ஜாதி ரீதியாக கொங்கு நாடு மாநிலமா? இந்தியாவை 2 ஆக பிரியுங்க...இறங்கி நானும் விளையாடவா? சீமான் காட்டம்
சென்னை: கொங்கு நாடு தனி மாநிலம் என்பது ஜாதிய அடிப்படையிலான பிரிவினை; அப்படி பிரிக்க வேண்டுமானால் இந்தியாவையே 2 ஆக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் நானும் தெருவில் இறங்கி விளையாடவா? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார்.
கொங்கு நாடு தனி மாநில விவகாரம் தொடர்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு சீமான் அளித்த பேட்டியில் கூறியதாவது:
மத்திய அரசிடம் ஏராளமான கோரிக்கைகளை நாங்கள் முன்வைக்கிறோம். ஆனால் அதை எல்லாம் மத்திய அரசு நிறைவேற்றுவதில்லை. தமிழக மக்கள் கேட்காத கொங்கு நாடு தனி மாநிலம் என்பதை நிறைவேற்ற முயற்சிக்கிறது.

ஜாதிய அடிப்படையில் பிரிவினை
பொதுவாக மாநிலங்கள் பிரிவினை என்பது மொழி, இனம், நிலம் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஜாதிய அடிப்படையில் கொங்கு நாடு என பிரிக்க முயற்சிப்பதை எப்படி ஏற்க முடியும்? அப்படியானால் இந்தியாவை 39 நாடுகளாக பிரிக்க வேண்டும்.

தேவை 4 தலைநகரங்கள்
நாங்கள் கேட்பது மாநில தலைநகரங்கள் 4 ஆக இருக்கட்டும் என்பதுதான்.. நான் சொல்வதைத்தானே ஜெகன் மோகன் ரெட்டி, மமதா பானர்ஜி பேசுகிறார்கள். உண்மையில் இந்தியாவை தென்னிந்தியா, வட இந்தியா என உலக நாடுகளின் பிரிவினையின் அடிப்படையில் பிரிக்க வேண்டும்.

பாஜகவால் ஆட்சிக்கு வர முடியாது
கொங்கு மண்டலத்தை பிரித்து தனி மாநிலமாக்கினால் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்துவிடலாம் என நினைக்கிறார்கள். தமிழகத்தில் பா.ஜ.க. தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் கூட ஆட்சிக்கு வந்துவிட முடியாது என்பதுதான் நிலைமை.
Recommended Video

தெருவில் இறங்கி விளையாடவா?
கொங்கு நாடு தனி மாநிலப் பிரிவினையை தொடங்கினால் இந்தியாவை 2 ஆக பிரியுங்கள் என நான் இறங்குவேன். எல்லோரும் பூனைக்கு மணி கட்டுவது யார் என காத்திருக்கிறார்கள்.. நான் தெருவில் இறங்கி விளையாட தொடங்கவா? இவ்வாறு சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்?












Click it and Unblock the Notifications