40, 50 கோடி செலவு பண்ணுவாங்க.. கையை கட்டிட்டாரு சீமான்! திரள்நிதி தான் கேக்குறாரு!உருக்கமாக வீடியோ
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளார். மேலும் இன்று கட்சியின் தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் தேர்தலை எதிர்கொள்ள நாம் தமிழர் நிதி வழங்க வேண்டும் என வீடியோ வெளியிட்டு இருக்கிறார் சீமான்.
2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தேர்தல் ஆணையத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திமுக, அதிமுக உள்ளிட்ட தனி பேச்சு வார்த்தைகளை தொடங்கி தொகுதி பங்கீடு வரை சென்றிருக்கின்றன.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் இந்த தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்டும் அல்லாமல் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ள அவர் இன்று கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

400 பக்கங்களுக்கு மேல் இருக்கும் இந்த அறிக்கையில் தமிழக நலன் சார்ந்த பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்று இருக்கிறது. இந்த நிலையில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள நாம் தமிழர் தம்பிகள் திரள்நிதி வழங்க வேண்டும் என உருக்கமாக வீடியோ வெளியிட்டு இருக்கிறார் சீமான்.
அதில்," வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடக்கவிருக்கின்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி எப்போதும் போல என் மக்களிடமிருந்து மக்களுக்காக வந்த ஒரு மகத்தான பேரியக்கம் மக்களை மட்டுமே நம்பி களத்திலே தனித்து நிற்கிறது. இங்கே பல ஆண்டுகள் அதிகாரத்தைச் செலுத்தி நிறைய பணத்தைச் சேமித்து பதுக்கி ஒதுக்கி வைத்திருக்கிற மற்ற அரசியல் கட்சிகள் மறுபடி அந்தப் பணத்தை முதலீடு செய்து அதிகாரத்தைத் தக்கவைக்க போராடும்.
ஒவ்வொரு தொகுதிக்கும் 30 கோடிகள் 40 கோடிகள் என்று முதலீடு செய்து அந்தத் தொகுதிகளை விலைக்கு வாங்க பார்க்கும். இந்தச் சூழலில் இந்தக் கேடுகெட்ட பணநாயகத்தை வீழ்த்தி மாண்புமிக்க ஜனநாயகத்தை மலரச் செய்ய வேண்டும் என்ற மகத்தான கனவோடு களத்திலே நிற்கிறோம் உங்கள் பிள்ளைகள்.
வாக்குக்குக் காசு கொடுக்கிற இந்த காலத்தில் ஒரு தொகுதியை வெல்ல 30 கோடிகள் முதலீடு செய்கிற ஒரு முதலாளி தன் லாப தேவைக்கு முதலீடு செய்வாரா? அல்லது மக்கள் சேவைக்கு முதலீடு செய்வாரா என்கிற கேள்வி அங்கே எழுகிறது. வாக்குக்குக் காசு கொடுக்கிற அந்த இடத்தில் தான் ஊழல் லஞ்சத்திற்கான விதை ஊன்றப்படுகிறது என்பது உங்கள் பிள்ளைகள் எங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை; உண்மையும் கூட. அந்த இடத்திலே சேவை செத்து போகிறது.
இப்போது இதை மாற்ற வேண்டும் என்று ஒரு பெருங்கனவோடு உங்கள் பிள்ளைகள் தொடர்ந்து களத்திலே நின்று போராடி வருகிறோம். 30 கோடிகள் முதலீடு செய்கிற வேட்பாளர்களுக்கு இடையில் போட்டியிடுகிற நாங்கள் அந்த வட்டி காசைக் கூட செலவு பண்ண முடியாத நிலையில் நின்று கொண்டிருக்கிறோம். ஆனால் மக்களுக்கு சேவை செய்ய பணம் தேவையில்லை தன்னலமற்று உண்மையும் நேர்மையுமாகப் பணியாற்ற வேண்டும் என்கிற மனம் இருந்தாலே போதும் என்பதை நிரூபிக்கத்தான் தொடர்ந்து உங்கள் பிள்ளைகள் இந்த களத்திலே நின்று வருகிறோம். இம்முறையும் அதே கனவோடு நிற்கிறோம்.
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழ்கின்ற உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்!
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) March 18, 2026
வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடக்கவிருக்கின்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி எப்போதும் போல என் மக்களிடமிருந்து மக்களுக்காக வந்த ஒரு மகத்தான பேரியக்கம் மக்களை மட்டுமே நம்பி… pic.twitter.com/Fk4ykLwHmd
எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியே! பசி-பஞ்சம், ஊழல்-இலஞ்சம், கொலை-கொள்ளை, சாதி இழிவு, தீண்டாமை, பாலியல் வன்கொடுமை, அடக்குமுறை, ஒடுக்குமுறை வளக்கொல்லை, மது-மதப் போதை இவை ஏதுமற்ற ஒரு புதியதொரு தேசம் செய்வோம்! மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம்! என்ற முழக்கத்தோடு களத்திலே நிற்கிறோம்.
எப்போதும் போல எமது மக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் தங்களால் இயன்ற நிதியைக் கொடுத்து எங்களை வலிமைப்படுத்தி இருக்கிறீர்கள். இம்முறையும் மக்களிடமிருந்து மக்களுக்காக வந்த பிள்ளைகளுக்கு எங்கள் பெற்றோர், எங்கள் உடன் பிறந்தோர் இனமாகவும் பணமாகவும் வலிமையாகவும் வளமையாகவும் நீங்களே நின்றிருக்கிறீர்கள் இம்முறையும் நிற்பீர்கள் என்று உங்கள் பிள்ளைகள் அன்போடு கேட்கிறோம்.
திரள்நிதி திரட்சியின் வாயிலாக உங்களால் இயன்ற உதவியைச் செய்து உங்கள் பிள்ளைகளின் கைகளை வலிமைப்படுத்திவிடுங்கள். களத்திலே நின்று நம் இன முன்னோர்கள் கண்ட கனவை வென்று முடிப்போம் என்கிற உறுதியைத் தருகிறோம்." என கூறியுள்ளார்.
-
வாங்கிய பட்டங்கள் போலியா? சிக்கலில் தவெக வேட்பாளர் சத்தியகுமார்? சர்ச்சையில் பொற்கொடி? -
திமுகவுக்கு ‘குட்பை'.. விஜயின் முன்னாள் மேனேஜர் திடீர் விலகல்.. ஸ்டாலினுக்கு கடிதம்.. என்ன காரணம்? -
பணிந்தார் கமல்ஹாசன்.. விருப்பமனு கட்டணத்தை திரும்ப வழங்குவதாக அறிவித்த மக்கள் நீதி மய்யம் -
“விசில் ஊதினால் போதும்.. குழந்தைகளுக்கு சளி நின்றுவிடும்”.. தவெக செங்கோட்டையன் விநோத பிரச்சாரம்! -
21 தொகுதிகளில் உதயசூரியனும் இல்லை.. இரட்டை இலையும் இல்லை.. தட்டி தூக்குகிறார்களா விஜய், சீமான்? -
கிளைமேக்ஸ் இதுதான்.. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று! வந்து குவிந்த 7400+ வேட்புமனுக்கள் -
பிரபல அரசியல்வாதி கரூரில் அரங்கேற்றிய B பிளான்.. தியாகராஜன் மனுவில் அந்த 1 பத்திரம்? ஆடிப்போன அறிவாலயம் -
அமைச்சர் துரைமுருகன் சொத்து மதிப்பு எவ்வளவு.. மனைவி பெயரில் மட்டும் ரூ.59 கோடி சொத்து! -
இவங்கதான் இப்போ லைம் - லைட்ஸ்.. தேர்தல் களத்தையே திரும்பி பார்க்க வைத்த பெண் தலைகள்.. பின்னணி -
யார் யாருக்கோ சீட்? தொண்டர்களைப் புறக்கணிக்கும் திருமா? - விசிகவில் வெடிக்கும் குழப்பம்! -
"ஜாதி பார்த்து வேட்பாளர்.. விசுவாசிகளுக்கு சீட் இல்லை” சசிகலா கட்சிக்குள் கொதிப்பு! கடுப்பில் தலைகள் -
ராணிப்பேட்டை திமுக வேட்பாளர் திடீர் மாற்றம்! மகனுக்கு பதிலாக அமைச்சர் காந்தி மீண்டும் களமிறங்குகிறார்












Click it and Unblock the Notifications