சுதந்திரத் தீ... புரட்சியின் மறுபெயர்... சேகுவேராவுக்கு சீமான் வீரவணக்கம் #CheGuevara
Recommended Video
சென்னை: புரட்சியாளர் சேகுவேராவின் நினைவுநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீரவணக்கம் செலுத்தியுள்ளார்.
கியூபாவில் பிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து புரட்சியை வென்றெடுத்தவர் சேகுவேரா. கியூபா அமைச்சராக பதவி வகித்த போது இந்தியாவுக்கும் பயணம் மேற்கொண்டார் சேகுவேரா.

ஆனாலும் அமைச்சர் பதவியில் தொடர்ந்து நீடிக்காமல் லத்தீன் அமெரிக்கா நாடுகளின் விடுதலைக்கான போராட்ட களத்தில் இறங்கினார் சே. காடுகளும் ஆயுதங்களும் வாழ்க்கையாகிப் போன சேகுவேரா புரட்சியின் சின்னமாக அறியப்படுபவர்.
காட்டிக் கொடுப்புகளால் சுற்றிவளைக்கப்பட்டு சேகுவேரா வீழ்த்தப்பட்ட நாள் இன்று. சேகுவேரா நினைவுநாள் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.
கியூபா, பொலிவியா உள்ளிட்ட நாடுகளில் சேவுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வுகள் நடைபெற்றன. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
சேகுவேரா நினைவுநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது:
சுதந்திரத் தீ!
— சீமான் (@SeemanOfficial) October 9, 2019
புரட்சியின் மறுபெயர்!
உலகில் எந்த நாடு அடிமைப்பட்டுக் கிடக்கிறதோ? அந்த நாடெல்லாம் என் தாய்நாடு! என்று முழங்கிய தத்துவம்.
சரியானது வென்றே தீரும்! என்ற சரித்திர நாயகன்.
கியூப விடுதலைப் புரட்சியாளன்.#சேகுவேரா-வின் நினைவுநாள்
இன்று 09-10-2019
வீரவணக்கம்!#CheGuevara pic.twitter.com/WglKtbLuS5
சுதந்திரத் தீ!
புரட்சியின் மறுபெயர்!
உலகில் எந்த நாடு அடிமைப்பட்டுக் கிடக்கிறதோ? அந்த நாடெல்லாம் என் தாய்நாடு! என்று முழங்கிய தத்துவம்.
சரியானது வென்றே தீரும்! என்ற சரித்திர நாயகன்.
கியூப விடுதலைப் புரட்சியாளன்.
#சேகுவேரா-வின் நினைவுநாள்
இன்று 09-10-2019
வீரவணக்கம்!
#CheGuevara
இவ்வாறு சீமான் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications