சீமான் போட்ட ட்வீட்.. "உரிமையுடன் அழைக்கிறேன்".. ரெடியாகும் நாம் தமிழர் கட்சி தம்பிகள்..!
பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு குருதி கொடை வழங்க அழைப்பு விடுத்துள்ளார் சீமான்
சென்னை: பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு, குருதிகொடை வழங்க, தன் தம்பிகளுக்கு உரிமையோடு அழைப்பு விடுத்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.
நாம் தமிழர் கட்சி சார்பில், பிரபாகரன் பிறந்த நாளுக்கு வருடா வருடம் தொண்டர்கள் ரத்த தானம் செய்வது வழக்கம். அவ்வாறு தானமாக அளிக்கும் ரத்தங்களை சென்னை ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரி உள்ளிட்ட இடங்களுக்கு அளிப்பார்கள்.
இப்படி ரத்த தானத்திற்காகவே நாம் தமிழர் கட்சி "குருதி கொடை பாசறை" என்ற ஒன்றை இயக்கி வருகிறது. இப்படி ஒரு பாசறை மற்ற கட்சிகளில் இருக்கிறதா, இல்லையா, அவை செயல்பாட்டில்தான் உள்ளனவா என்று தெரியாது. ஆனால் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் இதை தீவிரமாக கையில் எடுத்து செய்து வருகிறார்கள்.

ரத்த தானம்
கடந்த வருடம் ஒரு சம்பவம் நந்தது.. சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் எப்போதுமே கைவசம் இருக்கும் ரத்தம் தீர்ந்து போய்விட்டதாகவும், இதனால் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு தகவல் பரவியது.. ஸ்டாக்கில் ரத்தம் இல்லை என்றதும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் "நம் இரத்த உறவுகளைக் காக்க நம் இரத்தத்தினைக் கொடையாகத் தருவோம்" என்று குருதிக்கொடைப் பாசறை வாயிலாக நாம் தமிழர் உறவுகளுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

குருதிக்கொடை பாசறை
அதன்படி 500-க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் கடந்த 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை ரத்த தானம் அளித்திருந்தனர். இவ்வாறு குருதிக்கொடை பாசறை மூலமாக சேகரிக்கப்பட்ட 346 யூனிட் ரத்தத்தை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனைக்கு அளித்தனர். இதற்காக தான் ஆஸ்பத்திரி சீமானை மனமார பாராட்டியும் இருந்தது. இந்நிலையில் சீமான் மறுபடியும் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. அது தொடர்பான அறிக்கையும் விடுத்துள்ளார்.. பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு, குருதிகொடை அளிக்க தன் தம்பிகளுக்கு உரிமையோடு அழைப்பு விடுத்துள்ளார்.. அதன் விவரம் இதுதான்:

ட்வீட் - அறிக்கை
"தமிழ்த் தேசிய இனத்தின் முகமாக முகவரியாக விளங்கும் தன்னிகரில்லா தமிழ்த்தேசியத் தலைவர், என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளான நவம்பர் 26 அன்று, உலகெங்கும் பரவி வாழும் தாய்த்தமிழ் உறவுகள் அந்நாளைச் சிறப்பாகக் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில், நாம் தமிழர் கட்சி சார்பாகச் சிறப்பான முன்னெடுப்புகளை எப்போதும் போலத் தொடங்கியிருக்கிறோம்.

உறுதி
தலைவர் பிறந்த நாளினை தமிழர் எழுச்சி நாளாகப் போற்றி, இன விடுதலைக்குச் சூளுரைக்க உறுதியேற்கும் விதமாக, வருகின்ற 26-11-2021 வெள்ளிக்கிழமையன்று காலை 10 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதிக்குட்பட்ட செங்குன்றம் நெல் மற்றும் அரிசி மொத்த வியாபாரிகள் சங்க திருமண மாளிகையில் தமிழர் எழுச்சி நாள் விழா கொண்டாடப்படவிருக்கின்றது.

பேரிடர்
அதேபோன்று, ஒவ்வொரு ஆண்டும் நாம் தமிழர் கட்சியின் மருத்துவர் பாசறை மற்றும் குருதிக்கொடைப் பாசறை இணைந்து, தமிழகமெங்கும் முன்னெடுத்துவரும் குருதிக்கொடை வழங்கும் முகாம்களில் இவ்வாண்டும் நாம் தமிழர் கட்சியின் உறவுகள் பெருந்திரளாக உணர்வெழுச்சியுடன் பங்கேற்க வேண்டுமென அழைப்பு விடுக்கிறேன். தொற்றுநோய் பேரிடர் காலமான இக்காலத்தில் நாம் வழங்கும் குருதி, பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய மக்களின் உயிர் காக்க உதவுகிறது.

பற்றுறுதி
ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திலேயே அதிகளவில் குருதிக்கொடை தருகிற அரசியல் அமைப்பாக நாம் தமிழர் கட்சி தான் திகழ்கிறது என்பதை அங்கீகரிக்கும் விதமாக குருதிக்கொடை பெறுகின்ற தொண்டார்வ நிறுவனங்கள் நற்சான்றிதழ்கள் அளிக்கின்றன. அவ்வகையில் தமிழ்த்தேசிய இன விடுதலைக்காக, குருதி சிந்தி காத்திட்ட மாவீரர்களின் மாசற்ற தலைவனின் பிறந்த நாளில்.. மக்கள் உயிர் காக்க நம் குருதியைக் கொடையாகத் தந்து நம் இனத்தின் மீதான பற்றுறுதியை இந்த உலகத்திற்கு எடுத்துக்காட்டிட வேண்டும் என உரிமையோடு அழைக்கின்றேன்.

முகாம்
குறிப்பு: தங்கள் பகுதிகளில் குருதிக்கொடை முகாமை முன்னெடுத்து நடத்தும் பொறுப்பாளர்கள் முகாம் நடைபெறும் நாள், இடம், மாவட்டம், தொகுதி, பொறுப்பாளர் மற்றும் முகாம்களில் குருதிக்கொடை வழங்குபவர்களின் பெயர், வயது, குருதிப் பிரிவு மற்றும் தொடர்பு எண் உள்ளிட்ட தகவல்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாக தலைமை அலுவலகத்திற்குத் தெரியப்படுத்தவும்.

சான்றிதழ்கள்
குருதிக்கொடைப் பாசறை சார்பாக குருதிக்கொடையாளர்களுக்கு வழங்கவேண்டிய 'உயிர்நேய மாண்பாளர்' சான்றிதழ்களை மொத்தமாகப் பெற்றுக்கொள்ள, முகாம்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பாளர்கள் கீழ்காணும் பொறுப்பாளர்களைத் தொடர்புகொள்ளவும். சான்றிதழ்கள் உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

பொறுப்பாளர்கள்
குருதிக்கொடை சான்றிதழ் அனுப்பும் பொறுப்பாளர்கள்: சென்னை சுகுமார் - 9841186128, மணி - 8122540511, நித்தியானந்தம் - 8428862623, மேலும் தொடர்புக்கு: அரிமா மு.ப.செந்தில்நாதன் (+91-7667412345 / 8825413664) குருதிக்கொடைப் பாசறை - மாநில ஒருங்கிணைப்பாளர்.. மாவீரர் சிந்திய குருதி.. வெல்வது உறுதி" என்று அந்த அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளார்.
-
150 கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கும் விஜய்! அடித்து சொன்ன சீமான்! இதை கவனிச்சீங்களா! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம்












Click it and Unblock the Notifications