ்ளோ உயரத்துக்கு வந்தும், என் மேல நீ சுமத்தி வச்சிருக்கிற சாதி இழிவு ஒழியலேன்னா, இதையெல்லாம், எந்த செருப்பை வெச்சி அடிக்கிறது?
சாதி மறுப்பு திருமணம் செய்வதன் மூலமும் சாதியை ஒழிக்க முடியும். கலப்புத் திருமணம் என்ற சொல் தவறானது, கலப்பு திருமணம் என்றால் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் திருமணம் நடத்துவதை குறிக்கும். ஆனால் சாதி மறுப்பு திருமணம் என்ற சொல் தான் சரியானதாக இருக்கும். பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது சாத்தியமில்லாதது.
வேலைவாய்ப்பு மறுப்பு: பலமுறை அண்ணல் அம்பேத்கர் பாராளுமன்றத்தில் பேசி, தர்க்கம் செய்து, அதற்கு பிறகுதான் அவர்களுக்கு சரி என்று பட்டதால்தான், இடஒதுக்கீடு முறை தருகிறார்கள். எந்த சாதி அடிப்படையில் எனக்கு அரசியல், கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரம் மறுக்கப்பட்டதோ, பன்னெடுங்காலமாக, அதே குடி அடிப்படையில், கொடுக்கப்பட வேண்டும் என்று கொண்டு வந்ததுதான் இதெல்லாம்.. பொருளாதார அடிப்படையில் ஏழை - பணக்காரன் என்பதால் வரும் பிரச்சனை இது இல்லை.. அவன் இழிசாதி, கீழ்சாதி, தீண்டத்தகாதவன் என்பதால்தான்.
அதனால்தான், செருப்பு போடாதே, இந்த குளத்தில் குடிக்காதே, இந்த கோயிலுக்குள் வராதே. இந்த தெருவில் நடக்காதே. இதனால்தான் வந்தது. அப்படியானால் இதில் இருந்து மீளவேண்டுமானால் என்ன செய்வது? இடஒதுக்கீடு எதுக்காக கேட்கிறோம் என்பதை புரிஞ்சிட்டு பேசணும்.. சாதி என்பது மனநோய் அதனை அடுத்த தலைமுறைக்கு கடத்தாமல் தடுக்க வேண்டும்" என்று சீமான் அந்த வீடியோவில் பேசிக்கொண்டே செல்கிறார்..!!












Click it and Unblock the Notifications