தேர்தல் இல்லாத காலத்தில் கூட.. அனல் பறக்குதே! இதாங்க தமிழ்நாடு அரசியல்! 10 நாளில் எல்லாம் மாறிடுச்சே
சென்னை: தமிழ்நாடு அரசியலில் கடந்த 10 நாட்கள் முதல் 2 வாரங்களில் ஏகப்பட்ட திருப்பங்கள், மாற்றங்கள் நடந்து உள்ளன. அதிலும் தேர்தல் நடக்காத ஒரு காலத்தில் எதிர்பாராத அரசியல் சூழ்நிலைகள், மோதல்கள், களேபரங்கள் நடந்து உள்ளன. அந்த விவகாரங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.
சம்பவம் 1
அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்காக எடப்பாடி பழனிச்சாமிக்கு விவசாயிகள் எடுத்த பாராட்டு விழாவில் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை. விழாவை அவர் புறக்கணித்தது சர்ச்சையாகியிருக்கிறது.

உள் கட்சி பூசல் தான் காரணம் என சொல்லப்பட்டது. அதற்கேற்ப, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் வைக்கப்படாததால் செல்லவில்லை என செங்கோட்டையன் சொல்கிறார். அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் புகைப்படம் இல்லாததால் அந்த விழாவை புறக்கணித்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். நாங்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டவர்கள். எங்களை வளர்த்து ஆளாக்கிய தலைவர்களின் படங்கள் விழாவில் இல்லை. அதனால் அந்த கூட்டத்திற்கு நான் செல்லவில்லை என்று கூறி உள்ளார்.
உண்மையான காரணம் அது கிடையாது என்கின்றனர் அதிமுகவினர். நம்மிடம் பேசிய சீனியர் ஒருவர், "2026-ல் அதிமுக ஆட்சியைப் பிடிக்க வேண்டுமானால் கட்சியில் ஒற்றுமை இருக்க வேண்டும். பிரிந்தவர்கள், நீக்கப்பட்டவர்கள் கட்சியில் மீண்டும் சேர்க்கப்பட வேண்டும் என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார் செங்கோட்டையன். கடந்த 1 வருடமாக சசிகலாவுடம் நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறார். சசிகலாவின் எண்ணத்தை பிரதிப்பலிப்பதைப் போலவே செங்கோட்டையனின் சமீபகால நடவடிக்கைகள் இருக்கின்றன. செங்கோட்டையன் கொங்கு மண்டலம். அதே எடப்பாடியின் அதே ஜாதி பின்புலத்தை சேர்ந்தவர். செங்கோட்டையனுக்கு எடப்பாடியை விட அவர் ஜாதி பின்புலத்தில் அதிக பவர் உள்ளது. செங்கோட்டையன் சீனியர் என்பதால்.. அவருக்கு உட்கட்சி சப்போர்ட் அதிகம் இருக்கும் என்பதால் சர்ச்சை ஏற்பட்டு உள்ளது.
சம்பவம் 2
தமிழக வெற்றிக் கழக முதலாண்டு ஆண்டு நிகழ்வு விழா பெரிய அளவில் கவனம் பெற்றது. இதில் பிரஷாந்த் கிஷோர் விஜய் உடன் மேடை ஏறியது கவனிக்கப்பட்டது. முக்கியமாக பிரஷாந்த் கிஷோர் இந்த விழாவில் விஜய் கட்சிக்கு ஆலோசனை வழங்க போவதில்லை.. ஆனால் விஜய்க்கு ஆலோசனை வழங்குவேன் என்று கூறினார். இந்த நிகழ்வில் தமிழக வெற்றிக் கழகத்தை ஆதரித்து பேசிய போதிலும்.. அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர், இன்று தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் இருந்த தீர்மான போர்டில் கையெழுத்திட மறுத்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அவர் இப்படி கையெழுத்து போட மறுத்ததற்கு பின் முக்கியமான சில காரணங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. புதிய கல்வி கொள்கை, மும்மொழி திட்ட திணிப்பு சேர்த்து முக்கிய அவலங்களை எதிர்த்து போராட இவர்களை #GETOUT செய்திட உறுதி ஏற்போம் என்ற தலைப்பின் கீழ் இந்த போர்ட் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த போர்டில், இந்தி திணிப்பை ஆதரிக்கும் புதிய கல்விக்கொள்கை, வாக்கு வங்கி சாதி அரசியல் ஆகியவற்றை எதிர்க்கும் வகையில் வரிகள் இருந்தன. இதன் காரணமாகவே பிரஷாந்த் கிஷோர் இந்த போர்டில் கையெழுத்து போட மறுத்துவிட்டார் என்று கூறப்படுகிறது.
சம்பவம் 3
முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்வதற்காக 28-ந்தேதி முதல்வரின் இல்லத்தில் அவரை சந்தித்து வாழ்த்துச் சொன்னார் மு.க.அழகிரி. தனது பேரனுடன் (கயல்விழியின் மகன்) சென்று சகோதரரை அழகிரி வாழ்த்தினார். நீண்ட மாதங்களுக்குப் பிறகு ஸ்டாலினும் அழகிரியும் சந்தித்தது பரபரப்பானது.
ஸ்டாலினை பிறந்த நாளில் அழகிரி சந்தித்தது, பாசத்தினால் என்றாலும் முக்கிய விசயத்திற்காகவே இந்த சந்திப்பு நடந்துள்ளது என்கிறார்கள் தகவலறிந்துள்ள திமுகவின் சீனியர்கள். அதாவது, கட்சியிலிருந்து நீக்கப்பட்டப்பிறகு தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார் அழகிரி. கலைஞரின் மறைவுக்குப் பிறகு இந்த ஒதுங்குதல் சற்று கூடுதலாகவே இருந்தது. இந்த நிலையில்தான் இந்த சந்திப்பு மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றது.
சம்பவம் 4
இன்னொரு பக்கம் சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழித்து போலீசாருடன் தகராறு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோர்ட் ஒட்டும் சம்மனை கிழிக்க கூடாது என்ற விதி உள்ளது.
ஆனால் அதை மீறி நடிகை பாலியல் வழக்கில், சீமான் விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கைது செய்ய நேரிடும் என அவரது வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்டது. சம்மன் கிழித்தது குறித்து விசாரணை மேற்கொள்ள வந்த காவல் ஆய்வாளரை சீமான் வீட்டு காவலாளி தாக்கியதால் அவரை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தது போலீஸ்.
சீமான் காவலாளி மிரட்டல்
விசாரணைக்கு வந்த போலீசாரை சீமான் வீட்டின் காவலாளி தாக்கியதுடன் துப்பாக்கியை காட்டி மிரட்டல் விடுத்தார். இதையடுத்து போலீசார் அங்கே வந்து காவலாளி சுபாகர், அமல்ராஜ் இருவரையும் கைது செய்தனர். அதோடு அவரின் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். சென்னை உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவுக்கு தடைக்கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு நாளை (மார்ச் 3) விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கில் சீமானுக்கு ஆதரவாக மிக முக்கியமான வழக்கறிஞர் ஒருவர் ஆஜராக உள்ளார்.
பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது என்பதால், அப்புகாரை தன்னிச்சையாக திரும்ப பெற முடியாது எனக் கூறி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். சீமானிடம் போலீசார் 1 மணிநேரம் 15 நிமிடங்கள் வரை விசாரித்துவிட்டு அனுப்பினர். இதற்கிடையே தான் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடைக்கோரியும், நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும் சீமான் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நாளை இந்த வழக்கில் விசாரணை நடைபெற உள்ளது.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications