“அண்ணாமலையின் கால்களை வெட்டுவேன் என்பதெல்லாம் கண்டனத்திற்குரியது” ராஜ்தாக்ரேவுக்கு சீமான் எதிர்ப்பு!
சென்னை: மும்பை உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் பேசியிருந்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, மும்பை குறித்து கூறியிருந்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு ராஜ்தாக்ரே கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், அண்ணாமலைக்கு சீமான் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
தேர்தல் பிரச்சாரத்தில், "மும்பை மராத்தியர்களின் நகரம் அல்ல, பன்னாட்டு நகரம்" என்று அண்ணாமலை பேசியிருந்தார். இதற்கு உத்தவ் சிவசேனா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. அதேபோல, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்ரே, "மும்பைக்குள் அண்ணாமலை கால் வைத்தால் கால்களை வெட்டுவோம்" என்று எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

மாநிலத்தின் முதன்மையான உரிமை
இதற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது x பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, "மண்ணின் மைந்தர்களே மண்ணை ஆள வேண்டும்" என்பதே ஒவ்வொரு தேசிய இனத்தின் இறையாண்மை கொள்கை! ஒவ்வொரு மாநிலத்தின் முதன்மையான உரிமை! அம்முழக்கங்களை முன்வைத்து மராட்டிய மாநில உரிமைக்காக சிவசேனா, போராடுவது 100 விழுக்காடு சரியானதே!
துணை நிற்க தயார்
அதேபோன்று மராத்திய மாநிலத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக போரிடும் சிவசேனா கட்சியின், தாய்மொழி கொள்கையும் 100 விழுக்காடு சரியானதே! தேசிய இனங்களின் உரிமைக்காக போராடும் அனைத்து தேசிய இன மக்களின் கருத்தோடும் உடன்படுகின்றோம். தேசிய இனங்களின் உரிமை மீட்புக்கான போராட்டத்தில் மராத்திய மாநில உரிமைக்காக குரல் கொடுக்கவும், துணை நிற்கவும் தயாராக உள்ளோம்!
காலை வெட்டுவேன் என்பது கண்டனத்திற்குரியது
ஆனால், மும்பை மாநகராட்சி தேர்தல் பரப்புரையின்போது, அம்மண்ணில் நின்று தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவர் தம்பி அண்ணாமலை, 'மும்பை மராத்தியர்களின் நகரம் அல்ல, பன்னாட்டு நகரம்' என்று பேசியது அவருடைய தனிப்பட்ட கருத்தாகும்; அதை ஏற்பதும், எதிர்ப்பதும் அவரவரின் சனநாயக உரிமை! ஆனால், மும்பைக்கு வந்தால் தம்பி அண்ணாமலையின் கால்களை வெட்டுவேன் என்பதெல்லாம் கடும் கண்டனத்திற்குரியது.
தம்பி அண்ணாமலை
தம்பி அண்ணாமலையின் கருத்தியல், கோட்பாடு அரசியல் நிலைப்பாட்டில் நாங்கள் முற்றிலும் முரண்படுகிறோம். அதற்கு நேர் எதிரான, அரசியலை நாங்கள் முன்னெடுக்கிறோம். இருப்பினும், தம்பி அண்ணாமலையின் கருத்தை கருத்தால் எதிர்கொள்வதற்கு பதிலாக, தம்பி அண்ணாமலை மும்பையில் கால்வைத்தால் வெட்டுவேன் எனும் கொடும்போக்கு ஒரு போதும் ஏற்புடையதல்ல.
வன்முறையை தூண்டும் பேச்சு
அண்ணாமலை ஒரு தனி நபர், ஒரு கட்சியைச்சேர்ந்தவர், குறிப்பிட்ட கொள்கையை ஏற்றவர் என்பதை மட்டும் கருத்தில்கொண்டு பேசுவது ஏற்புடையதல்ல; ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு தம்பி அண்ணாமலை என்ற தனியொருவரை மட்டும் அவமதிப்பதல்ல; ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதிப்பதாகும்; அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மக்களை வழிநடத்தும் மதிப்புமிக்கத் தலைவர் பெருமக்கள் வன்முறையை தூண்டும் வகையில் பேசுவது சரியானதல்ல;
அண்ணாமலை தமிழினத்தின் மகன்
கடந்த காலங்களில் ஆந்திர காட்டில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டபோதும் கேட்க நாதியில்லை; நடுக்கடலில் மீனவர்கள் தமிழர்கள் என்பதால் சுட்டுக்கொல்லப்பட்ட போதும் கேட்க நாதியில்லை; அப்படி ஒரு நிலை தமிழ் மண்ணில் இன்று இல்லை. அண்ணாமலை தனி நபரல்ல; முதலில் அவர் தமிழ்த்தேசிய இனத்தின் மகன்.
ராஜ்தாக்ரேவின் கருத்து கண்டிக்கத்தக்கது
தம்பி அண்ணாமலைக்கு கட்சி, அரசியல், கொள்கை, கோட்பாடு அனைத்தையும் கடந்து தமிழ் இனத்தின் மகனாக நாங்கள் துணை நிற்போம். தம்பி அண்ணாமலை குறித்த ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சுக்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது!" என்று கூறியுள்ளார்.
-
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
நாடியே அடங்கிடுச்சே.. அதிமுக கூட போட்ட டீலா? அண்ணாமலை எங்கே? நயினாரிடம் நறுக்கென்று கேட்ட பியூஸ்! -
பியூஸ் கோயல் சொன்ன வார்த்தை.. இறங்கி வந்த அண்ணாமலை.. பாஜக வேட்பாளராக சம்மதம்? என்ன நடந்தது? -
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ் -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
மொடக்குறிச்சி, திருப்பூர் தெற்கு செட் ஆகாது.. கோவையில் 1 தொகுதியை ஒதுக்குங்க.. அண்ணாமலை பிடிவாதம்! -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம்












Click it and Unblock the Notifications