உங்களுக்குதான் கண்ணீரே இல்லை..எங்கிட்டு ரத்த கண்ணீர் வருது? கே.எஸ்.அழகிரி மீது சீமான் சரமாரி அட்டாக்
சென்னை: ராஜீவ் படுகொலை வழக்கில் 31 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். கே.எஸ். அழகிரியின் இந்த கருத்துகளுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன் விடுதலையை தமிழகத்தின் பல்வேறு அமைப்பினர் வரவேற்றுள்ளனர். பேரறிவாளன் தமிழகம் முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்டு அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து வருகிறார். இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் பேரறிவாளன் விடுதலைக்கு எதிராக வாயில் வெள்ளை துணி கட்டியும் அக்கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

இதற்கு கண்டனம் தெரிவித்த சீமான், ஈழத் தமிழர்களை படுகொலை செய்த இந்திய அமைதிப்படையை அனுப்பியதே ராஜீவ் காந்திதான். ஆகையால் ராஜீவ் காந்திதான் தவறு செய்தார். எங்களை இனப்படுகொலை செய்தது ராஜீவ் காந்திதான்.. காங்கிரஸ் அரசுதான் என சாடினார்.
மேலும் ராஜீவ் காந்தி என்ன தியாகியா? ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளானவர்தானே? என்றும் சீமான் பேசினார். சீமானின் இந்த கருத்துகளுக்கு காங்கிரசார் பதிலடி தந்து வருகின்றனர். திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் சீமான் கொடும்பாவியையும் காங்கிரஸ் தொண்டர்கள் எரித்தனர்.
இதனிடையே ராஜீவ் காந்தி நினைவுநாளான நேற்று ஶ்ரீபெரும்புதூரில் ராஜீவ் கொல்லப்பட்ட இடத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி நினைவஞ்சலி செலுத்தினார். அப்போது பேசிய அழகிரி, பேரறிவாளன் விடுதலையை கொண்டாடுவதை பார்த்தால் ரத்தம் கொதிக்கிறது என்றார்.
Recommended Video

இதற்கு தற்போது சீமான் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அதில், ரத்தக்கண்ணீர் வருவதாக சொல்கிறீர்களே கே.எஸ்.அழகிரி அவர்களே!
உங்களுக்கெல்லாம் கண்ணீரே இல்லையே அதில் எங்கே ரத்தம் வருவது? நீங்கள் அனுப்பிய ராணுவத்தால் எங்கள் நாடே ரத்தமாக ஓடியதே..
அதற்கு என்ன சொல்வது? நடந்த தவறுக்கெல்லாம் தொடக்கம் யாரென்று தனியாகஇருந்து யோசியுங்கள். உண்மைபுரியும்! என பதிலடி கொடுத்துள்ளார் சீமான்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications