"சீமான் மன்னிப்பு கேக்கலன்னா.. அடுத்து என்ன நடக்கும் தெரியுமா?" பரபரப்பை கிளப்பிய விஜயலட்சுமி
சென்னை: வரும் 24 ஆம் தேதிக்குள் சீமான் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் என்ன நடக்கும் தெரியுமா என்று நடிகை வீடியோ வெளியிட்டுள்ளார். செய்தியாளர்கள் கேள்விக்கு, "யார் சொன்னாங்க... எந்த நீதிபதி சொன்னாங்க... ஆதாரத்தை காட்டுங்க என்று ஒரே நொடியில் மீடியாவை முட்டாளாக்கிவிட்டு போகிறார். நீதிபதி சொல்லியதையே யார் சொன்னாங்க... அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை... என்று போகிறார் என்றால் நான் தான் எடுத்து சொல்ல வேண்டியிருக்கிறது" என்றும் அந்த நடிகை கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறிவிட்டு ஏமாற்றியதாக வளசரவாக்கம் போலீசில் பிரபல நடிகை ஒருவர் புகார் செய்தார். அதன் அடிப்படையில், சீமான் மீது 2011-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கடந்த 2023-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்
இந்த உத்தரவுக்கு எதிராக சீமான் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் 21-ந்தேதி மீண்டும் விசாரித்தது. சீமான் தரப்பில் வழக்கு விசாரணையை தள்ளிவைக்கக்கோரி ஏற்கனவே கடிதம் வழங்கி இருந்த நிலையில், நடிகை சார்பில் வக்கீல் ஆஜராகி பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக்கு இடமில்லை என்று கூறினார்.
இந்த வழக்கு கடந்த 12 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, நடிகையிடம் சீமான் வரும் 24ம் தேதிக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கோர தவறினால், சீமானை கைது செய்வதற்கான தடை ரத்து செய்யப்படும். வழக்கை எதிர்கொள்ள சீமான் தயாராக இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியது.
வீடியோ காலில் பார்த்துக்கொண்டு இருந்தேன்
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய சீமான், நடிகையிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என உச்சநீதிமன்றம் எதுவும் கூறவில்லை; அந்த தீர்ப்பை காட்டுமாறும் நிருபர்களிடம் சீமான் கேட்டார். இந்த நிலையில், சீமானை விமர்சித்து நடிகை பரபரப்பு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதி என்ன சொல்கிறார்கள் என்பதை வீடியோ காலில் பார்த்துக்கொண்டு இருந்தேன். சீமான் தரப்பு வழக்கறிஞர் சொன்னாங்க... விஜயலட்சுமி மீதான வழக்கை வாபஸ் வாங்கிக்கொள்கிறோம். இந்த வழக்கை முடித்துக்கொடுங்க என்று கேட்டாங்க... ஏன் இரண்டு பேரும் சமரசமாக போகவில்லை என்று நீதிபதிகள் கேட்டார்கள்.
மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தால்
அப்போது சீமான் தரப்பு வழக்கறிஞர் சொல்ல முடியாது அல்லவா... சமரசம் ஆகிறோம் என்றுதான் நான் ஆர்டர் வாங்கினேன். வெளியில் சீமான் சமரசம் ஆக மாட்டோம் என்று சொன்னதை சொல்ல முடியாது அல்லவா... அவர் தரப்பை அவர் விட்டுக்கொடுக்க கூடாது என்பதால் பழியை தூக்கி டக்குன்னு விஜயலட்சுமி ஒத்துக்கொள்ள மாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள் அப்படின்னு என் மேல பழி போட்டாங்க...
அப்போது நீதிபதி என்ன சொன்னார் என்றால்... இரண்டு பேரும் குழந்தைகள் இல்லை... இரண்டு பேரும் சண்டை போட்டுக்கொண்டே இருக்க வேண்டாம்... இரண்டு பேரையும், ஒரு ஒப்பந்தத்தில் போக சொல்லுங்க... விஜயலட்சுமிக்கு வரும் காலத்தில் தொந்தரவு கொடுக்க மாட்டோம் என்று 24 ஆம் தேதி ஒரு மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தால் இதை முடிப்பதற்கு என்று நீதிபதி சொன்னார்கள்.
ஆதாரத்தை காட்டுங்கன்னு சொல்றார்
இதை நானே பார்த்தேன். இதை சீமானிடம் மீடியாக்கள் கேட்ட போது, யார் சொன்னாங்க... எந்த நீதிபதி சொன்னாங்க... ஆதாரத்தை காட்டுங்க என்று ஒரே நொடியில் மீடியாவை முட்டாளாக்கிவிட்டு போகிறார். இப்போ அந்த மீடியா, கோர்ட்டு வீடியோவை காட்டிவிட்டு கேட்டு இருக்க வேண்டும். மக்களுக்கு எது உண்மை.. எது பொய் என்று குழம்பிக்கொண்டே இருக்கிறது.
நீதிபதி சொல்லியதையே யார் சொன்னாங்க... அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை... என்று போகிறார் என்றால் நான் தான் எடுத்து சொல்ல வேண்டியிருக்கிறது. நான் என்ன பண்ணிக்கொண்டு இருக்கிறேன் என்றால் உச்சநீதிமன்றம் சொல்வதை பின்பற்றுவேன் என்று சொன்னேன். சீமான் தான் இதை முடிக்க வேண்டும். சீமானும் சமாதானமாக முடித்தால்தான் அது முடியும். இல்லையென்றால் மீண்டும் சண்டை இருக்க போகிறது.
24 ஆம் தேதிக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும்
அதேதான் நடக்க போகிறது. பந்து தற்போது சீமான் இடத்தில் உள்ளது. சீமான் தான் இந்த அசிங்கத்தை முடிக்க வேண்டும் என்று நினைக்கனும். சண்டை போட்டுக்கிட்டு இருப்பேன் என்றால் இது முடிய போவது இல்லை.
மக்கள் குழம்ப வேண்டாம் என்பதற்காக நான் சொல்வது என்னவென்றால், 24 ஆம் தேதிக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. கேட்கவில்லை என்றால் மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்து மீண்டும் அந்த கலாட்டாதான் நடக்க போகிறது. நான் உண்மையைத் தான் சொல்லியிருக்கிறேன்" என்றார்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications