“பைக் தரேன்.. கார் தரேன்னு சொல்றதுக்கு நான் என்ன பிக்காலி பயலா?” - விஜய்யை விமர்சித்த சீமான்
சென்னை: "பைக் தருகிறேன், கார் தருகிறேன் என கூறுவதற்கு நான் என்ன பிக்காலி பயலா? வீட்டுக்கு ஒரு கார் தருகிறேன் என கூறியுள்ளார் விஜய். வெற்றி பெற்றதற்கு பிறகு பொதுமக்கள் கேள்வி கேட்டால் அனைவரின் வீட்டிற்கும் அம்பேத்கர் போட்டோவை அனுப்பி வைப்பார். இதில் கார் உள்ளது என கூறுவார்." என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் இன்று கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக முத்துகேசவன், பரமக்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக எழில் இளவரசி ஆகியோரையும் வேட்பாளர்களாக அறிமுகம் செய்தார்.

அதைத்தொடர்ந்து பேசிய சீமான், "சிவன் ஆட்டத்தை பார்த்து இருப்பீர்கள், அதையும் சினிமாவில் தான் பார்த்திருப்பீர்கள். சீமானின் ஆட்டத்தை இந்த களத்தில் பார்ப்பீர்கள். எனது ஆட்சியில் பசி இல்லாத நாடு, அனைவருக்கும் வேலை, மருத்துவம், படிப்பை எப்படி கொடுத்துள்ளேன் என காண்பிப்பேன். மோட்டார் பைக் தருகிறேன், கார் தருகிறேன் என கூறுவதற்கு நான் என்ன பிக்காலி பயலா?
வீட்டுக்கு ஒரு கார் தருகிறேன் என கூறியுள்ளார் விஜய். வெற்றி பெற்றதற்கு பிறகு பொதுமக்கள் கேள்வி கேட்டால் அனைவரின் வீட்டிற்கும் அம்பேத்கர் போட்டோவை அனுப்பி வைப்பார். இதில் கார் உள்ளது என கூறுவார். அண்ணல் அம்பேத்கர் தான் உலகின் சிறந்த கார் என கூறுவார். வரும் தேர்தலில் ஒன்று நான் ஆட்சி அமைப்பேன், இல்லை என்றால் என் தயவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது.
பிப்ரவரியில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது, இந்த நிலையில் செங்கோட்டையன் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. அதிமுகவில் கட்சி பதவி தேவை இல்லை என்பதால் அவர் வேறு கட்சிக்கு செல்லலாம். நான் ஆசிரமங்கள், மடங்களில் இருந்து வரவில்லை, நான் ஒரு காட்டான், எங்களை கொஞ்சம் கொஞ்சமாக பக்குவப்படுத்தி மேலே ஏறி வந்துள்ளோம்.
செய்தியாளர்கள் நல்ல கேள்விகளை கேட்டால் நல்ல பதிலை நான் சொல்லுவேன். அழகான கேள்வியின் குழந்தை தான் நல்ல பதில். கோபப்படாமல் இருந்திருந்தால் நான் கோடம்பாக்கத்தில் இருந்து நல்ல படங்கள் எடுத்து பிழைத்திருப்பேன். கோபம் தான் என்னை இங்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது." எனப் பேசியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் விரைவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு தீவிரமாக தயாராகி வருகிறார். இதையொட்டி தனது பிரசார பயணத்தையும் மேற்கொண்டு வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி கரூரில் நடந்த விஜய்யின் பிரச்சார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இதனால் விஜய் தனது பிரச்சார பயணத்தை தள்ளி வைத்திருந்தார். உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரையும், காயமடைந்தவர்களையும் ஒரு மாதம் கழித்து நேரில் வரவழைத்து ஆறுதல் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து காஞ்சிபுரத்தில் தனியார் கல்லூரியில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார் விஜய். அப்போது பேசிய விஜய், "நமது ஆட்சியில் அனைவருக்கும் நிரந்தர வீடு இருக்க வழிவகை செய்யப்படும். வீட்டிற்கு ஒரு மோட்டார் பைக் இருக்கும் வகையில் வழிவகை செய்யப்படும். காரும் தான் லட்சியம். அதற்கான வளர்ச்சிக்கு பொருளாதார வசதிக்கு வழி வகை செய்ய வேண்டும்.
வேலைவாய்ப்பை பெருக்கும் வகையில் தமிழக பாட திட்டத்தை மாற்ற வேண்டும். அரசு மருத்துவமனைகளுக்கு மக்கள் அச்சமின்றி செல்ல வேண்டும். வீட்டில் ஒருவர் பட்டப்படிப்பை முடித்திருக்க வழிவகை செய்யப்படும். விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க வழி வகை செய்ய முழுமையான பாதுகாப்பு திட்டத்தை உருவாக்க வேண்டும்" எனப் பேசினார்.
-
"சுடுகாடு பக்கத்துல டாஸ்மாக் வையுங்க CM சார்!" – விஜய்யிடம் பார்த்திபனின் 'சைக்கலாஜிக்கல்' அஸ்திரம் -
விஜய் ஜெயிச்சு ஒரு மாசம் ஆச்சு.. இன்னும் CM ஸ்டாலின் தானா? போலீஸ் செய்த பெரும் பிழை! கொந்தளித்த தவெக -
Perambur Power Cut: பவர் இல்லை சிஎம்! பெரம்பூர் பகுதியில் 3 நாட்களாக தொடர் மின்வெட்டு! தூக்கத்தை தொலைத்த மக்கள் -
இவ்வளவு ஆதரிச்சதே அதிகம்.. இன்னும் கொஞ்சம் வேணுமாம்! அரசியல் பேரிடர்.. விஜய்யை இறங்கி அடித்த சீமான் -
இரக்கமே காட்டாதீங்க.. கேஸை போடுங்க.. திமுக மாஜி அமைச்சர்களுக்கு விஜய் செக்.. வரிசையாக ஆக்சன் -
விஜய் Vs உதய் Vs அண்ணாமலை? திராவிடக் கடப்பாரைகளை வளைத்த Gen Z! இளைஞர்களால் மாறும் அரசியல் களம்! -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
கள்ளச் சாராயத்தை ஒழிக்க விஜய் போட்ட மெகா பிளான்.. நேரடியாக களத்தில் இறங்கிய ஆதவ் அர்ஜுனா! -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
விஜய் வென்றதும் மக்கள் மீது திடீர் பாசமா? லதா ரஜினிகாந்தின் புதிய இயக்கத்தை சீண்டிய ப்ளூ சட்டை மாறன்












Click it and Unblock the Notifications