எஸ்பி வருண்குமார் vs சீமான்- நாதக வழக்கறிஞர் பாசறை மாநிலச் செயலாளர் சேவியர் பெலிக்ஸ் திடீர் நீக்கம்!
சென்னை: திருச்சி எஸ்பி வருண்குமார் மற்றும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விவகாரத்தில் தற்போது நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை மாநிலச் செயலாளர் சேவியர் பெலிக்ஸ் அக்கட்சியில் இருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தம் மீது அவதூறு, தமக்கும் குடும்பத்தாருக்கும் கொலை மிரட்டல் உள்ளிட்டவைகளுக்காக சீமானுக்கு எஸ்பி வருண்குமார் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில்தான் சேவியர் பெலிக்ஸ், நாம் தமிழர் கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி சட்டசபை இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை இழிவுபடுத்தி பாடியதால் நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் சாட்டை துரைமுருகனின் செல்போனில் இருந்த சீமான் தொடர்பான பல்வேறு ஆடியோக்கள் வெளியாகின. இதற்கு திருச்சி எஸ்பி வருண்குமார்தான் காரணம் என நாம் தமிழர் கட்சியின் குற்றம் சாட்டினர்.

திருச்சி எஸ்பி வருண்குமாரை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பொது மேடைகளில் பெயரைக் குறிப்பிட்டு ஜாதிய கண்ணோட்டத்துடன் செயல்படுவதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். சீமான் உள்ளிட்டோரின் இந்த பேச்சுக்கு எதிராக திருச்சி எஸ்பி வருண்குமார் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். மேலும் திருச்சி தில்லை நகர் காவல் நிலையத்தில் சீமான், சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட 21 பேர் மீதும் எஸ்பி வருண்குமார் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் சிலர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் சீமான் சார்பாக நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை மாநிலச் செயலாளர் சேவியர் பெலிக்ஸ், திருச்சி எஸ்பி வருண்குமாரின் விளக்கம் கேட்ட நோட்டீஸுக்கு பதில் அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதில், எஸ்பி வருண்குமாரின் ஜாதி என்ன என்பதே தெரியாது; சாட்டை துரைமுருகன் பேச்சை நம்பி தாம் பேசியதாகவும் சீமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் அந்த விளக்க கடிதம் பரவியது. இதனால் சீமானுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
இந்த நிலையில்தான் நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டதாக அக்கட்சியின் வழக்கறிஞர் பாசறை மாநிலச் செயலாளர் சேவியர் பெலிக்ஸ் திடீரென நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக சீமான் அறிவித்துள்ளார் என சாட்டை துரைமுருகனின் @SaattaiOnline எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications