வெயில் கொளுத்துது.. பள்ளிகளை ஜூன் 15க்குப் பிறகே திறக்க வேண்டும்.. அரசுக்கு சீமான் கோரிக்கை!
சென்னை : "தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. எனவே பள்ளிகளை ஜூன் ஒன்றாம் தேதியில் இருந்து 15 நாட்கள் கழித்து திறக்க வேண்டும்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் மாதம் 1-ஆம் தேதி திறக்கப்படும். அதேபோல தான் நடப்பு ஆண்டும் ஜூன் 1-ஆம் தேதி 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்றும், 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5-ல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

ஆனால் தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் தற்போதும் அதிகமாக உள்ளது. இதனால் பெரியவர்கள் கூட வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் உள்ளது. ஆகவே, தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி தள்ளிப்போகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. எனவே பள்ளிகள் திறப்பதை மாற்றி அமைக்க வேண்டும். பள்ளிகளை ஜூன் ஒன்றாம் தேதியில் இருந்து 15 நாட்கள் கழித்து திறக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக பாமக நிறுவனர் ராமதாஸும் பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். தமிழ்நாட்டின் பல பகுதிகளில் 42 டிகிரி செல்சியசுக்கும் மேல் வெப்பம் வாட்டி வரும் நிலையில், அரசுப் பள்ளிகளை ஜூன் 1ஆம் தேதி திறப்பது எந்த வகையில் நியாயம் என்று ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.
ஆனால், தற்போது வரை பள்ளிக்கல்வித்துறை, ஜூன் 1ஆம் தேதி பள்ளிகளைத் திறப்பதில் உறுதியாக உள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "ஏற்கனவே திட்டமிட்டபடி தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்படும். ஜூன் 1ஆம் தேதி ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும். ஜூன் 5ஆம் தேதி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும்" என்று தெரிவித்தார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications