பணிநிரந்தரம் கோரிய பகுதிநேர ஆசிரியர்கள்.. அடக்குமுறையை ஏவுவதா? ஆதரவாய் வந்த நாம் தமிழர் சீமான்!
சென்னை: பணிநிரந்தரம் கோரிய பகுதிநேர ஆசிரியர்கள் மீது அடக்குமுறையை ஏவுவதா? நியாயமான கோரிக்கைகளைப் புறந்தள்ளி வஞ்சிப்பதா? என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பகுதிநேர ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலித்து, அவர்களை உடனடியாகப் பணிநிரந்தரம் செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," பணிநிரந்தரம் உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டமன்றத்தை முற்றுகையிடும் அறப்போராட்டத்தை முன்னெடுக்க இருந்த பகுதிநேர ஆசிரியர்களைக் கைதுசெய்துள்ளது அரசு.

ஆசிரியர்கள் மீது அடக்குமுறையை ஏவிய திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் மிக நியாயமானவையாகும். நாம் தமிழர் கட்சி அதனை முழுமையாக ஆதரிக்கிறது.
ஒரு நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சிற்பிகளாக விளங்குபவர்கள் ஆசிரியப்பெருந்தகைகள். அந்த ஆசிரியப்பெருந்தகைகளே வீதிக்கு வந்து தங்களது உரிமைகளுக்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும் போராட வேண்டியிருப்பது பெரும் இழிநிலையாகும். அறிவுக்கருவறையைத் தீர்மானிக்கும் ஆசிரியப்பெருமக்களது நியாயமான குரலுக்குச் செவிசாய்க்க மறுத்து, அவர்களை அரசதிகாரம் கொண்டு அடக்கி ஒடுக்க முற்படுவது பெரும் கொடுங்கோன்மையாகும். பணவீக்கமும், விலைவாசி உயர்வும் உச்சத்திலிருக்கும் தற்காலப் பொருளாதாரச் சூழலில், வெறும் 12,500 ரூபாய் எனும் சொற்ப வருமானத்தில் அவர்களைத் தற்காலிகப் பணியாளர்களாக வைத்திருப்பது ஏற்கவே முடியாத உழைப்புச்சுரண்டலாகும்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என வாக்குறுதியளித்து அவர்களின் வாக்குகளைப் பெற்று, அதிகாரத்திற்கு வந்த திமுக, இன்றைக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற மறுத்து, போராடுவோரை அதிகாரப்பலம் கொண்டு அடக்க முற்படுவது சனநாயகத்துரோகமாகும். ஒவ்வொரு முறையும் ஆசிரியப் பெருமக்கள் போராட்டம் நடத்தும்போதெல்லாம் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் முனைப்புக் காட்டாது, போராட்டத்தை சிதைப்பதிலேயே கவனமாக இருப்பதும், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாது இழுத்தடித்துக் காலங்கடத்துவதும் அட்டூழியத்தின் உச்சமாகும்.
12 ஆண்டுகளுக்கும் மேலாகப் பகுதிநேர ஆசிரியர்களாகப் பணிபுரியும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் கேட்பதற்கான முழு உரிமையுண்டு. 3 ஆண்டுகள் பணிபுரியும் பணியாளர்களையே, பணிநிரந்தரம் செய்ய நீதிமன்றங்கள் வழிகாட்டும்போது, பள்ளிக்கல்வித்துறையில் 12 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்து வரும் ஆசிரியப்பெருமக்களை பணிநிரந்தரம் செய்யாதிருப்பது பெரும் அநீதியாகும். பணி நிரந்தரம், பழைய ஓய்வூதிய நடைமுறை உள்ளிட்டக் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதி அளித்து, பகுதிநேர ஆசிரியர்கள், அரசு ஊழியர்களாக இருக்கும் ஆசிரியர்கள் உள்ளிட்டோரின் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த திமுக, இன்றைக்கு அவ்வாக்குறுதிகள் யாவற்றையும் காற்றில் பறக்கவிட்டுட்டு, வஞ்சகத்தை விளைவிப்பது அரசியல் அறத்துக்கே புறம்பானதாகும்.
ஆகவே, பகுதிநேர ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலித்து, அவர்களை உடனடியாகப் பணிநிரந்தரம் செய்ய வேண்டுமென திமுக அரசை வலியுறுத்துகிறேன்." என கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications