நீ இல்லைன்னாலும் கட்சி இயங்கும்டா- நான் செத்தாதான் நாம் தமிழர் கட்சியை உடைக்கவே முடியும்- சீமான்
சென்னை: நான் மரணித்தால்தான் நாம் தமிழர் கட்சியை இரண்டாக உடைக்க முடியும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
2009-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்டது முதல் பலரும் அதில் இருந்து வெளியேறி உள்ளனர். தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை மீது மாநில நிர்வாகி பேராசிரியர் கல்யாணசுந்தரம் அதிருப்தியை வெளியிட்டு வருகிறார்.
இது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகி இருக்கிறது. இந்த நிலையில் யூ டியூப் சேனல் ஒன்றுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்துள்ளார்.

எவன் நினைக்கிறானோ...
அதில் நாம் தமிழர் கட்சியின் உட்கட்சி விவகாரங்கள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன. இதற்கு சீமான் அளித்திருக்கும் பதில்: அடுத்து நான்தான்.. நான் இல்லைன்னா கட்சியே இல்லைன்னு எவன் நினைக்கிறானோ.. அவனை போடா... நீ இல்லைன்னாலும் கட்சி இயங்கும்டா அப்படின்னு ஒன்னு காட்ட வேண்டியது இருக்குது..

நயவஞ்சகம், சூழ்ச்சி
இப்படியான ஒரு நயவஞ்சகத்தை.. ஒரு சூழ்ச்சி துரோகத்தை உலகத்திலேயே நான் எங்குமே பார்த்தது இல்லை. எவ்வளவோ பேரை எதிர்த்து அரசியல் செய்திருக்கிறேன்..சிறைபடுத்தப்பட்டிருக்கிறேன். அப்ப கூட வேதனை இல்லை.. துளிகூட கலங்கியது இல்லை... ஆனால்...

என் சாவுக்காக காத்திருக்கிறார்கள்
சொந்த பிள்ளை மாதிரி வளர்த்த இவங்க வந்து.. அவர்கள் என் சாவை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். கட்சியில் ஆயிரம் பேர் வருவான் போவான்... 2 பேர் இல்லைங்கிறதால கட்சி உடைஞ்சிடுமா? சீமானை ரெண்டாக வெட்டினாலே ஒழிய கட்சி எப்படி உடையும்?

கட்சியை உடைச்சு காட்டு
சரி வா.. ஒரு பந்தயம் வெச்சுக்குவோம்.. ஒரு சேலஞ்ச்... எங்க கட்சியை இரண்டாக உடைத்துக் காட்டு... நான் எத்தனை முறையும் சாகத் தயாராக இருக்கிறேன்... அது எதிரிகள் கைகளால்.. என் உடம்பில் ஒரு சின்ன கீறலை கூட என் துரோகிகள் கைகளால் ஏற்க தயாராக இல்லை. இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications